Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: Shri Shirdi Saibaba Afternoon Aarthi With Tamil Meaning Part 1  (Read 5019 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

  • Member
  • Posts: 38
  • Blessings 0
பகல் ஆரத்தி
மாத்யாந்ஹ ஆர்த்தி - பகுதி 1

ஸ்ரீ.  க்ரு. ஜா. பீஷ்மா.

கேவுனியா பஞ்சார்த்தி. கரு பாபாம்சீ ஆர்த்தீ.கரு சாயிசீ ஆர்த்தீ. கரு பாபாம்சீ ஆர்த்தீ.

ஐந்து திரி ஜ்யோதீ எடுத்து பாபாவுக்கு ஆரத்தி செய்வோம். ஸ்ரீ சாயிக்கு ஆரத்தி செய்வோம், பாபாவுக்கு ஆரத்தி செய்வோம்.

உடா உடா ஹோ பாந்தவ. ஓவாலு ஹா ரமாதவ்.சாயி ரமாதவ். ஓவாலு ஹா ரமாதவ்.

தோழர்களே எழுந்திடுவீர் எழுந்திடுவீர், ரமாதவிர்க்கு (பகவான் விஷ்ணு) ஆரத்தி செய்வோம். ஸ்ரீ சாயி ரமாதவிர்க்கு ஆரத்தி செய்வோம். சாயி தான் ரமாதவ் அவருக்கு ஆரத்தி செய்வோம்.

கருனியா ஸ்திர் மன். பாஹு கம்பீர் ஹே த்யான்.சாயிசே ஹே த்யான். பாஹு கம்பீர் ஹே த்யான்.

நமது மனதை நிலையாய் வைத்து, நாம்  எல்லோரும் ஆழ்ந்து த்யானித்து ஸ்ரீ  சாயின் உருவத்தை காண்போம், த்யானத்தில் ஆழ்ந்து ஸ்ரீ சாயின் தோற்றத்தை தரிசிப்போம். அவரை ஆழ்ந்து த்யானித்து ஸ்ரீ சாயின் உருவத்தை காண்போம்.

க்ருஷ்ணநாதா தத்சாயீ. ஜடோ சித் துஜே பாயீ.
சித் தேவா பாயீ. ஜடோ சித் துஜே பாயீ.

ஹே க்ருஷ்ணநாத் தத்சாயீ எங்கள் இந்த மனம் உங்களின் பாதங்களில் நிலையாக இருக்க வேண்டும். ஹே சாயி தேவ், எங்களின் மனம் உங்கள் பாதங்களிலே லைத்திட வேண்டும். உங்கள் பாதங்களில் நிலையாக இருக்க வேண்டும்.



ஆரத்தி சாயிபாபா - ஸ்ரீ மாதவ் ஆட்கர்


ஆரத்தி சாயீபாபா. ஸோய்க்யதாதார் ஜீவா. சரண் ரஜாதலீ. தாவா தாஸா விஸாவா, பக்தா விஸாவா.

நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி செய்வோம் அவர் அனைத்து உயிர்களுக்கும் சுகம் அருள்வாரே. ஹே பாபா, இந்த அடிமைகளுக்கு மற்றும் பக்தர்களுக்கு நீங்கள் உன்தன் பாத தூசியாக அடைகலம் தரவேண்டும். நாம் சாயீபாபாவுக்கு  ஆரத்தி …..

ஜாலூநியா அநம்க. ஸ்வஸ்வரூபீ ராஹே தங்க்.
முமுக்க்ஷு ஜனா தாவீ. நிஜ் டோலா ஸ்ரீரங்க.

ஆசை மற்றும் வருப்பம் எரித்து நீங்கள் ஆத்மதோற்றத்தில் லைத்துவிட்டீர். ஹே சாயி, முக்தியடைய வேண்டியிருப்பவர் தங்கள் கண்ணால் தங்கள் ஸ்ரீரங்க தோற்றத்தை தரிசிக்க வேண்டும், நங்கள் அவர்களுக்கு ஆத்ம நேர்காணல் தந்திடுவீர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

ஜயா மநீ ஜெய்ஸா பாவ். தயா தைஸா அநுபவ்.
தாவிஸீ தயாதனா. ஐஸீ துஜீ ஹீ பாவ்.

ஒருவருக்கு தன் மனதில் உள்ள உணர்வுக்கேற்ற அநுபவத்தை நீங்கள் அளிக்கிறீர்கள். ஹே இரக்கமுள்ள சாயி, உங்களின் தெய்வசக்தி அவ்வாறானது. நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

தும்சே நாம் த்யாதா. ஹரே ஸந்ஸூருதிவ்யாதா. அகாத் தர் கரணீ. மார்க தாவிஸீ அநாதா.

உங்கள் நாமத்தை நினைப்பு உலக சம்பந்தப்பட்ட இன்னல்களிருந்து முடிவு கிடைக்கிறது. உங்கள் செயல் மிகவும் ஆழமானது மற்றும் எல்லையற்றது. ஹே சாயி, நீங்கள் இந்த அநாதைகளுக்கு நல்வழி கண்பிப்பீர். நாம் சாயீபாபாவுக்கு
ஆரத்தி …..

கலியுகீ அவ்தார். சத்குண்ப்ரம் ஸாசர்.
அவதீர்ண ஜாலாஸே. ஸ்வாமி தத் திகம்பர்.

பரப்ரம்மா நீங்கள் தான். சகுண தோற்றத்தில் இந்த கலியுகத்தில் அவதாரம் எடுத்தார். ஹே ஸ்வாமி, நீங்கள் தான் தத்த சிவ தோற்றதில் அவதரிதவர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

ஆடாம் திவஸா குருவாரீ. பக்த்து கரிதீ வாரீ.
ப்ரபுபத் பஹாவயா. பவபை நிவாரீ.

ஒவ்வொரு வாரம் எட்டாம் நாள் வியாழக்கிழமையன்று பக்தர்கள் ஸிரடீ யாத்திரை செய்கின்றனர். மற்றும் இவ் இறப்பு பிறப்பு சுழலின் பயத்திலிருந்து களைந்த காரணத்தால் உங்கள் பாதங்களின் தரிசிக்க முடிந்தது.  நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

மாஜா நிஜத்ருவ்ய டேவா. தவ சரணரஜஸேவா.
மாகணே ஹேசி ஆதா. தும்ஜா தேவாதிதேவா.

உங்கள் பாத தூசியின் வழிபாடு தான் என் முழுவதுமான கருவூலமாக இருக்க வேண்டும். ஹே தேவாதிதேவா, இதுவே என் விருப்பம். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

இச்சித தீன் சாதக. நிர்மல் தோய நிஜசுக்.
பாஜாவேம் மாதவா யா. ஸாம்பால ஆபூலீ பாக்.

சாதகபட்சி தூய மழை நீர் சுகத்தை அனுபவிக்க வரும்புவது போல, இந்த மாதவை கூட தூய ஞயான பிக்ஷை அளித்து காபாற்ற வேண்டும், மற்றும் உங்கள் சக்தியால் அருள் பெற செய்ய வேண்டும்.


ஜய தேவ ஜய தேவ


ஜய தேவ ஜய தேவ, ஹே தத்த அவ்தூதா. ஓ சாயீ அவ்தூதா. ஜோடுநீ கர் தவ சரணீ டேவிதோ மாதா. ஜய தேவ ஜய தேவ.

ஜய தேவ ஜய தேவ ஹே தத்த யோகி, ஹே சாயீ யோகி, நான் இரு கரங்கள் குவித்து என் தலைதாழ்தி உன் பாதங்களை வணங்குகிறேன். ஜய தேவ ஜய தேவ.

அவதரஸீ து யேதா தர்மாதே கலாநீ.
நாஸ்தீகாந்நாஹீ து லாவிஸீ நிஜபாஜநீ.
தாவிஸீ நாநா லீலா அசங்க்ய ரூபாநீ.
ஹரிஸீ தீநாந்சே து சங்கட் தினரஜநீ.
ஜய தேவ ஜய தேவ…..

எப்பொழுதாயானும் தர்மத்திர்க்கு தீங்கு வளைகிறதோ நீங்கள் அவதரித்தீர்கள். ஒரு நாஸ்திகனிலும் நீங்கள் ஈடுபாட்டை விழிப்பூட்டி தங்களின் கடவுள் சிந்தனையில் கொண்டு செய்திடுவீர். நீங்கள் தான் எண்ணிலடங்கா தோற்றத்தில் விதவிதமான வியக்கும் செயல்களை காட்டுகிறீர். நீங்கள் எப்போதும் உங்கள் அனுதாபத்திற்குறிய தாழ்ந்த பக்தர்களின் இன்னலை நீக்குரீர். ஜய தேவ ஜய தேவ….

யவன்ரூபீ எக்யா தர்ஷன் த்வா தித்லே.
ஸந்ஷய நிஸ்சுநியா தத்தைவதா காலவிலே.
கோபீசந்தா மந்தா த்வாசீ உத்தரிலே.
மோமின் வந்ஷீ ஜந்மூநி லோகான் தாரியலே.

சந்த் ஏக்நாத்திர்கு (மஹராஷ்ட்ராவில் மிக சிறந்த மஹான்) நீங்கள் முஸ்லிம் தோற்றத்தில் (கவலையற்று வாழும் முசல்மான் பக்கிரி வேடத்தில்) தரிசனம் தந்து மற்றும் அவர் ஐய்யம் போக்கி, நீங்கள் அவரை நிகர்அற்ற பக்தியில் சேரக்கவும் செய்தீர். நீங்கள் தான் ராஜா கோபிசந்தையும் மற்றும் மந்தாகினியை காப்பாற்றிநீர்கள். இஸ்லாமிய பக்தர் குலத்தில் பிறந்து நீங்கள் உலகிற்கு நலம் செய்தீர். ஜய தேவ ஜய தேவ….

பேத் ந தத்வீ ஹிந்துயவநான்சா காஹீ.
தாவாயாஸீ ஜாலா புநரபி நரதேஹீ.
பாஹஸீ ப்ரமாநெ து ஹிந்து-யவநான்ஹீ.
தாவிஸீ ஆத்மத்வானே வ்யாபக் ஹா சாயீ.

நீங்கள் ஹிந்து மற்றும் இஸ்லாமிய தத்துவங்களை என்றும் எவ்வித வித்தியாசம் செய்ததில்லை. மற்றும் இதை காண்பிப்பதர்க்கு நீங்கள் மனித தோற்ற ஜன்மமெடுத்தீர், மேலும் ஹிந்து மற்றும் முஸ்லிம், அனைவருக்கும் சமமாக நெசித்தீர். மற்றும் காணசெய்தீர் ஹே சாயி உங்களின் ஆத்மதன்மை அனைவரிலும் பறவியதை. ஜய தேவ ஜய தேவ….

தேவா சாயிநாதா த்வத்பதனத வ்ஹாவே. பரமாயாமோஹித் ஜன்மோசன ஜாணி வ்ஹாவே. த்வத்க்ருபயா ஸகலாந்சே ஸங்கட் நிரஸாவே. தேஷில தாரி தே த்வதஷ க்ருஷ்ணாநே காவே.

ஹே தேவ், சாயிநாத். எங்களை உங்கள் பாதங்களில் எப்போதும் வளைத்து வைக்க வேண்டும். உலக சம்பந்தப்பட்ட மோகமாயத்தில் சிக்கியுள்ளவர்களை நீங்கள் முக்தி அளிக்க வேண்டும். உங்கள் க்ருபையால் அனைத்து இன்னலிருந்து விடிவு கிடைக்கும். நீங்கள் ஏதேனும் தர விரும்பினால் என் க்ருஷ்ணராவ் ஜா பீஷ்மாவிற்கு உங்கள் புகழ் பாடும் உணர்வு தூண்டல் அருள வேண்டும். ஜய தேவ ஜய தேவ….


ஷிரிடி மாஜே பண்டர்பூர் (அபங்க்)
சந்த கவி தாஸ்துணு



ஷிரிடி மாஜே பண்டர்பூர். சாயீபாபா ராம்வர். பாபா ராம்வர்.

ஷிரிடி என்தன் பண்டரிபுரம். சாயிபாபா தான் ராமர். பாபா தான் ராமர்.

ஷுத் பக்தி சந்த்ரபாகா. பாவ் புந்டலீக ஜாகா.

தூய பக்தி கலந்து சந்த்ரபாகா நதியின் நீரோட்டம் மற்றும் பக்தன் புண்டலீக்கின் சிரத்தை விழித்திருக்கிறது.

யா ஹோ யா ஹோ அவதே ஜன். கரா பாபாந்ஸீ வந்தன்.பாபாந்ஸீ வந்தன். கரா பாபாந்ஸீ வந்தன்.

வாருங்கள் வாருங்கள் அனைவரும் பாபாவை வணங்குவோம். சாயியை வணங்குவோம்.

குணு ம்ஹணே பாபா சாயி தாவ பாவ மாஜே ஆயீ. பாவ மாஜே ஆயீ. தாவ…….

குணுவின் வேண்டுதல் ஹே பாபா சாயி, என் தாயே ஓடிவந்து என்னை உங்கள் அடைக்கலதில் எடுத்துகொள்ளவேண்டும்.

காலீன் லோடாந்கண (நமன்) பாரம்பரியம்

காலீன் லோடாந்கண வந்தீன் சரண், டோல்யாநீ பாஹீன் ரூப் துஜே. ப்ரேமே அலிங்கன், ஆனந்தே புஜின், பாவே ஓவாலீன் ம்ஹணே நாமா.

நாம்தேவ் சொல்கிறேன், ஹே தேவா, நான் நலத்தில் படுத்து உங்கள் பாதங்களை வணங்குவேன் மற்றும் உங்கள் அழகிய தோற்றத்தை கவனத்தோடு பார்பேன். நான் ஆசையுடன் உங்களை தழுவிக் கெள்வேன், மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்து பக்தி சிரத்தையுடன் உங்களுக்கு ஆரத்தி செய்வேன்.

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்தூஸச சகா த்வமேவ. த்வமேவ விதா தரவிணம் த்வமேவ, த்வமேவ ஸர்வ மம, தேவதேவ.

என் தாயும் நீங்கள், என் தந்தையும் நீங்கள், என் உறவினரும் நீங்கள் மற்றும் என் தோழனும் நீங்கள். என் பங்கும் நீங்கள், என் சொத்தும் நீங்கள், ஹே தேவாதிதேவா, நீங்கள் தான் என் அனைத்து உடமைகளும்.

காயேந் வாசா மனஸேந்திரியைர்வா, புத்யாத்மனா வா ப்ரகுருதி ஸ்வபாவாத். கரோமி யதத்சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்ப்பயாமி.

உடல், குரல், மனம், உணர்வு, புத்தி, உள்மனம், இயற்கை, இயல்பு, இவட்ரில் எதை ஒன்றை செய்தாலும், அதை நான் ஸ்ரீ நாராயணுக்கே சமர்ப்பிக்கிறேன்.

அச்யுதம் கேஷவம் ராமநாராயணம் க்ருஷ்ணதாமோதரம் வாசுதேவம் ஹரிம். ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம், ஜானகிநாயகம் ராமசந்த்ரம் பஜே.

ஸ்ரீ சாயி, அந்த அச்சுதன், கேஸவன், ராமன், நாராயணன், க்ருஷ்ணன், தாமேதரன், வாசுதேவன், ஹரி,  ஸ்ரீ தரன், மாதவன், கோபிகாவல்லபன், ஜானகி நாயகன் ராமசந்திரன், ஆவர்களை நான் ஜபிக்கிரேன்.



நாமஸ்ஸமரணம் - (பாரம்பரியம்)



ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே.
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.

தூய ப்ரம்மனே ராமன், தூய ப்ரம்மனே ராமன், ராமனே தூய ப்ரம்மன், தூய ப்ரம்மனே க்ருஷ்ணன், தூய ப்ரம்மனே க்ருஷ்ணன், க்ருஷ்ணனே தூய ப்ரம்மண்.  ஸ்ரீ  குருதேவ தத்தா.

                                                  பகுதி 2 அடுத்த பதிவில்....

 


Facebook Comments