Join Sai Baba Announcement List

DOWNLOAD SAMARPAN - APRIL 2016
Author Topic: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்  (Read 7504 times)

0 Members and 4 Guests are viewing this topic.

Offline ShAivI

 • Members
 • Member
 • *
 • Posts: 11374
 • Blessings 56
 • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப்
பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ,
யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை.
பாபாவின் ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை

- ஸ்ரீ சாயி சத்சரித்ரா

ஓம் ஜெய் சாய் ராம்« Last Edit: November 02, 2016, 11:56:28 PM by ShAivI »

You can make the world a better place by simply making yourself a happier person.
If you see someone without a smile, give them one of yours. Here's one to get you started
  :D

Offline ShAivI

 • Members
 • Member
 • *
 • Posts: 11374
 • Blessings 56
 • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

என் செல்லப்பிள்ளையே!

நீ இன்று வரை நடக்குமோ நடக்காதோ என தவித்துக் கொண்டு இருக்கிற
விஷயம் நிச்சயமாக நடந்துவிடும். பல நாட்களாக வைக்கப்படும் என்னுடைய
வேண்டுதல், தாமதமாகி தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்து விட்டது.
இவ்விதமாக இழுத்துக் கொண்டே போவது நன்று அன்று என நினைத்து
என் பாதத்தில் விழுந்து வலியையும் துன்பத்தையும் நிவர்த்தி செய்ய
வேண்டினாய். அது இதோ நிறைவுக்கு வருகிறது. நான் அடிக்கடி கூறும்
இரண்டு பைசாக்களை உன் கையில் பத்திரமாக வைத்துக் கொள். அது உன்னை
பாதுகாக்கும். நம்பிக்கை பொறுமை தான் அந்த பைசாக்கள். பொறுமையாக இரு
என்பதற்கு பொருள் அடிமையாக இருப்பதல்ல. அமைதியாக இருப்பதும் அல்ல.
விருப்பத்திற்கு மாறான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் போது அதை
சகித்துக்கொள்ளுகிற தன்மைக்கு தான் பொறுமை எனப்பெயர். என்ன நடந்தாலும்
நான் பொறுமையாக இருந்து அப்பாவிடம் முறையிடுவேன் என்று மட்டும்
சொல்லிக்கொள். அவ்வித பொறுமையை வளர்க்க என்னிடம் பிரார்த்தனை செய்.
இது உன் மன வலிமையை அதிகமாக்கி சகலத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

தன்னம்பிக்கை வளர இரண்டு விஷயங்கள் மட்டும் தேவை. தைரியம் அதில்
முதலாவது. இதை கடைபிடித்தால் எந்த வேலையும் சுலபமாக முடியும். அஞ்சாமை
வாழ்வு, அச்சம் மரணம் என்பதை நீ அறியமாட்டாயா? துணிவே வாழ்வின் துணை
என்பது உனக்கு தெரியாதா? ஆகவே முதலில் தைரியத்தை வளர்த்துக்கொல்.
அது கடவுளை உனக்குள் அழைத்து வந்து அமரவைக்கும். அடுத்து, சுயநலமின்மை
இருந்தால் எந்த ஒன்றும் இன்பமாக தெரியும். சுகமும் துக்கமும் உன்னை நெருக்காது.
தீமைகள் வந்தால் அது நம்மை பக்குவப்படுத்த வந்தது என நினைத்து அதை ஏற்று
தீர்க்கும் முயற்சியிலேயே பக்குவபட்டுக்கொள்ளும்.

தோல்வி தோல்வி என நினைத்துக்கொண்டு காலத்தை கடத்தாதே, இனி அந்த
வார்த்தை உன் வாயில் இருக்காது. ஆம் நீ ஜெயிக்க போகிறாய் அதுவும்
என் ஆசியோடு. சந்தோஷப்படு!

அன்புடன்

அப்பா சாயி பாபா

ஓம் ஜெய் சாய் ராம்

You can make the world a better place by simply making yourself a happier person.
If you see someone without a smile, give them one of yours. Here's one to get you started
  :D

Offline ShAivI

 • Members
 • Member
 • *
 • Posts: 11374
 • Blessings 56
 • बाबा मुझे अपने ह्र्दय से लगा लो, अपने पास बुला लो।
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு
முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.
விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில்
செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி. சாய்பாபா என்னும் மகத்தான
விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை
தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

ஓம் ஜெய் சாய் ராம்

You can make the world a better place by simply making yourself a happier person.
If you see someone without a smile, give them one of yours. Here's one to get you started
  :D

 


Facebook Comments