DwarkaMai - Sai Baba Forum

Indian Spirituality => Bhajan Lyrics Collection => Topic started by: trmadhavan on October 20, 2018, 06:59:26 AM

Title: Shri Shirdi Saibaba Evening Aarthi With Tamil Meaning Part 1
Post by: trmadhavan on October 20, 2018, 06:59:26 AM
மாலை ஆரத்தி.
தூப் ஆர்த்தி - பகுதி 1

ஆரத்தி சாயிபாபா - ஸ்ரீ மாதவ் ஆட்கர்

ஆரத்தி சாயீபாபா. ஸோய்க்யதாதார் ஜீவா. சரண் ரஜாதலீ. தாவா தாஸா விஸாவா, பக்தா விஸாவா.

நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி செய்வோம் அவர் அனைத்து உயிர்களுக்கும் சுகம் அருள்வாரே. ஹே பாபா, இந்த அடிமைகளுக்கு மற்றும் பக்தர்களுக்கு நீங்கள் உன்தன் பாத தூசியாக அடைகலம் தரவேண்டும். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

ஜாலூநியா அநம்க. ஸ்வஸ்வரூபீ ராஹே தங்க். முமுக்க்ஷு ஜனா தாவீ. நிஜ் டோலா ஸ்ரீரங்க.

ஆசை மற்றும் வருப்பம் எரித்து நீங்கள் ஆத்மதோற்றத்தில் லைத்துவிட்டீர். ஹே சாயி, முக்தியடைய வேண்டியிருப்பவர் தங்கள் கண்ணால் தங்கள் ஸ்ரீரங்க தோற்றத்தை தரிசிக்க வேண்டும், நங்கள் அவர்களுக்கு ஆத்ம நேர்காணல் தந்திடுவீர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

ஜயா மநீ ஜெய்ஸா பாவ். தயா தைஸா அநுபவ். தாவிஸீ தயாதனா. ஐஸீ துஜீ ஹீ பாவ்.

ஒருவருக்கு தன் மனதில் உள்ள உணர்வை ஏற்ற அநுபவத்தை நீங்கள் அளிக்கிறீர்கள். ஹே இரக்கமுள்ள சாயி, உங்களின் தெய்வசக்தி அவ்வாறானது. நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

தும்சே நாம் த்யாதா. ஹரே ஸந்ஸூருதிவ்யாதா. அகாத் தர் கரணீ. மார்க தாவிஸீ அநாதா.

உங்கள் நாமத்தை நினைப்பு உலக சம்பந்தப்பட்ட இன்னல்களிருந்து முடிவு கிடைக்கிறது. உங்கள் செயல் மிகவும் ஆழமானது மற்றும் எல்லையற்றது. ஹே சாயி, நீங்கள் இந்த அநாதைகளுக்கு நல்வழி கண்பிப்பீர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

கலியுகீ அவ்தார். சத்குண்ப்ரம் ஸாசர். அவதீர்ண ஜாலாஸே. ஸ்வாமி தத் திகம்பர்.

பரப்ரம்மா நீங்கள் தான். சகுண தோற்றத்தில் இந்த கலியுகத்தில் அவதாரம் எடுத்தார். ஹே ஸ்வாமி, நீங்கள் தான் தத்த சிவ தோற்றதில் அவதரிதவர். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

ஆடாம் திவஸா குருவாரீ. பக்த்து கரிதீ வாரீ. ப்ரபுபத் பஹாவயா. பவபை நிவாரீ.

ஒவ்வொரு வாரம் எட்டாம் நாள் வியாழக்கிழமையன்று பக்தர்கள் ஸிரடீ யாத்திரை செய்கின்றனர். மற்றும் இவ் இறப்பு பிறப்பு சுழலின் பயத்திலிருந்து களைந்த காரணத்தால் உங்கள் பாதங்களின் தரிசிக்க முடிந்தது.  நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

மாஜா நிஜத்ருவ்ய டேவா. தவ சரணரஜஸேவா. மாகணே ஹேசி ஆதா. தும்ஜா தேவாதிதேவா.

உங்கள் பாத தூசியின் வழிபாடு தான் என் முழுவதுமான கருவூலமாக இருக்க வேண்டும். ஹே தேவாதிதேவா, இதுவே என் விருப்பம். நாம் சாயீபாபாவுக்கு ஆரத்தி …..

இச்சித தீன் சாதக. நிர்மல் தோய நிஜசுக். பாஜாவேம் மாதவா யா. ஸாம்பால ஆபூலீ பாக்.

சாதகபட்சி தூய மழை நீர் சுகத்தை அனுபவிக்க வரும்புவது போல, இந்த மாதவை கூட தூய ஞயான பிக்ஷை அளித்து காபாற்ற வேண்டும், மற்றும் உங்கள் சக்தியால் அருள் பெற செய்ய வேண்டும்.


ஷிரிடி மாஜே பண்டர்பூர் (அபங்க்)
சந்த கவி தாஸ்துணு


ஷிரிடி மாஜே பண்டர்பூர். சாயீபாபா ராம்வர். பாபா ராம்வர்.

ஷிரிடி என்தன் பண்டரிபுரம். சாயிபாபா தான் ராமர். பாபா தான் ராமர்.

ஷுத் பக்தி சந்த்ரபாகா. பாவ் புந்டலீக ஜாகா.

தூய பக்தி கலந்து சந்த்ரபாகா நதியின் நீரோட்டம் மற்றும் பக்தன் புண்டலீக்கின் சிரத்தை விழித்திருக்கிறது.

யா ஹோ யா ஹோ அவதே ஜன். கரா பாபாந்ஸீ வந்தன். பாபாந்ஸீ வந்தன். கரா பாபாந்ஸீ வந்தன்.

வாருங்கள் வாருங்கள் அனைவரும் பாபாவை வணங்குவோம். சாயியை வணங்குவோம்.

குணு ம்ஹணே பாபா சாயி தாவ பாவ மாஜே ஆயீ. பாவ மாஜே ஆயீ. தாவ…….

குணுவின் வேண்டுதல் ஹே பாபா சாயி, என் தாயே ஓடிவந்து என்னை உங்கள் அடைக்கலதில் எடுத்துகொள்ளவேண்டும்.


காலீன் லோடாந்கண (நமன்) பாரம்பரியம்


காலீன் லோடாந்கண வந்தீன் சரண், டோல்யாநீ பாஹீன் ரூப் துஜே. ப்ரேமே அலிங்கன், ஆனந்தே புஜின், பாவே ஓவாலீன் ம்ஹணே நாமா.

நாம்தேவ் சொல்கிறேன், ஹே தேவா, நான் நலத்தில் படுத்து உங்கள் பாதங்களை வணங்குவேன் மற்றும் உங்கள் அழகிய தோற்றத்தை கவனத்தோடு பார்பேன். நான் ஆசையுடன் உங்களை தழுவிக் கெள்வேன், மகிழ்ச்சியுடன் ஆராதனை செய்து பக்தி சிரத்தையுடன் உங்களுக்கு ஆரத்தி செய்வேன்.

த்வமேவ மாதா ச பிதா த்வமேவ, த்வமேவ பந்தூஸச சகா த்வமேவ. த்வமேவ விதா தரவிணம் த்வமேவ, த்வமேவ ஸர்வ மம, தேவதேவ.

என் தாயும் நீங்கள், என் தந்தையும் நீங்கள், என் உறவினரும் நீங்கள் மற்றும் என் தோழனும் நீங்கள். என் பங்கும் நீங்கள், என் சொத்தும் நீங்கள், ஹே தேவாதிதேவா, நீங்கள் தான் என் அனைத்து உடமைகளும்.

காயேந் வாசா மனஸேந்திரியைர்வா, புத்யாத்மனா வா ப்ரகுருதி ஸ்வபாவாத். கரோமி யதத்சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்ப்பயாமி.

உடல், குரல், மனம், உணர்வு, புத்தி, உள்மனம், இயற்கை, இயல்பு, இவட்ரில் எதை ஒன்றை செய்தாலும், அதை நான் ஸ்ரீ நாராயணுக்கே சமர்ப்பிக்கிறேன்.

அச்யுதம் கேஷவம் ராமநாராயணம் க்ருஷ்ணதாமோதரம் வாசுதேவம் ஹரிம். ஸ்ரீதரம் மாதவம் கோபிகாவல்லபம், ஜானகிநாயகம் ராமசந்த்ரம் பஜே.

ஸ்ரீ சாயி, அந்த அச்சுதன், கேஸவன், ராமன், நாராயணன், க்ருஷ்ணன், தாமேதரன், வாசுதேவன், ஹரி,  ஸ்ரீ தரன், மாதவன், கோபிகாவல்லபன், ஜானகி நாயகன் ராமசந்திரன், ஆவர்களை நான் ஜபிக்கிரேன்.


நாமஸ்ஸமரணம் - (பாரம்பரியம்)


ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே. ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே.

தூய ப்ரம்மனே ராமன், தூய ப்ரம்மனே ராமன், ராமனே தூய ப்ரம்மன், தூய ப்ரம்மனே க்ருஷ்ணன், தூய ப்ரம்மனே க்ருஷ்ணன், க்ருஷ்ணனே தூய ப்ரம்மண்.  ஸ்ரீ  குருதேவ தத்தா.

நமஸ்காராஷ்டக் -  ஸ்ரீ மோஹினீராஜ்

அநந்தா துலா தே கஸே ரே ஸ்தவாவே. அநந்தா துலா தே கஸே ரே நமாவே. அநந்தா முகாந்சா ஷிணே ஷேஷ் காதாந். நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

நீங்களோ முடிவில்லாதவர், நான் உங்கள் துதி எப்படி பாடுவேன்? நீங்களோ முடிவில்லாதவர், நான் உங்களுக்கு எப்படி வணங்குவேன்? ஆயிரம் தலை கொண்ட சேஷநாகமும் உங்கள் மஹிமையை பாடி கொண்டே களைத்து விடுகின்றனர். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே. உராவே தரீ பக்திசாடீ ஸ்வபாவே. தராவே ஜகா தாரூநீ மாயதாதா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

என் மனம் எப்போதும் உங்கள் பாத துதி செய்ய வேண்டும், இருந்தும் என் இயல்பில் சிறிது மிச்சமிருக்க செய்தால் அது உங்கள பக்திக்கு மட்டுமே இருக்க. நீங்கள் தான் எங்கள் பெற்றோரையும் சேர்த்து எங்களையும் மற்றும் இந்த உலகையும் காப்பாற்ற வேண்டும். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

வசே ஜோ ஸதா தாவயா ஸந்லீலா. திசே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாந்லா. பரீ அந்தரீ க்ஞான் கைவல்யதாதா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

எவனொருவன் இந்த உலகிலுள்ளவர்க்கு துறவிகளின் வியப்பக்குரிய செயல்களை காட்ட வசிக்கின்றனர். அறிவில்லாதவர்களை சாதாரண மனிதர்கள் நடத்தை தெரிகிறது, இருந்தும் உள்ளிருந்து அவர்கள் ஞானம் மற்றும் முழுமையான தூய்மையை தருபவர்கள். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

பரா லாதலா ஜன்ம ஹா மானவாசா. நரா ஸாதர்கா ஸாதநீபூத ஸாசா. தரூ சாயிப்ரேமே களாயா அஹம்தா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

எங்களுக்கு இந்த மனித பிறப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமே. மனிதன் மட்டும் தான் முக்தி கிடைக்க வழிபாடு செய்வார். நாங்கள் சாயி பாசத்தை உறுதியாக எங்கள் மனதில் வைத்து கர்வத்தை நம்மிடமிருந்து போக்கிடுவோம். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.
 
தராவே கரீ ஸான் அல்பக்ஞ பாலா. கராவே ஆம்ஹாந் தன்ய சும்போநீ காலா. முகீ கால ப்ரேமே கரா க்ராஸ ஆதா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

ஹே தேவா, இந்த அப்பாவி பிள்ளைகளை கை கொடுத்து எங்களை பாதுகாக்க வேண்டும். எங்கள் கன்னத்தில் முத்தமிட்டு எம்மை பாக்கியசாலி ஆக்கிடுவீர். எங்கள் வாயில் உங்கள் அன்பை மட்டும் ஊட்டிடுவீர். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

ஸுராதீக ஜ்யாந்சயா பதா வந்திதாதீ. ஸுகாதீக ஜ்யாதே ஸமாநத்வ தேதீ. ப்ரயாகாதி தீர்தேபதீ நம்ர ஹோதா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

தேவர்கள் முனிவர்கள் முதல் பாதகளை வணங்குகின்றனர் மற்றும் வியாசர் மகன் முதல் உமக்கு உரிய மரியாதை செலுத்தினர். ப்ரயாக் புனிதத்தலம் முதல் உங்கள் பாதகளை பணிகின்றன. ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ. ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிளாலீ. கரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

கோபிகைகள் உங்கள் பாதங்களை கண்டதும் மயங்கி தன் மனத்திரையில் உருவத்துடன் மூழ்கிவிடுகின்றனர். பறகு அனைவரும் க்ருஷ்ணநாதுடன் விளையாடுகின்றனர். அவ்வாறே ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

துலா மாகதோ மாகணே ஏக் தாவே. கரா ஜோடிதோ தீன் அத்யந்த பாவே. பாவீ மோஹநிராஜ ஹா தாரீ ஆதா. நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

நான் மிக அதிகமான மத பாவத்தில் கை குவித்து உங்களிடம் மட்டும் ஒன்றேஒன்று வேண்டிகொள்கிறேன் மோஹினீராஜிற்க்கு இப்போது இந்த உலகத்திலிருந்து விடுதலை தருவீர். ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

மாலை ஆரத்தி பகுதி 2 அடுத்த பதிவில்