Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்  (Read 21434 times)

0 Members and 2 Guests are viewing this topic.

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"பாபா எங்கிருக்கிறார் என்று எவருக்கும் தெரியாத வகையில்
நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகள் என்னவோ,
பக்தர்களுக்குப் பின்னால் எந்நேரமும் அரணாக நிற்கிறார்
என்பதை பக்தர்கள் உணரவேண்டும்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"பாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த
உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு
குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது
கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும்,
சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது
உறுதியான விசுவாசமே.மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்?
ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்!
சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை.
பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட
சிஷ்யனுக்கு தெரிவதில்லை!மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப்
போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும்
புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக
சரணடைவோமாக"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"அன்புக் குழந்தையே!
உனக்கு வருவதாக நினைக்கிற நன்மையும் தீமையும் நான் உன்னை சரிபடுத்துவதால்
வருகிறது என்பதை உணர்ந்துகொள். உன்னை மேம்படுத்தவே, இதை மேற்கொண்டு
வருகிறேன். உனது உணர்வு பக்தியாக மாறி என்னையே நீ குலதெய்வமாக வழிபடுவாய்.
எந்த நிலையிலும் அப்பா கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை உனக்குள் வேண்டும்.
என்ன கஷ்டமானால் என்ன எல்லாம் அப்பாவையே சேரும் என்று எண்ணிக்கொள்.
இந்த மானுட தேசத்திற்கு கிடைக்கும் சுகம், புல்லின் மீது பூத்திருக்கும் பூவை போன்றது.
வெயில் வரும்போது காய்ந்து உலர்ந்து காற்றில் பறந்துவிடும் பூவைப் போல கஷ்டத்தில்
அடிபட்டு நோயில் வாடி உதிர்ந்துபோகும் தன்மை கொண்டது. இந்த நிலையாமையை
நினைத்து, என் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இத்தகைய நிலையாமையிலும்
என்னை அடைந்துவிடுவார்கள். அவர்களின் எதிர்காலம் என் கையில் இருக்கும்.
நான் அடைக்கலமாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து இவ்வுலக வாழ்வில்
நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகள் அனைத்தையும் என் மீது வைத்துவிட்டு சுகமாக
நடப்பவர்களுக்கு இதுவே பலன். மகளே இன்னும் சிறிது காலம் இந்த சோதனையை
சகித்துக்கொள்கிறாயா அல்லது என்னை விட்டு விலகி தொடர்ந்து துன்பத்தை
அனுபவிக்க போகிறாயா? . அப்பா நீயே கதி என்றால் உன்னை கையில் தூக்கி
வைத்துக்கொள்வேன். வேண்டாம் எனக்கு எந்த சோதனையும் வேண்டாம் என்னை
இப்படியே விட்டுவிடு என்று சொன்னால், நான் விட்டுவிட்டு பக்கத்தில் நின்று வேடிக்கை
பார்ப்பேன். இடையில் வரும் கஷ்டங்களுக்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.
சரி என்று ஒப்புக் கொண்டால் உனது கவசமாக இருந்து உன்னை காப்பேன்.
வாழ்க்கையில் ஜெயிக்கலாம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து
இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும்
நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.
நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,
அழிப்பவனுமாம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"என்னை தஞ்சம் அடைந்து விட்டாயல்லவா!
இனி எதற்கும் பயப்படாதே.
உன் பயனம் என் பாதையை நோக்கியிருக்கட்டும்.
உனது மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றையும் என்னிடம் சமர்பித்து விடு.
இவ்வுலக வாழ்க்கையில் உன் கையில் ஏதும் இல்லை.
எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன்.
நம்பிக்கை எனும் அச்சாணியாக என்னை மனதினில் நிறுத்து.
பொறுமையாக வாழ்ந்து வா.
உன்னை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் நான் சேர்ப்பிக்கிறேன்.
நானே உன் சத்குரு, நானே ஈசன் என்னையே வணங்கு,
என் நாமத்தை எப்போதும் ஸமரிசித்து கொண்டிரு ,
என்னை உன் மனதில் நினைத்து உன் கர்மாவை செய்து வா.
அது போதும் உனக்கு .உன்னை நான் கைவிட மாட்டேன் என்னை நம்பு.
இனி வரும் காலம் வளம் பெரும், உன் வாழ்வில் வசந்தம் வீசும்..

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,
அழிப்பவனுமாம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில்
அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற
சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும்
தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா
வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,அழிப்பவனுமாம்.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,
அழிப்பவனுமாம்."

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு
காட்டிக்கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய சொல்லுக்கு
கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.."

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான
மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில்
கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ
தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம்
ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில்
கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும்
இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார்.
ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான்.
இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற
முடியும் ; தோன்றுகிறார்."

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"என்னிடம் வரும் எல்லா மனிதர்களும் பணம், ஆரோக்கியம்,
குழந்தைகள் இவைகளையே கேட்கிறார்கள். நான் என் பக்தர்களுக்குக்
கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்த மேன்மையான
ஆத்மீக அனுபவத்தைத் தவிர, வேறு எதுவும் வேண்டாமென்று
கேட்கும் மனிதன் கிடைப்பதே அரிது"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"குரு ஒரே கடவுள். சற்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு
கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிஷ்டத்தை
மாற்றிவிட இயலும்.அவருக்கு சிறப்பாகக் சேவை செய்வோமானால்,
நாம் நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம்.நியாயம், மீமாம்ஸம்
போன்ற தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை.

அவரை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக்கொள்வோமானால்,
நமது அனைத்துத் துன்பங்கள், கவலைகள் என்னும் கடலை எளிதாகக்
கடந்து செல்லலாம். ஆற்றையும் கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை
நம்பியிருப்பதைப் போன்றே,இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில்,
நமது சற்குருவை நாம் நம்பவேண்டும். நமது அடியவர்களின் தீவிரமான
உணர்வையும்,பக்தியையும் அவர் நோக்கி ஞானத்தையும், சாஸ்வதமாக
கழிபேருவகையையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறார்."

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





"இதயத்தில் காயம் உண்டாகாதே

யாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ,
அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ
உன்னிடம் வரலாம். ருணானுபந்தம் இருந்தாலொழிய
ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால்,
உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான
மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி
அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ."

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





மசூதி (துவாரகாமாயி) மிகவும் பழையதாகவும் பாழடைந்த
மண் கட்டிடாமாகவும் இருந்தது. அடிக்கடி கூரையிலிருந்து
கற்களும் மண்ணும் உதிருவது வழக்கம். ஒருநாள் பாபா
சில பக்தர்களுடன் பகலுணவு உண்டு கொண்டிருந்தார்.
தலைக்கு மேல் ஏதோ இடிவது போன்று சத்தம் எல்லோருக்கும்
கேட்டது. உடனே பாபா தம் கையை உயர்த்தி "இரு, இரு" என்றார்.
உடனே சத்தம் நின்று விட்டது. எல்லோரும் உணவை முடித்தவுடன்
பாபாவும் பக்தர்களுடன் வெளியே வந்துவிட்டார். உடனே மேலேயிருந்து
மண்ணும் கல்லும் கூரையின் பெரும்பகுதியும், இடிந்து, பலத்த சத்தத்துடன்
சற்று முன்பு பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில் விழுந்தது.
அப்போதுதான், யாரிடம் பாபா 'இரு' என்று ஊறினார் என்பதை
எல்லோரும் புரிந்து கொண்டனர். இடிந்து கொண்டிருந்த கூரையிடம்
தான் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். அதுவும் நல்ல பையனைப்
போல அவர் தமது மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு வெளியேறும்
வரை காத்திருக்கவே செய்தது.."

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





“நீயே சரணம் என்று தஞ்சம் அடைந்த பக்தனின் துன்பத்தையும் சாயி ஏற்பார்"

இவ்வாக்கு சாய் நாதர் அவர் பக்தர்களின் மேல் கொண்டுள்ள
உள்ளன்பின் வெளிப்பாடே ஆகும். துன்பத்தை அவர் காலடியின் கீழ் வை;
அடுத்தகட்ட வேலையை கவனி; சாய் பாபாவின் மீது உறுதியான
நம்பிக்கை வை; கண்டிப்பாக நிலைமை மாறும். இது அவர் பக்தர்கள்
தங்கள் வாழ்வில் கண்ட உண்மை அனுபவங்கள் ஆகும். பிரச்சனை
உள்ளவர்கள் உங்கள் மானசீக குருவை நினைத்து இதனைக் கடைப்பிடியுங்கள்:
வரும் நாட்களில் என் நிலைமை மாறும் என நம்புங்கள்
சாய் என் வலியை மாற்றுவார் என திடமாக நம்புங்கள்
சாய் ஆதரவு என்றும் எனக்கு உண்டு என மனதார எண்ணுங்கள்
சாயிடம் உள்ள சக்தி என் நோய்களைக் குணப்படுத்தும் கண்டிப்பாக
நானும் சாயின் அருளால் குணமாவேன் என மனதார நம்புங்கள்

உங்களுடைய கவலைகள் அனைத்தையும் சாய் பாபாவின் திருப்பாதங்களின்
அடியில் வையுங்கள்.உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ உங்கள்
பிரச்சனைகளைப் பற்றி என்ன கூறினாலும் கவலைப்படாதீர்கள்.
சாய் பாபாவை முழுமனதோடு நேசிப்பது எப்படி என்பதை மட்டும்
கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனம் முழுவதும் சாய், சாய், சாய்
என நிறைந்திருக்க வேண்டும்.ஒவ்வொரு நொடியும் சாய் பாபாவை
நினைக்க வேண்டும், அவரின் சச்சரித்திரம் பாமாலைகளை நாவும் பாடிட
வேண்டும். இவ்வாறு சாய் நாதரை உங்கள் உடல் முழுவதும் நிரப்பினால்
உங்கள் தேவைகளை அவர் நிறைவேற்றுவார். சித்திகள் அனைத்தும்
கொண்ட சாய் மகானின் நினைவுகளே உங்கள் மனதின் காயங்களை
குறிப்பாக உடல் நலக்குறைவைப் போக்கும் அருமருந்து.

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





என் செல்லப்பிள்ளையே!

எதற்காக இந்தப் புலம்பல்? ஏன் இந்தத் தள்ளாட்டமும், சோர்வும்?
உன் இறுதி நாள் வரையில் உனக்குத் துணை செய்வேன் என்று நான்
ஒரு தரம் சொல்லிவிட்டு மனம் மாறிப் போவதற்கு மனிதன் கிடையாது.
உன்னைப் படைத்த பரப்பிரம்மம் என்று பலமுறை எடுத்துச் சொல்லியும்
எதற்காக இந்த அவநம்பிக்கை?

வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பது நீ அறியாததா?
வாழ்க்கையில் நீ நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால், பிறகு நான் எதற்கு?
வாழ்க்கை என்ற ஒன்று எதற்கு? அனைத்தும் அனுபவம் தருவதற்காக
உனக்குத் தரப்படுபவை என்று நான் விளக்கிக் கூறியும் எதற்காக இப்படி
அறியாமையால் அவதிப்படுகிறாய்?

உனக்குத் துயரத்தை தருவது இப்போதைய உனது நிலையல்ல. உனது
தன்னம்பிக்கைக்குறைந்த தன்மை, அதாவது அவநம்பிக்கை என்பதைத்
தெரிந்துகொள். உயிரே போனாலும் தானாகப் போகட்டும், அது உன் உடலில்
இருக்கும் வரை தொடர்ந்து போராடு. கோழையாக அழுது புலம்பாதே. தலைவலியாக
இருந்தால் என்ன? தலை போகும் காரியமாக இருந்தால் என்ன? இந்த வாழ்க்கையில்
இந்த ஒரு தரம் மட்டுமே நீ கடினமான பாதையைக்கடந்து போகப் போகிறாய்..
இதோ நடுப்பகுதியைத் தாண்டிவிட்டாய். இன்னும் கொஞ்ச நேரம்.. கொஞ்ச தூரம்..
சுமையை இறக்கிவைக்கும் காலத்தை எட்டிப்பிடிக்க இன்னும் சற்று அவகாசம்தான்
இருக்கிறது..

அதற்குள் அவசரப்பட்டுவிடாதே சோதனையை சகிக்கிறவன்தான் பாக்கியவான்.
ஏனெனில்,சோதனைக் காலத்தில் அவனோடு நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.
பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடத் தயாராகிறவன் பாக்கியவான், அவனோடு
கைகோர்த்து யுத்த களத்தில் அவன் சார்பாக நான் நிற்கிறேன்.. இழிவு
படுத்தப்படும்போது சகிக்கிற நீ பாக்கியசாலி.. உன் இழிவுகளை நான் புண்ணியங்களாக
மாற்றிக் கொடுத்துக்கொண்டு உன் துயரத்தில் பங்கெடுக்கிறேன்..

சொல்வதெல்லாம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒன்றையும்
செய்யவில்லையே என்று நீ கேட்பாய்.. அந்தளவுக்கு உன்னை புத்திசாலியாக நினைத்துக்
கொண்டிருப்பாய்.. நான் செய்வது உனக்குத் தெரியும்போது, நீ என்னை முகம் முகமாகப்
பார்க்க முடியாது, தலை கவிழ்ந்து கொண்டிருப்பாய்.

நீ விரும்புகிற வழிகளில் அல்ல, நான் விரும்புகிற வழிகளில் உன்னை நடத்திச் சென்று
ஜெயிக்க வைப்பதுதான் எனது நோக்கம். அந்த நோக்கத்தில் நான் உறுதியாக
இருக்கிறேன், அவநம்பிக்கை கொண்டு அதை நீதான் தளர்த்துகிறாய்.

நான் வளர்க்கிற சிறுத்தைக் குட்டியாக நீ மாற வேண்டும். பசி பட்டினி பொறுத்தாலும்
கம்பீரத்தை கைவிடக்கூடாது.. வாய்ப்பு கிடைக்கும்போது வெற்றியோ தோல்வியோ
முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும். ஆழ்கடலாக இருந்தால் என்ன?ஆகாயவெளியாக
இருந்தால் என்ன? நான் உன்னோடு இருக்கும் போது அவை அனைத்தும் உனக்கு
அற்பமானவைதான் என்பதை மறந்துவிடாதே.

நீ ஞானியாக இருந்தால் நான் உனக்கு வேறு மாதிரி உபதேசித்திருப்பேன். “இந்த
தேகமானது கர்மாதீனமாக ஏற்பட்டது. தன்னை உண்டு பண்ணிய கர்ம வேகம் எதுவரையில்
இருக்குமோ, அந்தக் காலம்வரை, பிராணனுடன் இந்த தேகம் இருந்துகொண்டிருக்கும்.
அது கனவு போன்றது. ஆத்ம சாட்சாத்காரம் பெற்ற ஞானியும், யோகத்தில் முன்னேறியவரும்
நிலையற்ற இந்த தேகத்தை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். நீயும் அப்படியே இரு”“
என போதித்திருப்பேன்.

ஆனால், நீயோ சம்சாரத்தில் இருக்கிறாய்.. உனக்குத் தேவையானது இப்போது, பிரச்சினையில்
இருந்து விடுதலை.. மிகப் பெரிய அளவில் எரியும் அக்னியானது எப்படி விறகுக்
கட்டைகளை எரித்து சாம்பலாக்குகிறதோ, அப்படி, என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்,
பக்தியும் பிரச்சினைகள் என்கிற கட்டைகளை, பாவக் குவியல்களை எரித்துச்சாம்பலாக்கிவிடும்.
யோகம், சாங்க்யம்,தர்மத்தை அனுசரிப்பதால் வரும் பலன்கள், வேதத்தை பாராயணம்
செய்வதால் கிடைக்கும் பலன், தவம்,தியாகம் போன்றவை தரும் எல்லா
நன்மைகளைக்காட்டிலும் என் மீது பக்தி செய்வதால் உனக்கு கிடைக்கும் பலனின்
அளவு அதிகம்.

நீ பலனைக் கருதாமல் பக்தி செலுத்து. நான்உன் பலனை வைக்காமல் எடுத்துத்
தருவேன்.உரியவரின் கூலியை கொடுக்காமல் வைத்துக்கொள்ள மாட்டேன்
என்பதற்கு, நானே உதாரணமாகவாழ்ந்ததை நினைவு படுத்துகிறேன். எனக்கு
ஒருபக்தன் ஏணி எடுத்துப் போட்டான், நான் அவனுக்குஇரண்டு ரூபாய் கொடுத்தேன்.
எதற்கு இப்படி தருகிறீர்கள் என்று என் பக்தர்கள் கேட்டபோது,உழைத்தவனின்
கூலியை வைத்துக் கொள்ளக்கூடாது என்றேன். இந்த உதாரணம் உனக்கு நினைவு
இருக்கும் என நினைக்கிறேன்.

இதை உணராமல், என் மீது வைக்கிற பக்தியில் ஏற்படுகிற சுனக்கம் காரணமாகத்தான்
தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. உன்னை புடம் போடுகிறேன் என்று சொல்லிப்
பார்த்தேன்.. அழகு படுத்த இப்போது உன் அஸ்திவாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்
என்று கூறினேன். நீ எதையும் லட்சியம் செய்யாமல், புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.

எப்போதும் என் மீது பக்தி கொண்டுள்ளவன் மாறாத தைரியம் உள்ளவனாக இருப்பான்.
அப்போது வியாதிகளுக்கும், கவலைகளுக்கும் வலிகளுக்கும் இன்னல்களுக்கும்
எங்கு இடம் இல்லையோ, யாரும் பசியாலும் தாகத்தாலும் முதுமை பற்றிய பயத்தாலும்
எங்கு வருத்தப்படுவது இல்லையோ, எவ்விடத்தில் மரண பயம் இல்லையோ,
எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடம் இல்லையோ,
எவ்விடத்தில் ஜீவன்கள் பயமின்றி உலவுகின்றனவோ அவ்விடம்தான் சொர்க்கம்
என்பதை உணர்வீராக.

அவனுள் அறிவு ஆட்சி செய்யும், அதனால் அவன் எந்தப் பிரச்சினை வந்தாலும்
புலம்பமாட்டான். என் மீது பக்தி செய்வதாக சொல்லிக்கொண்டு, நடக்குமோ,நடக்காதோ,
கிடைக்குமோ, கிடைக்காதோ, ஆகுமோ ஆகாதோ என்று நினைப்பவன் என் பக்தனல்ல.

அறிவுடன் என்னை அசகுகிறவனை நான் கடாட்சிக்கிறேன். ஏனெனில், அறிவிழந்தவனது
செயல்பாடுகளில் திட்டமிடும் சக்தி அழிந்து விடுவதால், பாதியிலேயே தன் பக்தியை
அவன் முறித்துக்கொண்டு, சந்தேகப்பட ஆரம்பித்து விடுகிறான்.

கசப்பு மருந்தின் மீது இனிப்பைத் தடவி உள்ளுக்குக்கொடுப்பதைப் போல, உன்
பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு தருவதற்கு இப்போது இந்த இக்கட்டான நிலை
என்கிற மருந்தை தந்திருக்கிறேன். அதன் மீது என் பக்தி என்ற இனிப்பைத் தடவி
உள்கொள்ள உனக்குக் கற்றுத்தருகிறேன். என் பேச்சைக்கேட்டு, அப்பா உன் விருப்பம்
போல என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..

என்னைக் கைவிட்டுவிடாதே என்று சரணாகதி செய்து விட்டாயானால், உனக்கு மிக
விரைவில் மகிழ்ச்சியான நிலையைத் தந்து விடுகிறேன் நீ எப்படிப்பட்ட பிரச்சினையில்
இருந்தாலும் உன்னை நான் காப்பாற்றிவிடுகிறேன், உன்னை நிர்க்கதியாக ஒருபோதும்
விடமாட்டேன். சில விஷயங்களை எதிர்காலத்தில் நீ உணர்ந்து கொள்வதற்காகவே
இப்போது தீவிரமாக பிரச்சினையை தருகிறேன்.
என்னைத் தஞ்சமடைந்த உன்னை எப்போதும் நிர்க்கதியாக இருக்கவிடமாட்டேன்
என்பதையும்,ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதையும் உறுதியாக நம்பு. உன்
நம்பிக்கை வீண் போகாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உன் பிரச்சினைகள்,நோய், கடன்,
கசப்பான உறவுகள் அனைத்தும் மாறி அனைத்திலும் சுகமாக வாழ ஆரம்பிப்பாய்.

மற்றவர்கள் உன்னை உதாரணமாக வைத்து என்னை நம்பிக்கையோடு வணங்குவார்கள்.

அன்புடன்

அப்பா சாயி பாபா

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

Offline ShAivI

  • Members
  • Member
  • *
  • Posts: 12140
  • Blessings 56
  • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்





என் செல்லப்பிள்ளையே!

கடும் சோதனைகள் வருவது ஏன் ...?
கடும் சோதனைகள் வருவது ஏன் ...?
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?
.
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை
பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ,
 இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை.
அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும்
நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச்
சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை
அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில்,
எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !

எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு
மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி
மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை,
வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில்
புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,
ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை
சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த
உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை
சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு
நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும்
ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே
மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்

சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.
ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம்
காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது
எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.

எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம்
சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி
கடந்து சாதனையாக்கலாம்.

உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம்
இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும்
தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...
பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...
சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.
உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.
கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்..

அன்புடன்

அப்பா சாயி பாபா

ஓம் ஜெய் சாய் ராம்

JAI SAI RAM !!!

 


Facebook Comments