Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: Shri Shirdi Saibaba Morning Aarthi With Tamil Meaning Part 2  (Read 3557 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

  • Member
  • Posts: 37
  • Blessings 0
விடியற்காலை ஆரத்தி.
(காக்கட் ஆரத்தி) - பகுதி 2

பண்டரீநாதா (காகட் ஆர்த்தி)
சந்த் துக்காராம்

பக்திசியா போடீ போத் காக்டா ஜ்யோதீ
பஞ்ப்ராண் ஜீவே பாவே ஓவாலு ஆர்த்தி.                                     

பக்தியால் பிறந்த என் இதயஞான தோற்றத்திர்க்கு காலை ஜோதி எடுத்து என்தன் உயிரின் சாட்சி மற்றும் சுய தருப்தியுடன் ஆரத்தி செய்கிறேன்.

ஆவாலு ஆர்த்தி மாஜ்யா பண்டரிநாதா. மாஜ்யா பண்டரிநாதா.  தோந்ஹி கர் ஜோடினீ சரணீ டேவிலா மாதா. த்ரு.                       

ஹே என் பண்டரிநாதா, என் சாயிநாதா, உமக்கு நான் ஆரத்தி செய்கிறேன். இரண்டு கைகளையும் குவித்து உங்கள் பாதங்கள் மேல் என் தலை சாய்த்து வணங்குகிறேன்.

காய மஹிமா வர்ண் ஆதா ஸாங்கணே கிதி
கோடீ ப்ரம்மஹத்தயா முக் பாஹதா ஜாதி.                                     

உங்கள் மஹிமையை யாராலும் சொல்ல இயலாத போதும் நான் எப்படி வர்ணிப்பேன்.  ஒரு கோடி பிரம்மஹத்யா போன்ற வெறுக்கப்பட்ட பாவங்கள் அனைத்து உங்களின் தரிசனம் கண்டதும் விலகிவிடுகிறது.

ராஹீ ருக்மாபாயீ உப்யா, தோதீ தோ பாஹீ
மயூர்பிச்சா சாம்ரே டாலிதீ டாயீசே டாயீ.                                           

யாத்ரீகர்கள் ருக்மாபாயீ இருபுறமும் நிற்கின்றனர், மயிலிறகு சாமரம் வீசி வணங்குகின்றனர்.

துகா ம்ஹணே தீப் கேவுநி உன்மநீத் ஸோபா
விடேவரீ உபா திசே லாவண்யகாபா, ஓவாலே.                             

நினைவற் நிலையில் (ஞான ரூபம்) தீபத்தை கையில் எடுத்து துகா சொல்கின்றேன், கல் மீது நிற்கும் பாண்டுரங்கா உனது அழகின் பெருமையை சொற்களால் விவரிக்க முடியவில்லை. நான் உங்களுக்கு ஆரத்தி செய்கிறேன்.


உடா உடா (பத்) - சந்த் நாம்தேவ்

உடா ஸாதூசந்த் ஸாதா ஆபுலாலே தித்
ஜாயீல் ஜாயீல் ஹா நர்தேஹ் மகா கைஞ்சா பக்வந்த்.                 

முனிவர்கள் முதலோர் எழுந்திடிவீர் உங்கள் நலமும் விருப்பமும் நிறைவேற. இந்த உடல் ஒவ்வொரு நோடியும் அழிகின்றதே, இதை துரந்த பின் தெய்வசக்தி அடைந்தேன லாபம்.

உடோநியா பஹாடே பாபா உமா அசே விடே
சரண் தயாந்சே கோமடே அம்ருத்திருஷ்டி அவ்லோகா.               

ஆதி காலையில் எழுந்து பாபா கல்மேல் நிற்கிறார், அவரின் அழகான கமல பாதம் மற்றும் அமுத பார்வை வணங்குவோம்.

உடா உடா ஹோ வேகோஸெ சலா ஜாவூயா ராவுலாசி ஜலதீல் பாதகாந்சயா ராஷீ காகட் ஆர்த்தி தேகிலியா.                 

எழுக எழுக சீக்கிரம் கோயில் சென்றடைவோம், ராசியான காகட் ஆரத்தி கண்டவுடன் நமது பாவ கர்மா சாம்பலாவிட.

ஜாகே கரா ரூக்மிணீவர், தேவ் ஆஹோ நிஜ்சுராத். வேகே லிம்பலோண கரா துஷ்டு ஹோயீல தயாஸீ.                     

ஹே ரூக்மிணியின்மனாளனே எழுந்திடுவீர். அவர் தன் த்யானத்தில் ஆழ்ந்துள்ளார், எலுமிச்சை உப்பும் கலந்து அவருக்கு த்ரிஷ்டி செய்வோமே.

தாரீ வாஜந்த்ரீ வாஜதீ டோல தமாமே கர்ஜதீ
ஹோதே காகட் ஆர்த்தி மாஜ்யா சத்குரூராயாசீ.                           

பெருவாசலில் விதவித இசை கருவிகள் ஒலிக்கிறது, மேளம் மற்றும் ஷேஹ்னாயின் ரீங்காரம் ஒலிக்கிறதே. இதோடு என் சத்குருவின் காலை ஆரத்தி நடக்கிறதே.

சிம்ஹநாத் சங்க்பேரீ ஆனந்து ஹோதோ மஹாத்வாரீ கேஷவ்ராஜ் விடேவரீ நாமா சரண் வந்திதோ.                               

சங்கொலி சிம்ம கர்ஜனை போல் ரீங்காரம் ஒலி்க்கிறது, பெருவாசலில்  சந்தோஷ களிப்பில் ழூழ்கி இருக்கிறது.
நாமதேவ் கல் மேல் நிற்கும் ப்ரபு வட்டலின்பாத வந்தனம் செய்கிறாரே.


சாயிநாத் குரு மாஜே ஆயீ
(பாரம்பரிய ப்ராத்னை)

சாயிநாத் குரு மாஜே ஆயீ. மஜலா டாவ் காவ் பாயீ.

ஸ்ரீ சாயிநாத் குரு, என்தன் தாய் நீங்கள், உங்கள் பாதமருகில் எனக்கு இடம் அருள்வீர் .

தத்ராஜ் குரு மாஜே ஆயீ.  மஜலா டாவ் காவ் பாயீ.

ஸ்ரீ குரு தத்ராஜா, என்தன் தாய் நீங்கள், உங்கள் பாதமருகில் எனக்கு இடம் அருள்வீர் .

ஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்.

ஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜா போற்றி.


ஸ்ரீ சாயிநாத் ப்ரபாதாஷ்டக்
ஸ்ரீ. க்ரு. ஜா. பீஷ்மா

ப்ரபாத் சமயீ நபா சுப்பர ரவிப்ரபா பாகலீ
ஷ்மரே குரு ஸதா அஷா சமயி த்யா சலே நா கலீ ம்ஹணோநி கர் ஜோடுநீ ஆதா குருப்ரார்தனா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா. 
                               
இந்த காலை பொழுதினில் சூரியனின் மங்கள கதிர்கள் பரவியுள்ளது. இவ்வேளையில் யாரேனும் குருவை நினைத்தால் அவர்களின் கலியுக குரைகள் நெருங்காது. ஆகையால் கை குவித்து குருவிடம் ப்ராத்திப்போம், ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

தமா நிரசி பானு ஹா குருஹி நாஸி அக்யாந்தா பரந்து குருசி கரீ ந ரவிஹீ கதி ஸாம்யதா புந்ஹா திமிர ஜந்ம தே குருக்ருபேநி அக்யான் நா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.                                 

சூரிய ஒளியில் சூழ்ந்து இருள் கலைவது போல், குருவும் எல்லா சங்கடங்களை போகிடுவார். இருந்தும் சூரியனுக்கு நிகர கருவை ஒப்பிடுதல் சரியல்ல. சூரிய அஸ்மித்ததும் இருள் சூழ்ந்து கொள்கிறது, ஆனால் குரு க்ருபையினால் நீங்கிய சங்கடங்கள் திரும்ப பிறப்பதில்லை. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

ரவி ப்ரகட் ஹோவுநி த்வரித் காலவீ ஆலஸா
தஸா குருஹி ஸோடவீ ஸகல் துஷ்க்ருதிலாலஸா ஹரேநி அபிமாந்ஹீ ஜட்வீ தத்பதீ பாவ்னா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.                           

சூரிய உதயம் சோம்பலை நீக்குவது போல், குரு நமது எல்லா பாவங்கள் மற்றும் ஈர்ப்பு தூண்டலை அழித்திடுவார். எங்களில் உள்ள துர்குணங்களை அழித்து, எங்கள் விருப்பம் உங்கள் பாதத்தில் நிலையான இடம் கொடுபீர். ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

குருஸி உபமா திசெ விதிஹரீஹராந்சீ வுணீ
குடோநி மக யேயீ தீ கவநி யா உகீ பாஹுணீ
துஜீச உபமா துலா பரவீ ஸோபதே ஸஜ்ஜனா
ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.                                 

குருவை ப்ரம்மா, விஷ்ணு சவனுடன் ஒப்பிட்டால், இவர்களுக்கும் மேலானவர். இருந்தும் உங்களின் ஒப்பிடல் என் புத்திக்குள் அடிக்கடி அழையாத விருந்தினராக நுழைகிறது. ஹே சத்புருஷா சாயிநாத், தாங்கள் தன்னுடன் ஒப்பிடுகையில் தான் உங்களுக்கு பெருமை தருகிறது. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

சமாதி உதரோநியா குரு சலா மஷிதீகடே
த்வதீய வசநோதித்க் தீ மதுர் வாரிதீ ஸாகடே
அஜாதரிபு ஸாத்குரோ அகிலபாதகா பஞ்ஜனா
ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.                                 

ஹே குரு, இப்போது நீங்கள் ஸமாதி நிலை விட்டு விட்டு மசூதிக்கு வாருங்கள். உங்கள் இனிய வாசகங்களால் பக்தர்களின் சங்கடங்கள் தீரும். ஹே சத்குரு, நீங்கள் பாவங்களை முழுவதுமாக அழிக்க வல்லவர், இருந்தும் உங்களுக்கு ஏதிரிகள் எவரும் இல்லை. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

அஹா சுஸமயாஸி யா குரு உடோநியா பைஸலே விலோகுநி பதாஷீர்தா ததிய ஆபதே நாஸிலே அஸா சுஹிதகாரீ யா ஜகதி கோணீஹீ அந்ய நா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.                                 

அஹா! இந்த சுபவேளையில் குரு ஸமாதி நலை விட்டேழுந்து அமர்ந்திருக்கிறார். அடைக்கலம் வந்த பக்தர்களின் இன்னல்களை அவர் பார்வையினாலே போக்கிட செய்வார். இந்த உலகில் அவரை போல் நலம் விரும்புகறவர் வேறேவறுமில்லை. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

அஸே பஹுத் ஷஹாணா பரி ந ஜ்யா குருசீ க்ருபா ந தத்ஸ்வாஹித த்யா கலேகரிதஸே ரிகாம்யா கப்பா ஜரீ குரு பதா தரீ ஸுத்ருட பக்திநே தோ மனா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.       
                           
ஒருவன் எவ்வளவு அறிவாளியாய் இருந்தபின்னும் குருவின் அருள் இல்லையேல் அவனால் புரிந்து கொள்ள முடியாது, பயனற்ற பேச்சு பேசுவான். மனதில் வெகுதிட பக்தியுடன் குரு பாதம்பற்றினால், ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.

குரோ விநிதீ பி கரீ ஹூருதமஞ்ஜிரீ யா பஸா
ஸமஸ்த் ஜக் ஹே குருஸ்வரூபசீ டஸோ மானஸா கடோ ஸதத் ஸத்க்ருதி மதிஹி தே ஜகத்பாவனா ஸமர்த் குரு சாயிநாத் பூரவீ மநோகாம்னா.   
                               
ஹே குரு, உங்களிடம் எனது வேண்டி கொள்வது, நீங்கள் என் மனக்கோயிலில் வாசம் கொள்ள வேண்டும். அனைத்து உலகம் என் குருவின் தேற்றம் என்ற எண்ணம் என் மனதில் பதிய வைப்பீர். இந்த உலகை துயமாக வைக்கும் பரம்பொருளே, எனக்கு பகுத்தறிவு தருவீர் என் புத்தி எப்போதும் நற்காரியங்கள் செய்யவே நினைக்க. ஹே திறமையுள்ள குரு சாயிநாத், எங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம்.


ஸ்ரக்தாரா

ப்ரேமே யா அஷ்டகாசீ படூநி குருவரா ப்ராதிர்தீ ஜே ப்ரபாதீ த்யாந்சே சித்தாஸி தேதோ அகில ஹரூநியா ப்ராந்தி மீ நித்திய நவீ, ஏஸே ஹே சாயிநாதே கதூநி ஸுசவிலே ஜேவி யா பாலகாஸீ தேவி த்யா க்ருஷ்ணபாயீ நமூநி ஸவிநயே அர்பிதோ அஷ்டகாஸீ.

ஒருவன் இந்த ஏட்டை குரு மேல் நிறைந்த பக்தியுடன் காலையில் படிப்பதில் அவர்களின் மனதிலிருந்து எல்லா விதமான சந்தேகம் மற்றும் குழப்பங்கள் நீக்கி நான் அவர்களுக்கு தனமும் மனசாந்தி அருள்வேன். என ஸ்ரீ  சாயிநாத் ஒரு அறியாத பிள்ளைக்கு அறிய வைப்பது போல் எனக்கு மறு உறுதி செய்தார். அதனால் நான் க்ருஷ்ன பணிவான வந்தனம் செய்து இந்த எட்டை அவரின் கமல பாதங்களில் சமர்ப்பணம் செய்கிறேன்.

ஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜ் கி ஜெய்.

ஸ்ரீ ச்சிதாந்த சத்குரு சாயிநாத் மஹாராஜா போற்றி.


சாயி ரஹம் நஜர் கர்னா
சந்த் கவி தாஸ்கணு

சாயி ரஹம் நஜர் கர்னா, பச்சோந் கா பாலன் கர்னா.

ஹே சாயி, உன்தன் கருணை பார்வை எங்கள் மேல் படவேண்டும் மற்றும் இந்த குழந்தைகளை போஷிக்வேண்டும்.

ஜானா தும்நெ ஜகத்பஸாரா, ஸப்ஹீ ஜூட் ஜமானா, சாயி ரஹம் …..

நாங்கள் அறிந்து கொண்டோம் உம்மால் இந்த உலகம் பரப்பு ஆனது, மீதமேல்லாம் உன்மையானவையில்லையே.

தாஸ் கநு கஹே அப் க்யா போலு, தக் கயீ மேரி ரஸனா. சாயி ரஹம் ….

தாஸ் கணு சொல்கிறேன் உங்கள் மஹிமையை இன்னும் என்னவேன்று சொல்ல, என் குரல் தளர்ந்து விட்டதே.


ரஹம் நஜர் - சந்த் கவி தாஸ்கணு

ரஹம் நஜர் கரோ, அப் மோரே சாயி,
தும் பின் நஹி முஜே மா-பாப்-பாயீ.

ஹே சாயி ! உன்தன் கருணை பார்வை என் மேல் படவேண்டும், உங்களை தவிர மற்றவர் என் தாய் தந்தை அல்லது சகோதரன் இல்லை.

மை அந்தா ஹும் பந்தா தும்ஹாரா,
மை நா ஜாநு அல்லா இலாஹீ . ரஹம் நஜர் …

நான் ஒரு அறிவில்லாத சேவகன், நான் அல்லா இலாஹீ பற்றி அறியேன்.

காலீ ஜமானா மைநே கமாயா.
சாதீ ஆகர் கா கியா ந கேயீ. ரஹம் நஜர் …..

நான் இந்த பிறவியில் காலத்தை பயனற்ற வகையில் கழித்தேன், மற்றும் இருதிவரையில் உடனிருக்க யாரும் தோழன் (சத்குரு) கடைக்கவில்லை.

அப்னே மஸீத் கா ஜாடூ கணு ஹை.
மாலிக் ஹமாரே தும் பாபா சாயி.
ரஹம் நஜர்……….

தாஸ்கணு தனது மஸ்ஜித்யின் (த்வாரகமயீ) துடைப்பம். ஹே பாபா சாயி, நீங்கள் தான் எங்கள் கடவுள் . அருள் பார்வை பார்க்க வேண்டும்.


ஜனி பத் - சந்த் ஜனாபாயீ

துஜ காய தேவு ஸாவல்யா மீ காயா தரீ ஹோ.
துஜ காய தேவு சத்குரு மீ காயா தரீ.
மீ துபலீ படீக நாம்யாசீ ஜாண ஸ்ரீ ஹரி.

ஹே ஸாவ்ரே (க்ருஷ்னா), நான் உங்களுக்கு நெய்வேத்தில் எதை அளிப்பேன்? ஹே சத்குரு, நான் நீங்கள் உண்ண எதை தருவேன்? ஸ்ரீ ஹரி அறிவீர் நான் உங்கள் பக்தநென, நாம்தேவிடம் பணிபுரியும் ஒரு பெண் தாஸி நான்.

உச்சிஷ்ட துலா தேணே ஹீ கோஷ்ட் நா பரீ.
து ஜகந்நாத், துஜ தேவூ கஸீ ரே பாகரீ.

எஞ்சிய உணவை உமக்கு தருவது சரியில்லை. நீர் ஜகந்நாத் அல்வோ, இருந்தும் எனது தடித்த ரோட்டியை எப்படி தருவேன்? (அதை தருபவனும் தாங்கள் தானே.)

நாகோ அந்த் மதீய பாஹு ஸக்யா பகவந்தா. ஸ்ரீ  காந்தா. மாத்யாந்ஹராத்தர உல்டோநி கேலி ஹீ ஆதா. ஆண சித்தா.

ஹே தோழனே, பகவான் இது போன்ற சோதனை நடத்தாதே. ஹே ஸ்ரீ  காந்தா, (க்ருஷ்ணா) இப்போது நள்ளிரவுக்மேலாநதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஜா ஹோயீல துஜா ரே காகடா கீ ராவூலாந்தரீ.
ஆணதீல பக்த் நைவதஹி நாநாபரீ.

இன்னும் சில நேரத்தில், கோவிலில் (காகட்) காலை ஆரத்தி ஆரம்பமாகும், மற்றும் அச்சமயத்தில் உன்தன் பக்தர்கள் னைவேத்தியத்தில் பலவித உணவு வகைகலுடன் வருகை தருவார்களே. ஹே ஸாவ்ரே ………



ஸ்ரீ  சத்குரு பத் - ஸ்ரீ  க்ரு. ஜா. பீஷ்மா.

ஸ்ரீ  சத்குரு பாபாசாயி ஹோ.
துஜவாம்சுநி ஆஷ்ரை நாஹீ, புதலீ.

ஹே சத்குரு பாபா சாயி நீங்கள் இல்லா இந்த பூமியில் வேரொரு துணை யில்லை.

மீ பாபீ பதித தீம்ந்த. தாரணே மலா குருநாதா ஜட்கரீ.

நான் ஒரு பாவி, அற்பமான மற்றும் மந்தபுத்திவுடவன். ஹே குருநாத், நீங்கள் சுறுசுறுப்பானவர் என்னை மாற்றவேண்டும்.

து ஸாந்திக்ஷேமேசா மேரூ ஹோ.
து பாவார்ணவீசே தாரூ, குருவரா.

ஹே குருவர், நீங்கள் அமைதி மற்றும் பொறுமையின் மலை போன்றவர். ஹே குருவர், இந்த உலகக்கடலில் நங்கள் என் படகோட்டி.

குருவரா மஜஸி பாமரா, ஆதா உதாரா, த்வரித் லவலாஹீ, மீ புடதோ பவ்பய் டோஹீ, உதரா.

ஹே குருவர், இந்த பாவியை காப்பாற்ற வேண்டும். நீங்கள் வேகமாக காபாற்றுங்கள், நான் இந்த உலகக்கடலில் பயம் தோற்றம் கொண்ட சுழலில் சிக்கி கொண்டிருக்கிறேன், நீங்கள் என்ன வேகமாக தப்பிக்க செய்ய வேண்டும். ஸ்ரீ  சத்குரு பாபாசாயி…...

ஸ்ரீ  சச்சிதாநந்த் சத்குரு சாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்.

ௐ ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரம்ம சாயிநாத் மஹாராஜ்.

ஸ்ரீ  சச்சிதாநந்த் சத்குரு சாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்.

★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

                    பகல் ஆரத்தி அடுத்த பதிவில்

 


Facebook Comments