Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018

Author Topic: Shri Shirdi Saibaba Morning Aarthi With Tamil Meaning Part 1  (Read 3823 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

  • Member
  • Posts: 37
  • Blessings 0
ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா ஆரத்திகள்
(தமிழ் அர்த்தத்துடன்)

ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா ஆரத்திகள் மூல ஆரத்தி வரிகளின் அர்த்தத்தை
நான் அறிந்த தமிழில் எடுத்த ஒரு முதல் முயற்சி.

அர்த்தங்களுடனான இந்த பதிவை ஸ்ரீ ஷிர்டி சத்குரு சாயீநாத் மஹா சமாதி நூறாவது வருடத்தில் ஸ்ரீ ஷிர்டி சாயின் பாதத்தில் மற்றும் அவரின் பக்தர்களுக்கு எனது இந்த உரை மொழிபெயர்ப்பு சமர்ப்பணம்.  இந்த மொழிபெயர்ப்பில் பிழைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.   
டிஆர். மாதவன், ஹைதராபாத்.


விடியற்காலை ஆரத்தி.
(காக்கட் ஆரத்தி) - பகுதி 1

ஜோடுனிய கர் - சந்த் துக்காராம்


ஜோடுநியா கர் சர்ணீ டேயிலா மாதா பரிஸாவி வினந்தி மாஜீ சத்குரு நாதா.

நான் கைகளை கூப்பி வேண்டி  உந்தன் பாதங்களுக்கு தலை வணஙகுகிறேன்.ஹே சத்குருநாதா என் பிராத்தனைய கேட்பாயே.

அசோ நாசோ பாவ் ஆலோ துஜிய தாய க்ரிபா திருஷ்டி சங்கோச்தாவ் தொடாசா தேயி.     

என்னில் உணர்வு உள்ளதோயில்லையோ,உன்னிடத்தில் சரணடைத்தேன்,சத்குருவே கருணை பார்வையால் என்னை பார்ப்பாயே.

அகண்டித்த அசாவே யசெ வாத்தே பாயே சாமுதுநிசங்கோச் டாவ் தொடச்சா தேயே.

எப்பொழுதும் உன் பாதமடியில் இருக்கவே எனது வேண்டுதல் நீர் தயக்கமில்லாமல் உன் பாதமருகே சிறு இடம் தருவாயே.

துகா ம்ஹனே தேவா மாஜி வேடிவாக்குடி நாமே பாவ்பாஷா ஹாதி ஆபுயில்யா தோடி.   

துகா சொல்கிறேன், நான் எந்தொரு பொருத்தமில்லா உருவத்தில் உனை கூப்பிட்டால், ஹே தேவனே உன் கைகளால் உலகசம்பந்த பந்தங்களை உடைத்தெரியவேண்டும்.


உட்டா பாண்டுரங்கா  - சந்த் ஜனாபாய்

உட்டா பாண்டுரங்கா ஆதா ப்ரபாத் சமயோ பாதலா. வைஷ்ணவாந்ச மேலா கருட்பாரீ தாட்லா.                     

ஹே பாண்டுரங்கா எழுந்திராய் காலை வேளை தொடங்கிவிட்டது, கருடபீடம் முன் வைஷ்ணவர்கள் ஒன்றாய் கூடி விட்டனர்.

கருட்பாராபாசுனி மஹாதவாராபர்யத், சுர்வரான்சீ மாந்தி உபீ ஜோடுனிய ஹா. 

கருடபீடம் முதல் மஹாதவாரம் வரை,தேவர்கள் கை கூப்பி உன்னை தரிசிக்க நிற்கிறனர்.

ஷுக்ர சங்காதிக் நாரத் தும்பர பாக்தான்சயா கோடி,த்ரிசூல் டம்ரூ கேவுனி உபா கிரிஜேச்சா பதீ.               

சுக்ர முனிவர் நாரதர் தும்பர் போல் தனி சிறப்புடைய பக்த கோடியுடன் கிரிஜா சங்கர் த்ரிசுலமும் உடுக்கையுடன் நிற்கின்றனர்.

கலியுகீச்சா பக்த் நாமா உபா கீர்த்நீ, பாட்டிமாகே உபி டோலா லாவுனியா ஜநீ.

கலியுகத்தின் சிறந்த நாமதேவ் உன் மகிமையை பாடி கொண்டு நிற்கின்றார், அவர் பின்னே பக்தி லயத்தில் தம்மை மறந்து பக்த கோடி நிற்கின்றனர்.


உட்டா உட்டா - ஸ்ரீ. கே. ஜ. பீஷ்மா.

உட்டா உட்டா ஸ்ரீ சாயிநாத் குரு சரணகமல தாவா, ஆதி வ்யாதி பவதாப் வாருநீதாரா ஜட்ஜீவா.                     

ஹே ஸ்ரீ குரு சாயிநாத் எழுந்திடுவாய், உந்தன் தாமரை பொற்பாதங்களின் தரிசனம் தந்திடுவாய், எங்களின் மனம் உடல் சார்ந்த எல்லா துன்பங்களை போக்கி இந்த உடல் தாங்கிய ஜீவன்களுக்கு விமோசனம் அளிப்பாய்.

கேலீ தும்ஹாம் ஸொடுனியா பவதமரஜனீ விலயா, பரஹீ அக்ஞாநாஸீ தும்சீ புலவி யோகமாயா.             

இயற்பியல் அன்பான உருவனே இருள் உம்மை விட்டு விலகியது, எனினும் அஞ்ஞானி எங்களை உங்கள் தவ மாயத்தோற்றத்தை தவறாக புரிந்து கொள்ள செய்கிறதே.

ஷக்தி ந ஆம்ஹாம் யத்கிம்சித்ஹீ திஜலா ஸாராயா,தும்ஹிச் தீதே ஸாருநி தாவா முக் ஜன் தாராயா.               

எங்களில் இந்த மயக்த்தை போக்க சிறிதும் திறனில்லை, அதனால், நீங்கள் தான் இந்த மாயத்திரையை நீக்கி அனைவருக்கும் விமோசனம் கிடைக்க உங்கள் முக தரிசனம் தருவீர்.

போ சாயிநாத் மஹராஜ் பவதிமிர்நாஷக் ரவி,அக்ஞானி ஆம்ஹி கிதி தும்ஹிச் தவ் வனார்வி தோர்வி,தீ வர்ணிதா பக்லே பஹுவத்நி ஷேஷ் விதி கவி.           

ஹே சாய்நாத் மகாராஜா நீங்கள் இவ்வுலகின் இருளை அழிக்க செய்யும் சூரியன். நாங்கள் அறிவீலி உங்கள் மகிமையை என்னவென்று போற்றுவது. என்னோ தலையுடைய ஆதிசேஷன் பிரம்மா மற்றும் சிறந்த கவிகள் புகழ் பாடி களைத்தனரே.

சக்ருப் ஹெஊநி மஹிமா தும்சா தும்ஹீச் வதவாவா ஆதி வ்யாதி …. உட்டா   உட்டா.       

கருனை காட்டுவீர், உங்கள் அருளின் மஹிமையை நீங்களே எங்கள் வாயால் கூற செய்திடுவீர்.

பக்த் மநீ சத்பாவ் தருநி ஜெ தும்ஹா அநுசரளே த்யாயாச்தவ தெ தர்ஷன் தும்சே தாரீ உபே டேலே.                 

தன்னுள் நல்லெண்ணம் கொண்டு பக்தர்கள் உம்மை பின்பற்றினர், அவர்கள் உம் தரிசனம் காண வாயிலில் நிற்கின்றனர்.

த்யானஸ்தா தும்ஹான்ச பாஹுநீ மன் ஆமூச்செ தாலே, பரி த்வத்சனாம்ருத் ப்ராஷாயாதே ஆத்துர் ஜாலே.                 

உங்களை தியானத்தில் உறுதியாக இருப்பதை பார்த்து ஆனந்தத்தில் ஆழ்ந்துவிட்டோம், ஆனாலும், உங்கள் திருவாசகத்தின் அம்ருதத்தை பருகிட ஆவலுடன் இருக்கின்றோம்.

உகடுநீ நேத்ரகமலா தீனபந்து ரமாகாந்தா,
பாஹி பாக்ருபாத்ருஷ்டீ பாலகாஜசீ மாதா, ரஞ்ஜவீ மதுரவாணீ ஹரி தாப சாயிநாதா. 

ஹே கடவுள் பக்திக்குரியவரின் தோழனே ரமாகாந்தா, உந்தன் கண்ணின் கருவிழி திறந்து,  ஒரு தாய் தன் குழந்தையை பார்ப்பதுபோல் எங்களை அதே போல் கருணை பார்வையால் பார்த்திடுவாய், ஹே சாயிநாதா உந்தன் இனிமையான குரல் எங்களை ஆனந்தத்தில் திளைக்க செய்கிறது, எங்களின் எல்லா வேதனைகளையும் விலக்க செய்தாய் சாயிநாதா.

ஆம்ஹிச் அபுலே காஜாஸ்தவ துஜகஷ்ட விதாதேவா, ஸஹன கரிசிலதேஐகூநி த்யாவீ பேட்ட க்ருஷ்ணதாவா. ஆதிவ்யாதி ……. உடா ...உடா. 

ஹே தேவா நாங்கள் எங்கள்
துன்பங்களை சொல்லி உமக்கு அதிக வேதனை அளிக்கி்றோம், இருப்பினும் அதை கேட்டதுமே இன்னல் இருந்தும் ஓடி வருவீரே, இது உங்களிடம் கிருஷ்ணனின் வேண்டுதலே, ஹே குரு சாயிநாதா எழுந்திடுவாய்.


தர்ஷன் தா - சந்த் நாம் தேவ்


உட்டா பாடுரங்கா ஆதா தர்ஷன் த்யா சகாலா
ஜாலா அருணோதய் ஸரலீ நீந்தேரெசீ வேளா.

ஹே பாண்டுரங்கா எழுந்திடுவாய், அனைவருக்கும் தரிசனம் தாருங்கள், சூர்யோதயம் ஆனதே நித்திரை வேளை முடிந்து.

சந்த் சாது முனி அவ்கே ஜாலேலீ கோலா
சோடா ஸேஜ் சுகே ஆதா பதூ தா முக்கமலா.                       

துறவி கனவான் முனிவர் எல்லோரும் கூடிவிட்டனர், தூங்கும் சுகத்தை விட்டு நிங்கள், உங்கள் முக கமல தரிசனம் எமக்கு காட்டிடுவீர்.

ரங்குமன்டபி மஹாத்வாரீ ஜாலீசே தாடீ
மன் உதாவீல் ரூப் பஹாவயா த்ருஷ்டீ.                                 

மன்டபமுதல் மஹாவாசல்வரை பக்தர்கள் கூட்டம் நிறம்பிவிட்தது, உங்கள் திருமுகம் காண ஆசையுடன் நிற்கின்றனர்.

ராஹீ ரூக்மாபாயீ தும்ஹாம் யேவு தா தயா
ஸேஜெ ஹால்வூனீ ஜாகே கரா தேவராயா.                         

ஹே ராதே ஹே ரூக்மாபாயீ தயை செய்வீர், படுக்கையை சிறிது அசைத்து பாண்டுரங்கதேவனை எழுப்புவீர்.

கருட் ஹநுமந்த் உபே பாஹதீ வாட்
ஸ்வர்கீர்சே சுர்வர் கேவூநி ஆலே போபாட்.                           

கருடன் ஹனுமான் தரிசிக்க எதிர்பார்து நிற்கின்றனர், தேவ தேவியினர் கூடி உங்கள் மஹிமையை பாடி நிற்கின்றனர்.

ஜாலே முக்தூவார் லாப் ஜாலா ரோக்டா
விஷ்ணுதாஸ் நாமா உமா கேஊநி காகடா.     
                     
வாயில் திறந்தது உங்களின் தரிசன ப்ராப்தி கிடைத்தது. விஷ்ணுதாஸ் நாமதேவ் ஆரத்தி உமக்கு செய்ய நிற்கின்றனர்.


பஞ்சார்த்தி - ஸ்ரீ.  க்ரு. ஜா. பீஷ்மா.


கேவுநியா பஞ்சார்த்தி கரு பாபாந்ஸீ ஆர்த்தி
கரு சாயீசீ ஆர்த்தி  கரூ பாபாந்ஸீ ஆர்த்தி.                             

ஐந்து திரி ஏற்றி செய்வோம் பாபாவுக்கு ஆரத்தி செய்வோம் சாயிக்கு ஆரத்தி செய்வோம் பாபாவுக்கு ஆரத்தி.

உட்டா உட்டா ஹோ பாந்துவ ஓவாலு ஹா ரமாதாவ் சாயி ரமாதாவ்  ஓவாலு ஹா ரமாதாவ். 
                                 
எழுந்திடுவீர் நண்பர்களே விட்டலுக்கு ஆரத்தி செய்வோம் சாயி விட்டலுக்கு ஆரத்தி செய்வோம்  சாயியே தான் விட்டல் அவருக்கு ஆரத்தி செய்வோம்.

கரூனியா ச்தீர் மன், பாஹு கம்பீர் ஹே த்யான்,
சாயீசே ஹே த்யான், பாஹு கம்பீர் ஹே த்யான்.                 

நலையான மனதோடு ஆழ்ந்து த்யானித்து சாயின் திருஉருவம் நிலைக்க செய்வோம், த்யானத்தில் சாயின் தரிசனம் காண்போம், ஆழ்ந்து த்யானித்து வணங்குவோம்.

க்ருஷ்ணநாதா தத்தாசாயி ஜடோ ஜித்த துஜே பாயி ஜித்த தேவாபாயி  ஜடோ ஜித்த துஜே பாயி.   
                       
ஹே க்ருஷ்ணநாத் தத்தாசாயி இந்த மனம் நலையாக இருக்கச்செய்திடுவீர், எங்கள் மனம் உங்களுடன்தான் ஈடுபாடு கெண்டுள்ளது, எங்கள் மனதை அலையாது இருக்கச்செய்வீர்.


சிந்மய்ரூப் (காகட் ஆர்த்தி)
ஸ்ரீ.  க்ரு. ஜா. பீஷ்மா.

காகட் ஆர்த்தி கரீதோ சாயிநாத் தேவா
சிந்மய்ரூப்  தாகாவி கேவுநி பாலக் - லகுசேவா.               

ஹே சாயிநாத் தேவா, நான் காலை ஆரத்தி செய்கிரேன், இந்த குழந்தையின் அற்ப சேவையை ஏற்றகொண்டு  உன்தன் சிந்மையரூப தரிசனம் தந்திடவாய்.

காம் க்ரோத் மத் மத்ஸர் ஆடூநீ  காகடா கேலா
வைராக்யாசே துப காலுநி மீ தோ பிஜ்விலா.                             

காம கோப ஆசை பேராசை பொறாமை முறுக்கி திரியாக்கி பற்றற்ற தன்மை எனும் நெய்யில் தோய்த்து விட்டேன்.

சாயிநாத் குருபக்திஜ்வலனே தோ மீ பேட்விலா தத்துவ்ருத்தி ஜாலூநி குருனே ப்ரகாஷ் பாடிலாத்வைத்-தமா நாசுநீ மிலவீ தத்ஸ்வரூபீ ஜீவா .                             

இவர்களை நான் ஸ்ரீ சாயிநாதனின் மேல் தனியோரு குருபக்தி நெருப்பை பிரகாசிக்க செய்தேன்.  என் கெட்ட சுபாவத்தை எரித்து ஹே குரு நீங்கள் என்க்கு மன நிறைவு கிடைக்க செய்தாய். நீங்கள் இந்த இருமனபோக்கெனும் இருளை அழித்து, இந்த ஆன்மாவை உங்களில் ஓன்றிட செய்வாய். உன்தன் சிந்மையரூப தரிசனம் தந்திடவாய்.

பூ கேசர் வ்யாபுநீ அவகே ஹிருத்கமலீ ராஹசீ
தோசி தத்தேவ் து ஷிரிடி ராஹுநி பாவஸீ.                                   

நங்கள் இவ்வுலகில் பரவியுள்ள அனைத்து ஜீவன்களின் மனதில் வசிப்பவனே. நீங்கள் தான் தத்த குருதேவ், ஷிரடியில் வாசம் கொண்டுள்ளது எங்கள் நல் அதிர்ஷ்டமே.

ராஹுநி யேதே அந்யத்ரிஹி து பக்தாம்ச்தவ் தாவசீ நிரசுநியா சங்கடா தாஸா அநுபவ் தாவிசீ ந கலே த்வல்லீலாலீ கோண்யா தேவா வா மானவா.                 

ஷிரிடி இருந்தும் நீங்கள் பக்தர்களை தேடி எங்கேங்கோ ஓடி செல்கிறீர்கள். பக்தனின் இன்னல்களை போக்கி உங்களின் அனுபவத்தை தருகிறீகள். உங்களின் வியப்பிற்குரிய செயல்கள் மனிதனாலும் தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியவில்லை.

த்வதஸாதுந்துபீநெ ஸாரெ அம்பர் ஹே கோந்தலே சுகுண் மூர்த்தி பாஹண்யா ஆதுர் ஜன் ஷிர்டி ஆலே.               

உங்களின் புகழ்பாடல்களின் கோஷம் ஆகாயம் மற்றும் அனைத்து திசைகளிலும் ரீங்காரமிட்டுக்கொண்டு இருக்கிறது. உங்களின் தெய்வீக சகுன தோற்றத்தை தரிசிக்க விருப்பம் கொண்டவர்கள் ஷிரிடி வந்துள்ளனர்.

ப்ரஸுநி த்வத்வசனாம்முருத் ஆமுசே தேஹ்பான் ஹர்பலே சோடுநியா துராபிமான் மாநஸ் த்வச்சரணீ வாஹிலே க்ருபா கருநியா சாயிமாவுலே தாஸ் பதரி த்யாவா.                     

அவர்கள் உங்கள் பேச்சமுதம் கட்டியதும் தஙகளை மறந்த நிலையிலிருக்க, அவர்களின் கர்வம், செருக்கை விட்டு உங்களிடம் சரணடைந்தநர். ஹே சாயி அம்மா, இந்த சீடர்களுக்கு அடைக்கலம் அளிப்பீரே.
                                                      Part 2 in next post .....

 


Facebook Comments