Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018

Author Topic: Shri Shirdi Saibaba Keerthi Malai - Aarthi - Tamil  (Read 4232 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

 • Member
 • Posts: 37
 • Blessings 0
Shri Shirdi Saibaba Keerthi Malai - Aarthi - Tamil
« on: October 19, 2018, 05:45:21 AM »
 • Publish
 • "ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திர கீர்த்தி மாலை"

  முன்னுரை

  இந்த "ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திர கீர்த்தி மாலை" நான் அரிந்த தமிழில் எடுத்து ஒரு முயற்சி. எனது பெற்றோர்கள் (late) ஸ்ரீமதி - ஸ்ரீ ஜானகி பாரத்தசாரதி, ஸ்ரீ ஷிர்டி சத்குரு சாயீநாத் மஹா சமாதி நூறாவது வருடத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயின் பாதத்தில் மற்றும் அவரின் பக்தர்களுக்கு எனது இந்த கவிதை தொகுப்பு சமர்ப்பணம்.  இந்த கவிதை தொகுப்பில் பிழைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.     
  Written by: TR. Madhavan,
  2-4-46/P/A/20, Palace A, Happy Homes,
  Hyderabad - 500048. Ph: 9246113116
  Email: trmadhavan@hotmail.com
  ★★★★★★★★★★★★★★★★★★
  ஸ்ரீ பாண்டுரங்கா அருள் புரிவாய்
  சத்சரித்தை நாங்கள் பாட குரல் வளம் தருவாய்.
  ஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஓம்
  ஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ  சாயி ஓம்.
  ஸ்ரீ சாயி ஸ்ரீ தத்தகுரு உருவானவன்
  ஸ்ரீ பத் ஸ்ரீ வல்லப் போல் அன்பார்ந்தவன்.  1
  நரசிம்ம சரஸ்வதி வரம் பெற்றவன்
  அனைத்து மதங்களுக்கும் நீ ஆசான்.  2
  பக்தர்களின் மனங்கவர்ந்தவன்
  இயந்திரத்தை ஸ்ரீ சக்ரமாய் சுற்றிய கிரிதரன்.  3
  ஹேமாபந்தனுக்கு கிருபை அருளினாய்
  சத்சரிதத்தை நீயே அவனுக்கு கூறினாய்.  4
  குதிரை இருக்குமிடம் ஜாடை காட்டினாய்
  சாந்து பாட்டில் உன்னை அல்லாவாக மதித்தான்.  5
  பக்தன் மஹால்ஸா உன் வருகையை கண்டதும்
  ஆனந்த்தில் வருக சாயி என்றழைத்நதும்.  6
  அந்த பெயர் நிலையானது என்னென்றும்
  வரமளிக்கும் உன்தன் திருநாமமானதே அனைவருக்கும்.  7
  கலியுகத்தில் உனது நிகர் வேறொருவரில்லையே
  முடியாததை முடித்து வைக்கும் திறனுடையவனே.  8
  வேப்பமர நிழல் கீழ்தான் உன் குருஸ்தானமானது
  கெல்கர் நிலைநிருத்தினார் உன்தன் பாதுகையை அங்கு.  9
  கங்கை யமுனை மேலெழுந்தது உன் பாதமருகிலிருந்து
  தாஸ்கணு ஜபித்ததால் பொங்கி வழிந்தோடியது.  10
  நீர் விட்டு தீபம் நீ ஏற்றி வைத்தாய்
  அதன் ஒளி வீச்சு முலம் அனைவிரின் அறியாமை போக்கினாய்.  11
  மத பேதமில்லை உன்னிடத்தில்
  ராம் ரஹீம் ஒருவரே என பதிய வைத்தாய் மனதில்.  12
  ஸ்ரீ ராம நவமி நன்னாளன்று
  சந்திரோஸ்சவம் நடத்தினாய் நீ நின்று.  13
  உனது கைகள் காயமடைந்தது துணியினாலே
  நெருப்பில் விழயிருந்த சிறு பிள்ளையை காப்பாற்றுகையிலே.  14
  எங்களின் பாபகர்மாக்களை போக்க அவதரித்தவனே
  தினமும் வீடுவீடாக பிச்சாடனம் வாங்கி உண்பவனே.  15
  பைஜா பரமாத்மா என உன்னை மதித்தாளே
  மகிழ்த நீ அவளுக்கு நன்நிலை அளித்தாயே.  16
  உயிரினங்களில் வசிப்பவனே
  நாய் உருவத்தில் ரோட்டியை அருந்தியவனே.  17
  உன் உறங்குதல் பார்கையில் சேஷசயனனை நினைவூட்டினாய்
  மனம்கவர் காட்சியளித்து எங்களை மகிழ்வித்தாய்.  18
  மேகநாதன் உன் சொல் வேதவாக்கென மதித்தானே
  அக்னி தேவனும் உன்னை மதித்து வாக்களித்தானே.  19
  பஞ்ச தத்துவம் கொண்ட அவதாரமே
  உன்னை போல் வேறொருவரில்லை இப்பூவியிலே.  20
  மூலே சாஸ்திரி உன்னில் தன் குருவை கண்டான்
  மதிப்பிற்குரிய உனக்கு குரு தட்சிணம் தன்தான்.  21
  வைத்தியன் தாமா உனை முஸ்லிம் என நினைத்தான்
  உன்னில் ராமனை கண்டதும் உனக்கு வைத்தியம் செய்தான்.  22
  பீமாஜீன் நோயை கண்டேடுத்தாய்
  அவனை குணமாக்கி அந்த வேதனையை போக்கினாய்.  23
  சீனி தின்பதை விட்டு விட்ட சோல்கர்
  உனை காணவந்தவனுக்கு தந்தாய் கல்கண்டு.  24
  பரஞாணம் பரப்பரம்மாவே
  பக்த்தர்களின் பயம் போக்கும் சத்குருவே.  25
  குருசரித்திரம் வாசித்த சாதேவின்
  கனவில் தோன்றிய உன்னிடம் நல்லாசி பெற்றான்.  26
  மனதில் சந்தேகம் புகா சந்தோஷம் புக செய்பவன
  எங்களிடம்  நீ கேட்கும் காணிக்கை நம்பிக்கையும் பொருமையும்  தான்.  27
  பக்தகோடி வணங்கும் தங்கமான இதயம் உள்ளவன்
  ஆவணியில் உன் நாமம் ஜபித்து வருவோம் தருவாய்  நீ தரிசனம்.  28
  பாபாவின் கட்டளை ப்ரம்ம வாக்கென தாஸ்கணு மதித்து
  காகாஜியை காணச்சென்றர் அவரது இல்லத்துக்கு.  29
  வேலைக்காரியின் பாடலில் வேதாந்தத்தை கேட்டு
  பக்தனின் சந்தேகத்தை தீர்த்தாய் சத்திரம் வரைந்து.  30
  த்வாரகாமாயின் மடியிலே யார் அமர்ந்தலும்
  விரைவில் தீர்தாய் நீ அவர் பிரச்சினை எதுவாயினும்.  31
  பாம்பு கடித்ததால் ஓடி வந்தான் சாமா உன்னிடத்தில்
  உயிர் பிழைத்தான் சாமா உன் சொல் மந்திரமானதில்.  32
  தீக்ஷிதுலுவிடம் வெள்ளாட்டை பலியிட சொன்னாய்
  உன் கட்டளைக்கிங்கி அந்த பிராம்மணன் பலியிட முன் வந்தான்.  33
  ஸர்வம் நீயே என சரணடைந்தோர்க்கு
  துணை இருந்தாய் ஆத்ம பலமாக அவர்களுக்கு.  34
  குழந்தை பாக்கியம் வேண்டி வந்தோருக்கு
  அந்த பாக்கியம் அடைய அருளினாய் சாயம்மா அவருக்கு.  35
  வலிப்பு நோய் பாதிப்பில் பிட்தலேயின் பள்ளை சோர்ந்திருக்க
  குணமடைந்தான் உன் கனிவான பார்வை மூலமாக.  36
  மூன்று நாணயங்கள் பரிசளித்தாய் பட்கேவிற்க்கு
  ஸ்வாமி சமர்த் என அவனை அன்புடன் அழைத்தாய் புது பெயரிட்டு.  37
  வேதங்களின் சாரமென்றாய் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை
  எடுத்துரைத்தாய் சாமாவிற்க்கு அதன் சிறப்பை.  38
  குரு சிஷ்யரிடையே நெருங்கிய சம்பந்த உதாரணத்துக்கு
  கார்படே மனைவியின் சேவையை மெச்சி காடினாய் பக்தர்களுக்கு.  39
  தெற்க்கத்திய மங்கை உன்னை தினமும் மனனம் செய்து வந்தாள்
  நீ கல்யாண ராமன் தோற்றதில் காட்சி தந்ததில் மகிழ்ச்சி அடைந்தாள்.  40
  சப்த ஷிங்கேரி ப்ரார்த்தனையை நிறைவேற்ற சாமா
  உன் கட்டளையென்று மதித்து வாணிபுரம் வந்தான்.  41
  அங்கு வைத்தியன் தான் ஷீர்டியில் இருப்பதாக நினைத்து
  தன் கதையை சாமாவிற்க்கு கூறினான்.  42
  சந்நியாசிகள் உன்னிடம் சரணடைந்து மோக்ஷத்தை போந்தினர்
  மால்கர் நூல்கர் இருவருக்கும் உன் அருள் கிடைக்க மோக்ஷம்
  அடைந்தனர்.   43
  படித்தவனுக்கும் பாமரனுக்கும்
  சத்குரு பாதமே சரணம் சரணம்.  44
  குரு சேவை செய்து நீ குபரனானாய்.
  மார்கன் நீ எங்கள் கவலைகளை மறந்திட செய்தாய்.  45
  வண்டியில் ஓட்டுநராய் வந்து ராமகிரி அம்மாவை
  ஜுமேர் கொண்டு சேர்த்தாய் அந்த பெண்மணியை.  46
  பிரசவ வேதனையிலிருந்த மைனா அம்மையின்
  வுதி ஆரத்தி மூலம் வேதனை போக்கினாய் அந்த அம்மையின்.  47
  சத்யம் நித்யம் வுதியே என்றாய் நீ
  சகல நோயயை போக்கும் மருந்தேன நிருபித்தாய் நீ.  48
  பகுத்தறிவு அளித்தாய் உன் வுதி மூலம்
  காணிக்கை அளித்தோம் பற்றற்றத்தன்மை கிடைத்தது உன் மூலம்.  49
  வலது இடது பக்கம் உன்னுடன் மக்ஹால்ஸா தாத்தியா நடந்தனர்
  நிறமூட்டபட்ட குடையேந்தி உன் பக்கத்தில் நிமோண்கரும் நடந்தார்.  50
  பாபா ஸாஹேப் உன் பாதங்களை அலம்புகையில்
  அவர் ஆரத்தி உனக்கு ஆரத்தி செய்கையில்.  51
  ஜகன்நாதனை போல காட்சி தந்தாய்
  பார்த்த பக்தர்களெல்லாம் ஜெயகார கோஷம் எழுப்ப வைத்தாய்.  52
  கண்கொள்ளா காட்சி உன்தன் சாவடி விழா கோலம்
  ஆதிஷேஷனாலும் வர்ணிக்க இயலவில்லை கண்ட கோலாகலம்.   53
  கையினால் கொதிக்கும் நீரில் அரிசியை களைந்து சமைப்பது
  அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கியது.  54
  நீ சமைத்த உணவு வகைகளை அமிர்தமாய் ருசித்தது
  அதிர்ஷ்ட்சாலிகளுக்கே அந்த சமையல் உண்ண கிடைத்தது.   55
  கிருஷ்ணன் அனைத்தும் அறிவான் கீதையை சொன்னவன்
  பரி ப்பரஷ்னாவின் அர்த்தத்தை நாநாவுக்கு புரியவைத்தது நீதான்.  56
  நீ அறியாத பாஷை ஏதுமில்லை
  இல்லங்களில் வாழும் தத்துவ ஞானியே.  57
  தன் ஊருக்கு வரவேண்டும் என தேவு கேட்டு கொண்டான்
  சந்நியாசி வேடத்தில் நீ அவனில்லம் சென்று விருந்து அருந்தி வாழ்த்தினாய்.  58

  ஞானேஷ்வரி பாராயணம் செய்ய தேவு நினைத்தான்
  அது நன்று நடக்க அவன் கனவில் தோன்றி வாழ்த்தினாய்.  59
  புரிவதில்லை எங்களுக்கு உன் விந்தைகள்
  புனிதனே தெய்வ தன்மை கொண்ட ஷீர்டி நாதனே.  60
  சொர்க்கத்திலிருந்து வந்தாய் இந்த பூவியில் நீ
  அவலநிலை உள்ளவரை காப்பாற்ற அவதரித்தாய் நீ.  61
  அனைத்தும் நீ என சரணாகதி ஆனவர்களுக்கு
  மூக்தி மார்க்கம் காட்டுபவன் நீ அவர்களுக்கு.  62
  தெய்வமென பூஜித்த லக்ஷ்மி பாயி பெண்மணிக்கு
  ஆனந்தமடைந்து மூன்று நாணயங்கள் பரிசு கொடுத்தாய் அவளுக்கு.  63
  இது ஒன்பது வகை பக்தியின் உவமானம் கூறினாய் அவளுக்கு
  சோதித்த பின்தான் முக்தி அடய இயலும் என்றாய் அவளுக்கு.  64
  பூடி கட்டிய கோயில் உனது தானெறு
  பையாஜியன் மடியில் விழுந்தாய் சுருண்டு.  65
  அது விஜயதசமி நன்னாளன்று
  சாயிபாபா நீ சமாதி அடைந்து அன்று.  66
  பாலகோபாலா உன் மரண செய்தி அறிந்து
  ஓடோடி வந்தனர் உன் புனித உடலை காண்பதற்கு.  67
  நீயில்லா இந்த வாழ்க்கை எதற்கென்று அழுதனர் சிலர்
  உன்னோடு எனை அழைத்து செல்லென அழுதனர் சிலர்.  68
  ஆனைவருக்கும் பகல் இரவு போல் தோன்றியது
  சோகத்தில் ஷீர்டி கிராமம் மூழ்கி இருந்தது.  69
  தாஸ்கணு கனவில் தோன்றி
  பூக்காளால் பூஜிக்க கேட்டு கொண்டாய்.   70
  ஆரத்தியை நிறுத்திவிட்ட ஜோஷி முன் தோன்றி
  ஆரத்தியை நிறுத்தாமல் தொடர்ந்து செய்ய சொன்னாய்.  71
  பாலா ஸாஹேப் பாத்டே உபாசனி அனைவரும்
  உன் இறுதி சடங்குகளை நிறைவேற்றினர்.  72
  சமாதியிலுருந்தே அனைத்தும் நடத்தி வருகிறாய்
  நித்திய சத்திய சரஞ்சீவி அனைத்து நல்லிதயங்களில் வாழ்கிறாய்.  73
  ஷீர்டி காலடி வைத்தால் துயரங்கள் நீங்கும் என்றாய்
  ஒவ்வொரு இடத்திலும் நீ இருப்பதை நிரூபித்தாய்.  74
  காகாஜி சொல்ல கேட்ட நவநாத சரித்திரத்தில்
  சந்தேகம் எழ ஆதை தீக்ஷித் சாமாவிடம் சொன்னார்.  75
  அதை கேட்டு சாமா அவரிடம்
  ஸ்ரீ சாயி நாமமே ஸ்ரீஹரி நாமமென என சாமா தந்தான் விளக்கம்.  76
  அதிருப்தியில் இருந்த தீக்ஷித்தின் நலை கண்டு
  நீ பட்க்கே மூலம் அவர் சந்தேகத்தை நிவர்த்தி செய்தாய்.  77
  காசி யாத்திரை போவதை சாமா உன்னிடம் சொல்ல
  அவனை கயாவில் வரவேற்க காத்திருப்பேன் என்றாய்.  78
  தீக்ஷிதை உன்னிடம் வந்தது அதிசயமே
  அவன் நொண்டி தனத்தை நீக்கி நல் மனம் தந்தாய்.   79
  அவனுக்கு வாக்களித்து நீ
  அவனை உன்னிடம் அழைத்து கொண்டாய் நீ.  80
  அனைத்து தேவர்களின் திருஉருவம் நீ
  தூய ஆத்மா ஞான ஜோதி நீ.  81
  உன் நாம ஸ்மரணமே துக்க சாகரத்தை கடக்க செய்யும்
  குணாதிசயங்களை சொன்னாலே அனைவரின் வாழ்க்கையில் மங்களம் நடக்கும்.  82
  உன் சத்சரித்ர பாராயணம் செய்தால் சகல ஸௌபாக்கியம் கிடைக்கும்
  குரு சரித்திர நாம ஜபம் ஆயுள் ஆரோக்கியமளிக்கும்.  83
  சாயி உன் அனைத்து பக்தர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க அருள்வாய்
  இந்த திவ்ய சத்சரித்ர கீர்த்தனை சாயி சதகுருதேவா உனது பிரசாதம்.  84
  ஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஓம்
  ஓம் சாயி ஓம் சாயி ஸ்ரீ  சாயி ஓம்.
  ***************
  ஆரதி ஸ்ரீ சாயி குருவிற்கு
  எப்போதும் பரமானந்தத்திலிருக்கும் தேவனுக்கு.
  கருணை மிகுந்த இன்பமளிப்பவன்,
  துக்கம், சோகம், சங்கடம், பயம் போக்குபவன்.
  ஷீர்டியில் அவதரித்தான்,
  அற்புதமாக தத்வங்களை போதித்தான்.
  அவர் திருவடியில் பக்தன் தன்னை அர்ப்பணித்ததும்,
  அவனுக்கு நிரந்தர சுகசாந்தி கிடைத்திடும்.
  மனதில் எண்ணம் எவ்விதம் தோன்றுகிறதோ,
  அனுபவங்கள் இருக்கும் அது போலவே.
  குருவின் ஊதி உடம்பில் இட்டு கொண்டால்,
  ஐயம் போக்கிடும் அந்த மனதில்.
  சாயி நாமம் எப்போதும் சொல்லிகொண்டிருப்பவர்,
  அனைத்து பலன் நிரந்தரமாக பெருவர்.
  வியாழக்கிழமை செய்வீர் பூஜை சேவை,
  குருதேவர் அருளுவார் கிருபை.
  ராம, கிருஷ்ண, அனுமன் உருவத்தில்,
  காட்சியளிக்க தோன்றும் நன் மனதில்.
  பிற மத சேவகர்களும் வருவர்,
  வணங்கி விரும்பிய பலன் அடைதனர்.
  ஜெய் சொல்வோம் சாயி பாபாவுக்கு,
  ஜெய் சொல்வோம் குருயோகிக்கு.
  சாயிதாஸன் ஆரதி பாடுவோம்,
  வீட்டில் சுகமும் மங்களமும் அருள பெருவோம்.
  ஆரதி ஸ்ரீ சாயி குருவிற்கு
  எப்போதும் பரமானந்தத்திலிருக்கும் தேவனுக்கு.

   


  Facebook Comments