Join Sai Baba Announcement List

DOWNLOAD SAMARPAN - Nov 2018

Author Topic: Voice of Shirdi Sai - Daily messages !!!  (Read 2705 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline SS91

  • Members
  • Member
  • *
  • Posts: 18450
  • Blessings 37
  • OM SHRI SAI NATHAYA NAMAHA
    • Sai Baba
Voice of Shirdi Sai - Daily messages !!!
« on: February 17, 2018, 08:32:22 AM »
  • Publish

  • அன்பு குழந்தையே... இன்று உன் கண்ணீல் ஏற்பட்ட கண்ணீரையை கண்டு நான் கலங்கி நிற்கிறேன். உன் கண்ணீரில் உன் வாழ்க்கையில் உனக்கு ஏற்பட்ட வலிகளால் நீ துடித்து அனுபவித்த அந்த நேரத்தை நினைத்து என் மனம் தாங்காமல் நான் துடிக்கிறேன். உன் சூழ்நிலைகளும் உனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளும் உன்னை எந்த அளவில் பாதித்தது என்பதை என்னால் உணரமுடிகிறது. நினைத்தாலே உனக்குள் ஏற்படும் நடுக்கமும் பயத்தை பார்க்கும் நான் கண் கலங்கி நிற்கின்றேன். என் குழந்தை கோழை அல்ல. எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தாங்கி நின்று கடந்து செல்லும் தைரியம் உனக்கு இருக்கிறது, நீ சமாளித்து நடைப்போட்டாலும் உன் மனதில் இருக்கும் குமுறலை வெளியே மற்றவர் உணராத வண்ணம் நீ நடக்கிறாய். கர்மவினை என் குழந்தையை கலங்க வைக்கும் போது நானும் உன்னுடன் தான் வலியை அனுபவிக்கிறேன். உன் சந்தோஷத்திலும் சரி துக்கத்திலும் சரி உன்னுடன் தான் இருப்பேன். உன் வலியை மாற்றுவேன் என் பிள்ளையின் வளர்ச்சிக்காக நான் பாடுபடுவேன் உன் கண்ணீர் கவலை எல்லாம் முடியப்போகிறது. கூடிய விரைவில் உனக்கான வெற்றி இலக்கு காத்துக்கொண்டு இருக்கிறது. பந்தய கோட்டை எட்டும் தருவாயில் அது உன்னை சோதித்து பார்க்கும். உன் பலம் என்ன, நம்பிக்கை என்பது எந்த அளவில் இருக்கிறது என்று, அந்த கட்டத்தில் தான் நீ இருக்கிறாய், உன் வாழ்க்கைக்கு பொறுப்பாளி நானே உனக்கான அனைத்தையும் நான் உன்னிடம் வந்து சேர்ப்பேன். நீ அழாதே. உனக்கான அனைத்தும் தயாராக உள்ளது. அது மற்ற விஷயங்கள் போல நிலையற்றவை அல்ல. உன் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுக்கும் பொக்கிஷம். உன்னை நான் சரி செய்வேன். உன்னுடன் எப்போழுதும் நான் இருப்பேன்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...
    « Last Edit: February 17, 2018, 07:03:00 PM by SS91 »
    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

    Offline SS91

    • Members
    • Member
    • *
    • Posts: 18450
    • Blessings 37
    • OM SHRI SAI NATHAYA NAMAHA
      • Sai Baba
    Re: Voice of Shirdi Sai - Daily messages !!!
    « Reply #1 on: February 19, 2018, 09:14:50 AM »
  • Publish

  • Why you think that no one is yours...Am I not yours? Never bring such thought in mind.

    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

    Offline SS91

    • Members
    • Member
    • *
    • Posts: 18450
    • Blessings 37
    • OM SHRI SAI NATHAYA NAMAHA
      • Sai Baba
    Re: Voice of Shirdi Sai - Daily messages !!!
    « Reply #2 on: February 20, 2018, 08:46:27 AM »
  • Publish

  • நீ எங்கு இருந்தாலும் உன்னுள் இருக்கும் கவலைகளை காட்டிக்கொள்ளாமல்,
    உதடுகளில் புன்னகையுடன் இருக்கிறாய். அது தரும் நம்பிக்கையுடன் வேறு எதுவும் தராது என்று இருக்கிறாய். உன்னை சுற்றியுள்ளாவர்களையும் மகிழ்ச்சியுடன் இருக்க செய்கிறாய். உனது விடியலுக்காக காத்திருக்காமல், மற்றவர்களின் விடியலுக்காக துணையாக இருக்கிறாய். உன்னை அவமதிப்பவரை கண்டு ஒருப் போதும் விரக்தியடையாமல் இருக்கும், நீ அவர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு. அசாதாரண சக்தியுடன் வளர்ந்து அவர்கள் முன் வந்து நிற்பாய். என் கண்மணியே என் கருணை பார்வை உன் மீதே எப்போதும் இருக்கிறது, பயமின்றி உன் இலக்குகளை நோக்கி போய்க் கொண்டிரு...

    ஓம் ஸ்ரீ சாய் ராம்...
    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

    Offline SS91

    • Members
    • Member
    • *
    • Posts: 18450
    • Blessings 37
    • OM SHRI SAI NATHAYA NAMAHA
      • Sai Baba
    Re: Voice of Shirdi Sai - Daily messages !!!
    « Reply #3 on: February 21, 2018, 12:06:59 PM »
  • Publish

  • நீ உன் கண்களில் ஏந்தியிருக்கும் துக்கத்தினால் ஏற்பட்ட கண்ணீரைத் துடைத்துவிட்டு விரைவில் ஆனந்தக் கண்ணீரை வரவழைப்பேன். உன் தந்தை நானிருக்கையில் என்ன நடந்துவிடும் என்று இந்தக் கலக்கம். கலங்காதே. கலங்குவதால் என்னை விட்டு தூரமாகிறாய். நீ என் குழந்தை. நானே என்னிடம் வரவழைத்துக் கொண்ட செல்லக்குழந்தை. உன்னை எப்படி கைவிடுவேன். தைரியமாக இரு. உற்சாகமுடன் மீண்டும் என் ஆரத்தியை தொடங்கு. எதையும் இழந்துவிடவில்லை நீ . எல்லாம் பொக்கிஷமாக என் கஜானாவில் பாதுகாப்பாக உள்ளது. உன்னை சேரவேண்டிய நேரத்தில் சேர்ந்துவிடும். தலை நிமிர்ந்து அனைவரையும் எதிர்கொள்ளும் நேரம் மிக அருகில் நெருங்கிவிட்டது. நிம்மதியுடன் ,சந்தோஷத்துடன் இரு.

    ஓம் ஸ்ரீ சாய் ராம்...
    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

    Offline SS91

    • Members
    • Member
    • *
    • Posts: 18450
    • Blessings 37
    • OM SHRI SAI NATHAYA NAMAHA
      • Sai Baba
    Re: Voice of Shirdi Sai - Daily messages !!!
    « Reply #4 on: February 22, 2018, 01:17:50 PM »
  • Publish

  • உங்கள் குருவாகிய என்னிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமான அன்பு கொள்ளுங்கள். இதைத் தவிர வேறுவழிபாடு வேண்டாம். குருவே கடவுள் என்பதில் உறுதியாக நில்லுங்கள்.

    எதிர்ப்பதற்கு அல்ல, பொறுப்பதற்கே தைரியம் வேண்டும். உறுதியான நம்பிக்கை வேண்டும். இன்று கிடைக்கும் என்றிரு. இன்று கிடைக்காவிட்டால் நாளை கிடைக்கும் என்று எதிர்பார்த்திரு. நாளையும் கிடைக்காவிட்டால் மறுநாள் கிடைக்கும் என எதிர்பார். உனது எதிர்பார்ப்பைத் தாண்டினாலும் கிடைக்காத போது ஒருநாள் கிடைக்கும் என்றிரு. நிச்சயம் கிடைக்கும். ஸ்ரீ சாயி தரிசனம்

    A Person, who has controlled his mind, can achieve any success in his life. How far you are trying to control your mind?
    The mind that judges not others ever remains tension-free.
    http://lh5.ggpht.com/_lOgd1uS-wX0/TCOlFNMxIBI/AAAAAAAAE88/GpxUgxnwioE/why_fear_when_i_am_here.jpg

    Facebook Comments