Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: Shri Shirdi Saibaba Night Aarthi With Tamil Meaning  (Read 62892 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

  • Member
  • Posts: 37
  • Blessings 0
Shri Shirdi Saibaba Night Aarthi With Tamil Meaning
« on: October 20, 2018, 07:47:44 AM »
  • Publish
  • இரவு ஆரத்தி.

    ஸேஜ் ஆர்த்தி

    பாஞ்ஜாஹீ தத்வாந்சீ ஆர்த்தி
    சந்த் துகாராம்


    ஓவாளு ஆர்த்தி மாஜ்யா சத்குருநாதா, மாஜ்யா சாயீநாதா. பாஞ்ஜாஹீ தத்வாந்சா தீப் லாவிலா ஆதா. த்ரு.

    நான் இப்போது என் உடலின் ஐந்து தத்துவ பிரகாசமான திபம் ஏற்றி என் சத்குருவுக்கு ஆரத்தி எடுக்கிறேன், என் சாயீநாதனுக்கு ஆரத்தி செய்கிறேன்.

    நிர்குணாசீ ஸ்திதீ கைஸீ ஆகாரா ஆலீ, பாபா ஆகாரா ஆலீ. ஸர்வா கடீ பரூநி உரலீ சாயி மாஊலி. ஓவாளு ஆர்த்தி ……..

    பாபா, உங்கள் தனித்த நிலையில் இது எவ்வாறு வடிவம் எடுத்தது? பாபா தன் உருவம் எடுத்தார். ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் தான் பரவியுள்ளீர், இருந்தும் எப்படி அன்னை சாயின் உருவத்திலும் உங்கள் வடிவமுள்ளது? அந்த சத்குருவுக்கு ஆரத்தி செய்கிறேன்.


    ரஜ தம ஸத்தவ திகே மாயா ப்ரஸவலீ, பாபா மாயா ப்ரஸவலீ. மாயேசியே போடீ கைஸீ மாயா உத்பவலீ. ஓவாளு ஆர்த்தி ……..

    ராஜ, தாபோ, ஸஸ்வத இம்மூன்று குணங்களால் தெய்வசக்தி உருவாகிறது. உலகின் இந்த குணங்களில் சிக்கியும் என்னுள் உங்கள் மீது அன்பு எப்படி வந்தது? இது மட்டும் உங்கள் அருளால் தான் கிடைத்தது, அந்த சத்குருவுக்கு ஆரத்தி செய்கிறேன்.

    சப்தஸாகரீ கைஸா கேள மாந்டீலா, பாபா கேள மாந்டீலா. கேளுநியா கேள அவகா விஸ்தார் கேலா. ஓவாளு ஆர்த்தி ……..

    நீங்கள் ஏழு ஸமுத்திரத்தில் எப்படிப்பட்ட வியப்புக்குரிய செயல்கள் செய்தீர்கள், பாபா இது எந்தவித வியப்புக்குரிய செயல்களை நடத்துகிறீர். மற்றும் எப்படி உங்கள் இந்த வியப்புக்குரிய செயல்களை அனைத்து உலகத்தில் பறவ செய்திட்டாய். அந்த சத்குருவுக்கு ஆரத்தி செய்கிறேன்.

    ப்ரஹம்மான்டிசீ ரசனா கைஸீ தாகவிலி டோளா, பாபா தாகவிலி டோளா. துகா ம்ஹணே மாஜா ஸ்வாமி குருபாளு போளா. ஓவாளு ஆர்த்தி ……..

    உங்களால்தானே இந்த எல்லையற்ற ப்ரபஞ்சம் ஏற்பட்டது, அதை நீங்கள் எனக்கும் இந்த உலகில் கண்களுக்கு எப்படி காண்பித்தீர். துகா சொல்கிறேன் என் சுவாமி மிக கிருபாகரன் மற்றும் அப்பாவியானவர்.


    ஆரத்தி ஞானராயாசீ
    ஸ்ரீ ராமஜனார்தன் ஸ்வாமி.


    ஆரத்தி ஞானராஜா. மஹாகைவல்யதேஜா. சேவிதீ ஸாதூசந்த். மநு வேதலா மாஜா. ஆரத்தி ஞானராஜா. த்ரு.

    ஹே ஞானராஜா, நீங்கள் சிறந்த வீடுபேறு பெருமை வாய்ந்த தீபம். அவரது சேவையில் முனிவர்கள் ஞானிகள் ஈடுபட்டுள்ளனர், அது போன்று தங்களை, என் மனத்தினுள் வைத்திட்டேன். ஹே ஞானராஜா, நான் உமக்கு ஆரத்தி செய்கிறேன்.

    லோபலே ஞான் ஜகீ. ஹித நேணதீ கோணி.
    அவதார் பாண்டுரங்க. நாம் டேவீலே ஞானி. ஆ.

    இந்த உலகிலிருந்து எப்போது ஞானம் மறைந்து போனதால், யாருக்கும் நல்லது கேட்டது பற்றி ஞானம் இல்லாமல் போனது, அப்போது பாண்டுரங்கன் ஞானதேவ அவதாரம் எடுத்தார்.  ஹே ஞானராஜா, நான் உமக்கு ஆரத்தி செய்கிறேன்.

    கனகாசே தாட் கரீ. உப்யா கோபிகா நாரீ.
    நாரத் தும்பர் ஹோ. ஸாமகாயன் கரீ. ஆ.

    அவரின் நேரில் இறை வணக்கத்துடன் தங்க தட்டு கையில் பிடித்து நிற்கின்றனர் அப்படியே நாரதர் மற்றும் தும்பர் ஸாமவேத மந்திரங்கள் சொல்லி அவரின் மஹிமையை பாடுகின்றனர், அது போல், ஹே ஞானராஜா, நான் உமக்கு ஆரத்தி செய்கிறேன்.

    ப்ரகட் குஹம் பாலே. விஷ்வ ப்ரஹமசி கேலே.
    ராமா ஜனார்தனீ பாயீ மஸ்தக் டேவிலெ.

    நீங்கள் உங்கள் மனதிலுள்ள பரம்பொருளின் மூலம் இந்த உண்மையை சொன்னீர்கள், ப்ரம்மா எவ்வாறு இந்த உலகத்தை உருவாக்கினார். ஹே ஞானராஜா, நான் ஜனார்தனீ (பாடல் எழுதியவர்) உங்கள் பாதங்களில் என் தலை வைத்து வணங்குகிறேன்.


    ஆர்த்தி துகாராமாசீ
    ஸ்ரீ ராமேஷ்வர் பட்ட


    ஆரத்தி துகாராமா. ஸ்வாமி சத்குருதாமா.
    சச்சிதானந்த மூர்த்தி. பாய தாகவீ ஆம்ஜாம்.
    ஆரத்தி துகாராமா. த்ரு.

    ஹே சுவாமி சத்குருவின் வழிபாட்டிமே, சச்சிதானந்தனின் உருவமுள்ள, துகாராமா, உங்களுக்கு ஆரத்தி செய்கிறோம். நீங்கள் உங்கள் பாத தரிசனம் தருவீர்.

    ராகவே ஸாகராத். ஜைஸே பாஷாண் தாரிலே.
    தைஸே ஹே துகோபாசே. அபங்க ரக்ஷிலே. த்ரு.

    அந்த ராகவனின் திறப்பாட்டு கற்களை கடலில் மிதக்க செய்தது மற்றும் அதேபோல் ழூழ்கவில்லை துகாவின் செய்யுள்களையும் நதி நீரில் ழூழ்காவிடாமல் காப்பாற்றப்பட்டது.

    துகிதா துலநேஸி. ப்ரம்ஹ துகாஸீ ஆலே.
    ம்ஹணோனீ ராமேஷ்வர். சரணீ மஸ்தக் டேவிலே. த்ரு.

    அப்போழுது ஒப்பிடுகையில் அவர் துகாராமில் ப்ரம்மஹத்வம் தெரிந்த போது ராமேஷ்வர் அவரின் பாதங்களில் தனல வணங்கினார்.


    ஜய ஜய சாயீநாத்
    ஸ்ரீ  க்ரு. ஜா. பீஷ்மா


    ஜய ஜய சாயீநாத் ஆதா பஹுடவே மந்திரீ ஹோ. ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரத்தி கேவுநி கரீ ஹோ. ஜய ஜய சாயீநாத் ஆதா பஹுடவே மந்திரீ ஹோ.

    ஜய ஜய சாயீநாதா,  இப்போழுது நீங்கள் கோவிலில் ஓய்வேடுங்கள். நான் கையில் தட்டையேடுத்து உங்களுக்கு அன்புடன் ஆரத்தி எடுக்கிறேன், மற்றும் வேண்டிக்கொள்கிறேன், ஹே சாயீநாத், இப்போழுது நீங்கள் கோவிலில் ஓய்வேடுங்கள். அன்புடன் ஆரத்தி எடுக்கிறேன்……..

    ரஜவிஸீ து மதுர் போலுநீ மாய ஜஷீ நிஜ் மூலா ஹோ. போக்கிஸீ வ்யாதீ துச ஹரூநியா நிஜ் ஸேவக் துக்காலா ஹோ. தாவுநி பக்தவ்யஸன ஹரிஸீ தர்ஷன் தேஸீ த்யாலா ஹோ. ஜாலே அஸதீல கஷ்ட் அதீஷய தும்சே யா தேஹாலா ஹோ. ஜய ஜய சாயீநாத் ……….

    அன்னை தன் அறியாத பள்ளையை கொஞ்சுவதை போல, நீங்கள் உங்கள் பக்தர்களை உங்கள் இனிய வார்த்தைகளால் மகிழ்ச்சி அடையச்செய்கிரீர்கள். பக்தர்களின் துன்பங்களை நீக்க நீங்கள் சுயமாக அவர்களின் துன்பத்தை தாங்கள் சுமக்குரீர்கள், மற்றும் சில துயருற்ற பக்தர்களின் வியாதி கஷ்டத்தை போக்க நீங்கள் அவர்களுக்கு உடனடியாக தரிசனம் தருகிறீர்கள். இது போன்ற அவரின் நிறந்தர மேற்பார்வை செய்ததனால் உங்களின் இந்த உடலில் மிக அதிகமான கஷ்டம் ஏற்பட்டிருக்கலாம், ஆதனால் ஹே சாயீநாத், இப்போழுது நீங்கள் கோவிலில் ஓய்வேடுங்கள். அன்புடன் ஆரத்தி எடுக்கிறேன்……..

    க்ஷ்மா க்ஷயன் ஹீ ஷோபா ஸுமன்ஷேஜ் த்யாவரீ ஹோ. த்யாவீ தோடீ பக்த் ஜனாம்சீ புஜனாதி சாகரீ ஹோ. ஓவாளிதோ பஞ்சப்ராண ஜ்யோதீ ஸுமதீ கரீ ஹோ. ஸேவா கிந்கர் பக்த் ப்ரீதீ அத்தர் பரிமள ஹோ. ஜய ஜய சாயீநாத் ……….

    நீங்கள் எங்களின் மன்னிப்பு - ப்ராத்னையின் பூக்களால் எழில்மிகு இந்த அழகிய படுக்கையில் படுத்துகொள்ளுங்கள். உங்கள் பக்தர்களின் பூஜை முதலிய தொண்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் எனது பஞ்சப்ராணத்தை திரியை, நல்லிறவின் ஜோதி ஏற்றி உங்களுக்கு தியாகம் செய்கிறேன். இந்த பக்தனின் பக்தியே உங்களுக்கு சிறு சேவைதான், அதன் சார்பாகதான் வாசனை த்ரவ்யம் மற்றும் அதன் கண்ணீர் தான் புனித தீர்த்தமாக இருக்கிறது. ஹே சாயீநாத், இப்போழுது நீங்கள் கோவிலில் ஓய்வேடுங்கள். அன்புடன் ஆரத்தி எடுக்கிறேன்……..

    ஸோடுநீ ஜாயா துக் வாடதே சாயி த்வச்சரணாம்ஸீ ஹோ. ஆஞேஸ்தவ தவ ஆஷீப்ரஸாத கேவுநி நிஜ் ஸதனாஸீ ஹோ. ஜாதோ ஆதா யேவூ பூனரபி த்வச்சரணாம்சே பாஷீ ஹோ. உடாவு துஜலா சாயீமாவுலே நிஜஹித் ஸதாயாஸீ ஹோ. ஜய ஜய சாயீநாத் ……….

    ஹே சாயீ, எங்களுக்கு உங்கள் பாதங்களை விட்டு செல்வதென்றால் மிக சங்கடமாக இருக்கிறது. இருந்தாலும் உங்களின் ஆசீர்வாத ப்ரசாதம் எடுத்து கொண்டு உங்களின் அனுமதியுடன் நாங்கள் எங்கள் வீடுகளுக்கு செல்கிறோம். ஆனால் சாயீ அன்னையே, நாங்கள் எங்கள் நலனுக்காக காலையில் உங்கள் எழுப்ப வருவோம். ஆதனால், ஹே சாயீநாத், இப்போழுது நீங்கள் கோவிலில் ஓய்வேடுங்கள்.


    ஆதா ஸ்வாமி ஸுகே
    ஸ்ரீ. க்ரு. ஜா. பீஷ்மா


    ஆதா ஸ்வாமி ஸுகே நித்ரா கரா அவதூதா.
    பாபா கரா, சாயிநாதா. சிந்மய ஹே சுக்தாமா ஜாவுநி பஹுடா ஏகாந்தா. த்ரு.

    ஹே என் சுவாமி, சாயீ யோகி, இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள். பாபா ஹே சாயீநாத், இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள். ஹே பரமாத்மா, சுகத்தின் தேவஸ்தானம், இப்போது நீங்கள் போய் ஏகாந்தில் ஓய்வேடுங்கள்.

    வைராக்யாசா கூந்சா கேவுநி சீக ஜாடீலா.
    பாபா சௌக் ஜாடீலா. த்யாவரீ ஸூப்ரேமாசா ஸிடகாவா திதலா. ஆதா.

    பற்றற்ற தன்மையின் துடைப்பம் எடுத்து நான் படுக்கையறை யை துடைத்தேன். துடைத்து கொண்டே நான் அன்பு நீரை தேளித்தேன். இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள்.

    பாயகடாசா தான்ல்யா சுந்தர் நவவிதா பக்தி.
    பாபா நவவிதா பக்தி. ஞானாச்யா ஸமயா லாவுநி உஜளல்யா ஜ்யோதீ. ஆதா.

    அதன் மேல் புதிய விதமான பக்தியின் ஆழகிய கம்பளி விரித்தேன். பாபா, புதிய விதமான பக்தியின் ஆழகிய கம்பளி விரித்தேன். மற்றும் ஞான வடிவ தீபம்-தூணில் மனத்தின் ஜோதி ப்ரகாசிக்க செய்தேன். இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள்.

    பாவார்தாசா மஞ்சக் ஹிருதயகாஷீ டாந்கிலா.
    பாபா ஆகாஷீ டாகிலா. மனாசீ ஸுமனே கரூனீ கேலே ஸேஜேலா. ஆதா.

    என் இதய ஆகாயத்தில் நான் பக்தியன் மேடை போட்டேன். அதன் மேல் நான் உங்களுக்கு என தூய எண்ணத்தோடு வரிப்பை போட்டேன். இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள்.

    த்வைதாசே கபாட் லாவூநி ஏகத்ர கேலே.
    பாபா ஏகத்ர கேலே. துர்புத்திச்யா காடீ ஸோடுநீ படதே ஸாடீலே. ஆதா.

    அக்ஞானம் மோகம் கபடத்தின் பின்னால் ஓளின்து கொண்டது மற்றும் ஒரு சீரான உணர்வு கிடைத்தது. பாபா உங்களுடன் ஓன்றாக நிறைபெறல் கிடைத்தது. துர்புத்தியின் முடிச்சை தளர்த்தி என்தன் அறியாமை திரையை விலக்கினேன். இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள்.

    ஆஷா த்ருஷ்ண கலபநேசா ஸோடுநி கவபலா.
    பாபா ஸோடுநி கவபலா. தயா க்ஷ்மா ஸாந்தி தாஸீ உப்யா சேவலா. ஆதா.

    ஆசை, பேராசை மற்றும் புலம்பலின் சிக்கல்களை விட்விட்டு, ஹே பாபா, நான் தயை மன்னிப்பு சாந்தி தோற்றமுடையவரை உங்களுக்கு சேவை செய்ய முன்வைக்கிறேன். இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள்.

    அலக்ஷய உந்மநீ கேவுநீ பாபா நாஜுக் துஹஷாலா. நிரஞ்ஜன் சத்குரு ஸ்வாமி நிஜவிலே ஷோஜெலா. ஆதா.

    நான் ஒரே வெறி நிலையில் மிருதுவான கம்பளி சால்வையை உங்களுக்கு போத்தினேன். பாபா மிருதுவான கம்பளி சால்வையை போத்தினேன். ஹே நிரஞ்ஜன் சத்குரு, என் எஜமானே, இப்போது நீங்கள் சுகநித்திரை கொள்ளுங்கள்.

    சத்குரு சாயீநாத் மஹராஜ் கீ ஜெய்.
    ஸ்ரீ குருதேவ தத்த.


    ப்ரசாத் மிளண்யாகரிதா (அபங்க்)
    ப்ரசாதம் பெருவதற்கு முன்
    சந்த் துகாராம்



    பாஹே ப்ரஸாதாசீ வாட. காவே  துவோநியா தாட.

    நான் ப்ரசாதத்திர்காக என் மனத்தட்டுடன் எதிர்பார்த்து நிற்க்கிறேன். எனக்கு உங்களின் சாப்பிட்டு தட்டை கழுவ தாருங்கள்.

    ஷேஷ் கேவுநி ஜாயீன். தும்சே ஜாலியா போஜன்.

    நீங்கள் உங்கள் உணவை சாப்பிட்ட பின்பு, நான் உங்கள் தட்டில்  மீதமான உணவை உட்கொள்ளவேன்.

    ஜாஸோ ஆதா ஏக்ஸவா. தும்ஹா ஆடுநியா தேவா.

    ஹே தேவா, துக்கபட்ட நிலையில் கூப்பிட பின்பு நான் இப்போது உங்களோடு ஒருங்கிணைந்த நிலை பெற்றுள்ளேன்.

    துகா ம்ஹணே ஆதா சித். கரூனி ராஹிலோ நிஷ்சித்.

    துகா சொல்கிறேன், இப்போது என் மனதில் உறுதியான நிலையில் இங்கு இருக்கிறது.

    ப்ரஸாத் மிளால்யான்தர் (பத்)
    ப்ரசாதம் கிடைத்த பின்
    சந்த் துகாராம்

    பாவலா ப்ரஸாத் ஆதா விடோ நிஜாவே. பாபா ஆதா நிஜாவே. ஆபூலா தோ ஷ்ரம் களே யேதஸே பாவே.

    ஹே விட்டலா, எங்களுக்கு உங்கள் ப்ரசாதம் கிடைத்தது, இப்போது நீங்கள் உறங்குங்கள். ஹே பாபா நீங்கள் உறங்குங்கள். உங்களின் முகத்தில் நீங்கள் களைத்த நிலை தெரிகிறது.

    ஆதா ஸ்வாமி சுகே நித்ரா கரா கோபாளா. பாபா சாயீ தயாளா. பூரலே மனோரத் ஜாதோ ஆபூலே ஸ்தளா. ஆதா ஸ்வாமி ……..

    ஹே ஸ்வாமி, இப்போது நீங்கள் சுகமும் அமைதியான உறக்கம் உறங்குங்கள். ஹே கோபாலா, தயாநிதி பாபா சாயீ, எங்கள் வருப்பங்கள் நிறைவேறியது, ஆதனால், நாங்கள் எங்கள் வீட்டுக்கு செல்கிறோம்.

    தும்ஹாம்ஸீ ஜாகவு ஆம்ஹீ ஆபுலா சாடா. பாபா ஆபுல்யா சாடா. ஷுபாஷுப் கர்மேதோஷ் ஹராவயா பீடா. ஆதா ஸ்வாமி ………

    எங்களின் நன்மை-அமங்கல செயலின் குறையை மற்றும் வேதனைகளை போக்கி கொள்ள நாங்கள் மறுபடியும் எழுப்புவோம். பாபா உங்களை மறுபடியும் எழுப்புவோம்.

    துகா ம்ஹணே திதலே உச்சிஷ்டாசே போஜன். உச்சிஷ்டாசே போஜன். நாஹீ நிவடிலே ஆப்ஹாம் ஆபுல்யா பின்ன. ஆதா ஸ்வாமி…….

    துகா சொல்கிறேன்-நீங்கள் எனக்கு நீங்கள் உண்டபின் எஞ்சியதை தந்து நான் உங்களில் ஒருவர், இந்த அனுபவம் தந்தீர்கள். ஹே சுவாமி, இப்போது நீங்கள் சுகமும் அமைதியான உறக்கம் உறங்குங்கள்.

    ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயீநாத் மஹராஜ் கீ ஜெய்.

    ௐ ராஜாதிராஐ யோகிராஜ் பரப்ரம்ஹ சாயீநாத் மஹராஜ்.

    ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயீநாத் மஹராஜ் கீ ஜெய்.

    ■■■■■■■■■■

     


    Facebook Comments