Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: sai prerna in tamil  (Read 25873 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline sathyakala

  • Member
  • Posts: 11
  • Blessings 0
sai prerna in tamil
« on: October 31, 2010, 04:09:06 AM »
  • Publish
  • சாயி பிரேரணா
    (Translated into Tamil by Santhipriya

    பாகம் - 1
    • என் வழியில் நீ வந்தால் உனக்கு எல்லா வழியையும் திறந்து விடுவேன்
    • எனக்காக நீ சிறிது நேரத்தை ஒதுக்கினால் , உனக்கு குபேரனுடைய போக்கிஷத்தை போன்றதை தருவேன்
    • என்னால் நீ பழிச்சொல்லை ஏற்றால் , உனக்கு பூரண அருள் கிடைக்கும்
    • நீ என்னிடம் வந்தால் உன்னை நான் பாதுகாப்பேன்
    • என்னைப் பற்றி நீ மற்றவர்களிடம் கூறிக்கொண்டே இருந்தால் , உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
    • நீ என்னைப் பற்றி நினைத்துக் கொண்டு இருந்தால் உன்னை ரத்னம் பொண்டு ஜொலிக்கும் ஆன்மீக ஞானம் உள்ளவனாக மாற்றுவேன்
    • என் உதவியை நாடி வந்து என்னையே ஏற்றால் , உன்னை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன்
    • எனக்காக உன்னை எந்த விதத்திலாவது நீ தந்துவிட்டால் , உன்னை விலை மதிப்பற்றவனாக்கி விடுவேன்
    • என் வழியில் நீ நடந்தால் , பெரும் புகழ் பெறுவாய் .
    • என்னைப்பற்றி பாடிக்கொண்டே இருந்தால் , எந்த உலகையே நீ மறந்துவிடுவாய் .
    • நீ என்னுடையவன் என ஆகிவிட்டால், அனைவரும் உன்னுடயவர்களாகி விடுவார்கள்
    பாகம் - 2

    • ஒரு கோவிலிலோ , குருத்வாராவிலோ அல்லது மசுதியிலோ செல்லும்போது அங்கெல்லாம் என்னையே நினைத்து கொண்டு இருந்தால் , உனக்கு அனைத்து இடத்திலும் தரிசனம் தருவேன்
    • ஒவ்வொரு கணமும் நீ என்னையே நினைத்துக் கொண்டு இருந்தால் , அந்த ஒவ்வொரு கணமும் நான் உன்னை காப்பாற்றுவேன்
    • எனக்காக சிறிது கஷ்டத்தை நீ ஏற்றுக் கொண்டால் , உனக்கு வாழ்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டத்தையும் விலக்குவேன் .
    • என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால் நீ செய்த அனைத்து பாபங்களையும் ஒழிப்பேன்
    • உன் கையால் நீ எனக்கு பிரசாதம் படைத்தால் , உன் வீட்டிலே உணவு பொருட்கள் நிறைந்தே இருக்கும்
    • என்னுடைய புனிதப் புத்தகத்தை படித்தால் , நீ வாழ்வில் பெரும் வெற்றி அடைவாய்
    • என்னுடைய பக்தர்களைக் காணும்பொழுது அவர்களில் நீ என்னையே பார்த்தால் , உன்னை ஜொலிக்க வைப்பேன்
    • என் நாமத்தை ஒரு மணி மாலை அளவில் உருட்டி ஜபித்தால் , உன்னை சாதுக்களைப் போன்ற ஞானம் உள்ளவனாக்குவேன் .
    • இதயப் பூர்வமாக ஓம் சாயிராம் என ஜபித்தால் , உன்னுடைய அனைத்து வேண்டுகோளையும் நான் கேட்பேன்
    • என் மீதே தியானம் வைத்திருந்தால் , நீ கவர்ச்சி உள்ளவனாக மாறிவிடுவாய்
    • எனக்காக நீ மௌனம் காத்தால் , உனக்கு அமைதி கிடைக்கும்
    • நீ என் எதிரிலேயே அமர்ந்து இருந்தால் , நான் எப்போதும் உன்னுடனேயே இருப்பேன்
    • சாந்திலால் , நீ என்னுடைய துதியை தூய மனதுடன் செய்ததினால் , உன்னுடைய வாழ்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றுவேன்                             

    பாகம் - 3

    • நீ என்னிடம் வந்தால் உன் துயர் நீக்குவேன் , துன்பத்தைக் களைவேன்
    • நீ என்னுடைய புனித பூமியான ஷீரடியில் வாழ்ந்தால் , உன் வீட்டையும் புனித இடமாக்குவேன்
    • என் பிரசாதங்களை நீ பக்தியுடன் ஏற்றால் , உன் நினைவுகளைத் தூய்மை ஆகுவேன்
    • நீ என்னை பக்திபூர்வமாக வணங்கிவந்தால் , உன்னை கர்மயோகியாக மாற்றுவேன்
    • எனக்கு நடக்கும் ஆரத்தியில் நீ சேர்ந்து பாடினால் , உன் நாவில் சரஸ்வதியை வாசம் செய்ய வைப்பேன் .
    • என் வழியில் நீ நடந்தால் உனக்கு முன் நடந்து வழி காட்டுவேன்
    • எனக்காக நீ துன்பமுற்றோர்க்கு உதவினால் , உன் இதயத்தில் ஆனந்தத்தையும் , அமைதியையும் தருவேன்
    • என்னை உன் வீட்டில் நீ வைத்திருந்தால் , உன் வீடு சொர்க்கம் போல ஆகும்
    • என்னுடைய உடி எனும் வீபுதியை நீ நெற்றியில் தடவிக்கொண்டால் , உன் முகமே தெய்வீக களை பெறும்
    • என்மீது நீ பூக்கள் பொழிந்தால் , உன்னுள் நல்ல நினைவுகள் தோன்ற அருள் புரிவேன்
    • என் பாதங்களைத் தொட்டு வணங்கினால் உன்னை அனைவரும் விரும்புவனாக ஆக்குவேன்
    • என் பாதங்களைத் தொட்டு வணங்கினால் உன்னுள் முழுமையாக நான் வியாபித்து இருப்பேன்
    • சந்தனத்தை என் நெற்றியில் பொட்டாக வைத்தால் உன்னை அதிஷ்டசாலியாக்குவேன்
    பாகம் - 4
    • நீ என்னுடைய கல்போன்ற கிரீடத்தின் முன் தலை குனிந்து நின்றால் உன்னுடைய பல்லாயிரக்கணக்கான பாபங்களை விலக்குவேன்
    • நீ சாயி பக்தன் ஆனால் , பக்தி மார்கத்தின் பல வெள்ளங்களில் உன்னை மூழ்கடிப்பேன்
    • நீ என்னுடைய படத்தை உன் உடலில் அணிந்து இருந்தால் உன் உடல் முழுவதும் நான் வியாபித்து இருப்பேன்
    • நீ என்னைப்பற்றி புத்தகம் எழுதினால் அதை பிரபலமானதாக ஆக்குவேன்
    • சீரடியில் வந்து நின்று என் புகழ் பாடினால் உனக்கு அனைத்து நற்குணங்களும் நிறையும்
    • நீ பலமணி நேரம் நின்றுகொண்டு இருந்தபடி என்னை தரிசித்தால் , உன்னை அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல வழி வகுப்பேன் அல்லது அனைத்து
    புண்ணிய தீர்த்த மகிமைகளை உனக்கு நான் அளிப்பேன்
    • நீ என் பாதுகைகளை வணங்கினால் உன்னை என்னுடைய முழு பக்தனாக ஏற்றுக்கொள்வேன்
    • நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால் , உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்
    • நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால் பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்
    • என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
    • உனக்கு சீரடிக்கு வர மனது இருந்தால் , மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வழிப்பேன்
    • நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால் , என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்
    • நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால் , என்னை உன்னுள் நீயே காண முடியும்
    பாகம் - 5
    • உன்னுடைய வாழ்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால் , இந்த வாழ்வெனும் கடலை கடக்க நான் உதவி செய்வேன்
    • நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால் உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
    • துவாறகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமையும் நீ உணர்ந்து கொண்டால் என்னை நீ பார்க்க முடியும்
    • உன்னுடைய வாழ்கையையே என்னிடம் தந்து விட்டால் , உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
    • என் மீது நம்பிக்கை வைத்து என்மீது உன் மனதை செலுத்தி வந்தால் அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
    • வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால் அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
    • என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால் அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
    • என்னையே நீ வேண்டிக்கொண்டால் உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும் நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
    • என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால் அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
    • என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால் , எந்த இடத்தில் வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
    • சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக உணர்ந்தால் , உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
    • என்முன் நீ கைகூப்பி நின்றால் உன் வாழ்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்

     
    பாகம் - 6
    • என்னுடைய பாதயாத்திரையின்போது என் பக்கத்திலேயே நீ நடந்து வந்தால் அனைத்து பாதயாத்திரையிலும் உன்னை நான் அழைத்துக் கொள்வேன்
    • என் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீ சேவை செய்தால் உன்னுடைய அனைத்து சேவையிலும் நானும் பங்கேற்பேன்
    • சீரடிக்கு நடைப் பயணமாக நீ வந்தால் , அனைத்து புண்ணிய இடங்களுக்கும் செல்ல உதவுவேன்
    • ஒருமுறை என் பாதயாத்திரையில் நீ கலந்து கொண்டால் உன்னுடன் எழுபத்தி ஒரு ஜென்மம் நான் பயணிப்பேன்
    • என் பாதயாத்திரையில் ஒன்பது நாள் பயணத்தில் நீ பங்கேற்றால் , உன் உயிர் மூச்சாக நான் இருப்பேன்
    • என் சமாதியில் நீ துணியை போட்டு வணங்கினால் ஒவொரு இழையின் அளவுக்கு நான் உனக்கு நன்மையை திருப்பித் தருவேன்
    • பாதயாத்திரையில் என் பல்லக்கை நீ சுமந்து கொண்டு சென்றால் அதன் சுமையை பூப்போல மாற்றுவேன் .
    • பாதயாத்திரையில் என் பாடத்தை மனதில் நினைத்திருந்தபடி ஸ்ரீ சாயி ஸ்ரீ சாயி என கூவிக்கொண்டே சென்றால் நடக்கும் வலியை உன் கால்கள் உணரவே உணராதது
    • எனக்காக நீ சுயநலம் இன்றி வேலை செய்தால் உன் கைகள் நல்லவற்றையே செய்யும்
    • என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால் , அங்கு என்னையே நீ காணலாம்
    • என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்
    • என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்
    • என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால் அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்

     
    பாகம் - 7
    • ஷீரடிக்கு வந்து என்னுடைய ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நீ என்னுடைய பிரசாதத்தை உண்டால் உனக்கு வரும் அனைத்து தொல்லைகளும் விலகி தீமை ஒழியும்
    • காகாட் ஆரத்தியில் நீ கலந்து கொண்டால் அங்கு உனக்கு என் தரிசனத்தைத் தருவேன்
    • நீ அங்கு வந்து எனக்கு தேங்காயைத் தந்தால் உன்னை ஒரு யோகி போல மாற்றுவேன்
    • என்னுடைய ஆரத்தியில் கலந்துகொள்ள உன் நேரத்தை ஒதுக்கினால் உனக்கு வரும் அனைத்து தடைகளையும் விலக்குவேன்
    • என் ஆலயத்தில் உள்ள கொடியை நீ பக்திபூர்வமாகப் பார்த்தால் என்னுடைய சச்சிதானந்த ஸ்வரூபத்தைக் அதில் காண முடியும்
    • சீரடி மண்ணின் தூசியை உன் நெற்றியில் இட்டுக் கொண்டால் உன் அனைத்து வேலைகளிலும் நான் உதவுவேன்
    • நீ ஆரத்தியில் ஏழும் மணி ஓசையைக் கேட்கும்போது , அந்த ஓளி உன் காதில் சாயி , சாயி என ஒலிப்பதைக் காணமுடியும்
    • என்னை நீ ஒரு வெள்ளி இருக்கை மீது அமர வைத்திருந்தால் , உனக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்
    • இந்த பிரேரணாவை ( மன நிலையை ) என் ஆலயத்தில் வைக்கும் பொழுது உன்னை நான் என்றும் பாதுகாத்து நிற்பேன்
    • இந்த பிரேரணாவை நீ தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கும்போது என்னை பற்றி எழுதும் எழுத்தாளனாக உன்னை மாற்றுவேன்
    • இந்த பிரேரணாவில் நீ என்னுடைய உணர்வுகளை உணர முடிந்தால் , உன்னை நான் ஆத்ம உணர்வு கொண்ட மனிதனக்குவேன் .
    • இந்த பிரேரணாவின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் , உன்னை தினமும் என்னை வணங்க வழி செய்வேன்
    • என்னுடைய இந்த புனித இடத்தில் , தூய்மையுடன் நீ இருந்தால் உன்னையும் கங்கையைப் போல தூய்மையவனாக ஆக்குவேன் .
    பாகம் -8

     • என்னைபற்றிய அனைத்தையும் நீ எடுத்துக் கூறி வந்தால் உன்னுடைய பேச்சுக்களில் நல்லவை , தீயவை பற்றி எடுத்துக் கூறும் திறமை வரும்
    • நீ என் வேலைகளை செய்து வந்தால் , நான் உன் வேலைகளை செய்வேன்
    • நீ என்னை பகவான் ராமராகப் பார்த்தால் , உன்னால் மாயையை வெல்ல முடியும்
    • நீ எனக்கு அணிகலன்களை அணிவித்தால் உன்னை மிக அழகுள்ளவனாக மாற்றுவேன்
    • என்னையே நீ உன்னுடைய பாதுகாவலனாக நினைத்தால் , உன்னை நான் நிச்சயமாகப் பாதுகாப்பேன்
    • என் முன் அமர்ந்துகொண்டு ராம நாமம் ஜெபித்தயானால் , தர்மம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள வழி செய்வேன்
    • என்னை நீ ராமானாகவும் , ரஹீமாகவும் பார்த்தால் உனக்கு தர்மம் என்ன என்பதை புரிய வைப்பேன்
    • என்னை இந்த உலகை காப்பவனாகவும் , அனைத்தையும் கொடுப்பவனாகவும் எண்ணிப் பார்த்தால் உனக்கும் அனைத்தையும் தந்து உன்னை காப்பேன்
    • என்னை சீரடியின் மகானாகப் பார்த்தால் என்னிடம் நீ அடைக்கலம் ஆகிவிட்டவனாகக் கருதுவேன்
    • என்னிடம் எப்போதும் பக்திபூர்வமாக இருந்தால் உனக்கு பிறப்பில் இருந்தும் மரணத்தில் இருந்தும் விடுதலைத் தருவேன்
    • ஷீரடியை நீ புனிதத் தலமாகக் கருதினால் நீயே என்னுடைய பக்தனாவாய்

    பாகம் -9
    • என்னுடைய பாதங்களை நீ வணகினால் அதில் திருவேணி எனப்படும் பிரயாக் நதியைக் காட்டுவேன்
    • என்னுடைய சிலை உனக்கு ஆறுதலைத் தருவதுபோல நீ உணர்ந்தால் உனக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் நான் தருவேன்
    • என்னை நீ தொடர்ந்து வணங்கி வந்தால் ஒழுக்கமான முறையில் வணங்குவதை உனக்கு நான் கற்றுத் தருவேன்
    • உன்னை காப்பவனாக என்னை நினைத்து நீ அபிஷேகம் செய்தால் ஒவ்வொரு அபிஷேகத்தின் பொழுதும் உன்னுடைய பாதுகாவலனாக நான் மாறுவேன்
    • என்னையே நீ அனைத்து கடவுளாக எண்ணிப் பார்த்தால் நான் உனக்கு அனைத்துக் கடவுளுமான ஒரே கடவுளாக நான் மாறுவேன்
    • சாயி மந்திரத்தை சிரத்தையாக செய்தால் மந்திரத்தின் பொருளை உனக்கு உணர்த்துவேன்
    • நீ என்னை பற்றிய அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொண்டால் உன்னை ஞானம் உள்ளவனாக்குவேன்
    • நீ என்னிடம் அன்பு செலுத்தினால் உன்னை என் நிழலில் வைத்திருந்து பாதுகாப்பேன்
    • என்னை உன் குருவாகக் கருதினால் உனக்கு குரு மந்திரத்தை உபதேசிப்பேன்
    • என்னை ஒரு யோகியாகப் பார்த்தால் உன்னால் இந்த அழிவற்ற உலகின் தெய்வீகத்தை பார்க்க முடியும்
    • உடி எனும் வீபுதியை நீ மருந்தாகப் பார்த்தால் , உன்னுடைய அனைத்து நோய்களையும் விலக்குவேன்
    • என்னை ஜோதியாகப் பார்த்தால் , எந்த ஒரு எரியும் விளக்கின் ஒளியிலும் என்னைப் பார்க்க முடியும் .

    பாகம் -10
    • விளக்குகள் அனைத்தையும் நான் என் கைகளால் எற்றுவதாக நீ கருதினால் , அனைத்து விளக்கிலும் கடவுளைக் காணலாம்
    • மற்ற மதத்தினருடன் நீ ஒற்றுமையாக வாழ்ந்தால் அனைவரையும் உன்னுடைய நெருக்கமானவர்களாக மாற்றுவேன்
    • சாயிராம் என்பதையே நினைத்திருந்தால் நீ செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
    • நீ எனக்காக அன்னதானம் செய்தால் நீ தந்த ஒவ்வொரு பருக்கைக்கும் உனக்கு நல்லதை தருவேன்
    • என்னுடைய சமாதியை உன் கரங்களினால் தொட்டு வணங்கினால் உனது விதி ரேகைகளை மாற்றி அமைப்பேன்
    • என் சமாதியில் சாயி ராம் சாயி ராம் என நீ குரல் எழுப்பினால் என்னுடைய ஆலயத்தின் அனைத்து சுவர்களிலும் சாயி ராம் என்ற உணர்வு ஒலிப்பதை நீ காணலாம்
    • என்னுடைய சமாதியில் நீ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால் நீ என்னால் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டதாகக் கருதுவேன்
    • என்னுடைய புனித இடங்களில் நீ தாராளமாகத் தானம் செய்தால் அதை மிகவும் நல்ல செயலாகவே கருதுவேன்
    • என்னுடைய ஆரத்தியின் பொழுது நீ கைகளை தட்டிக் கொண்டு இருந்தால் அந்த கைகளின் உள்ளே தெய்வீகத்தை தருவேன்
    • எனக்கு முன்னால் நீ நடனமாடினால் , அந்த நடனத்தின் இசை கருவிகளின் கீதமாக நான் இருப்பேன்
    • என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால் உன்னுடைய இதயத்திற்கு வலிமை சேர்ப்பேன்
    • ராமநவமி பண்டிகையை நீ கொண்டாடினால் நீ கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் நான் இருப்பேன்
    • என் ஆலயத்தை சுற்றி நீ நடந்து வந்து வணங்கினால் அது உன்னுடைய அனைத்து கடவுட்களையும் வணங்கியதற்கு சமமாகிவிடும் .

    பாகம் -11
    நான் பேசிய ஒவ்வொரு சொல்லையும் உலகத்துக்கு எடுத்துரைத்தால் என்னுடைய வார்த்தைகள் உனக்கு மன அமைதி தரும்
    • நீ மனதார , இதயபூர்வமான சிரத்தையுடன் என்னை வணங்கி வந்தால் உனக்கு ஆன்மீக சந்தானத்தை தருவேன்
    • கங்கை நதிபோன்ற என்னைப் பற்றிய நினைவில் மூழ்கினால் இந்த உலகின் சம்சாரக் கடலில் இருந்து உன்னை கரை ஏற்றுவேன்
    • குரு மந்திரத்தை என்னுடைய புனித இடத்தில் ஓதி வந்தால் ஒவ்வொரு மந்திரத்திலும் குருவைக் காண முடியும்
    • நீ கண் உறங்காமல் சீரடியில் என்னை இரவு முழுவதும் பூஜித்தால் அதன் பயனை உனக்கு நான் உணர்த்துவேன்
    • என் முன் அமர்ந்துகொண்டு உன் துயரத்தைக் கூறினால் உன்னுடைய அனைத்து துயரத்தையும் ஆனந்தமயம் ஆனதாக மாற்றுவேன்
    • எனக்கு ஒரு மாலை ரோஜாவை அணிவித்தால் உன் வாழ்கையை மணமுள்ளதாக மாற்றுவேன்
    • என்னுடைய புனித இடத்தில் வந்து தீபம் ஏற்றினால் உன் வாழ்விலும் ஒளியை ஏற்றுவேன்
    • என்னுடைய அனைத்து பக்தர்களுக்கும் நீ பிரசாதம் தந்தால் உன்னை நல்லொழுக்கம் உள்ளவனாகுவேன்
    • என்னுடைய புனிதக் கட்டைவிரலை நீ துதித்தால் குருபூர்ணிமா என்ற புனித பண்டிகையின் பலனைத் தருவேன்
    • என் முன் நின்று ஓம் என்ற மந்திரத்தைக் கூறினால் இந்த உலகின் அனைத்து ஆனந்தத்தையும் உனக்கு நான் தருவேன்



     



    Offline SS91

    • Members
    • Member
    • *
    • Posts: 18462
    • Blessings 37
    • OM SHRI SAI NATHAYA NAMAHA
      • Sai Baba
    Re: sai prerna in tamil
    « Reply #1 on: October 31, 2010, 10:47:29 AM »
  • Publish
  • SaiRam,

    Baba blessings. Thanks alot for sharing Sai Prerna in tamil. My mother would love to have it. Thanks again!
    Baba you leelas are always amazing.
    JaiSaiRam


    « Last Edit: December 02, 2011, 02:43:12 PM by subhasrini »
    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

     


    Facebook Comments