DwarkaMai - Sai Baba Forum

Sai Literature => Sai Thoughts => Topic started by: ShAivI on January 18, 2015, 12:26:38 AM

Title: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 18, 2015, 12:26:38 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-prn2/v/t1.0-9/s720x720/10941877_841530502555199_4594524328566192916_n.jpg?oh=cca3e94e183c0487a6ef9984e8cc08a6&oe=552B4FCA)

உனக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
கவனமாகக் கேள்! இதுவரை மட்டுமல்ல, இன்னமும் நீ அனுபவிக்கிற,
எதிர் கொள்கிற ஒவ்வொரு செயலும் உன் முன் ஜென்ம கர்மாவின்
படிதான் நடக்கிறது. இதை மாற்ற இயலாது. பரமேஸ்வரனாலேயே
மாற்ற முடியாத ஒன்றை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும்.

கர்மாவை மாற்ற முடியாத கடவுளை எதற்காக கும்பிடவேண்டும்
என நீ நினைக்கலாம். கர்மாவின் தீவிரத்தை குறைத்து, அதை
நல்ல வழியில் மாற்ற வழி காட்டுவதற்கு குரு வழிபாடு வேண்டும்.

- ஸ்ரீ சாயியின் குரல்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 20, 2015, 10:58:20 AM
ஓம் சாய் ராம் !!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/10402508_841951769179739_6328695572626722315_n.jpg?oh=07cf3b31b4b3fe43f65fec645550a8bf&oe=5526E9DC&__gda__=1428470074_6b8e728fbd774628bf0659d9a3ede413)


கடவுள் தன்னை வைத்திருக்கும் நிலையிலேயே திருப்தியுடன் இருக்க வேண்டும்.
ஆண்டவன் கொடுப்பது ஒருபோதும் இழக்கப்படுவத்தில்லை.
மனிதன் கொடுப்பது ஒருபோதும் நீடித்து நிலைப்பதில்லை.- ஷீரடி சாய்பாபா

[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 22, 2015, 11:20:27 AM
ஓம் சாய் ராம் !!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/16505_716680058427704_79129693751981494_n.jpg?oh=5333cea058f66e297cebe31faa4124d9&oe=55620998&__gda__=1432792759_df0603b23b8466e8a2a6bdf859ae4507)


என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வையுங்கள்.
என் மீதே உங்கள் கவனம் திருப்பப்படட்டும்.எந்தவொரு
பெருமுயற்சியும் இல்லாமலேயே,உங்கள் லட்சியத்தை
அடையும்படி செய்வேன்.என்னுடைய செயல்கள் வியப்பூட்டுபவை,
மிக மதிப்புள்ளவை,நெடுநாள் நிலைப்பவை.நாளடைவில்
உங்கள் இலட்சியம் நிறைவேறும்.இதற்காக நான் உங்களிடம்
கேட்பது விசுவாசமும்,உற்சாகத்துடன் பொறுத்திருத்தலும் மட்டுமே.
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

[ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்]

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 23, 2015, 05:09:51 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10690318_834463233261926_2152539146300978452_n.jpg?oh=36dc4f2a5d0e528d0e2833c980815757&oe=556C52C0&__gda__=1429095288_c784e4b64e804bae067ec6654ae3b24e)


புண்ணிய கர்மாக்களில் சிரத்தை கொண்டவர்கள் அந்த கர்மாக்களின்
பலனாக பாபாவிடம் வசீகரிக்கப்பட்டு அவரிடம் ஓடி வருகின்றனர்.
அத்தகையோர் பாபாவின் குலம், சாதி பற்றி கவலைபடுவதில்லை.
ஆனால் சிலர் பாபாவினுடைய குலத்தை விவாதிப்பதிலேயே நாட்கள்
கழித்து இம்மையிலும் மறுமைக்கும் பலனடையும் வாய்ப்பை
இழந்துவிடுகின்றனர்.

ஸ்ரீ சாயியால் ஆகர்ஷிக்கப்படுவது ஒருவனது ரிணானுபந்தம் அல்லது
முன்வினைப்பயனாலேயே. ஆனால்,ஒருவன் பொறுக்கவொணா வலி
அல்லது பெரும் துன்பம் இவற்றால் அவதிப்படும்போது,பாபா எங்கே பிறந்தார்,
எப்படி வளர்ந்தார் என்பவற்றைப் பற்றி சற்றும் கருதாமல் 'பாபா என்னைக்
காத்தருளவேண்டும்' என துள்ளும் இதயத்துடன் பாபாவை அணுகுகிறான்.
அவனுக்கு அத்புதமான பல பலன்கள் கிட்டிவிட்டவுடன், தனக்கு பாபாவே
கடவுள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டு,பின்னர் பாபா சட்டபூர்வமாக
எந்த குலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிய விவாதங்களில் ஈடுபடுவதில்லை,
தன்னை பற்றி பிறர் என்ன எண்ணுகிறார்கள் என்பது பற்றியும் லட்சியம்
செய்வதில்லை.தம்மை முஸ்லீமாக கருதிய சில இந்துக்களுக்கு பாபாவே
சில சமயங்களில்,"நான் ஒரு முஸ்லீம்,என்னிடம் வராதீர்கள்" என சொல்வதுண்டு.

தம்மை சத்குருவாகவும், குருதேவனாகவும் மதித்து வந்தவர்களிடம் பாபா,
"நான் ஒரு பிராம்மணன்,எனக்கு தட்சிணை கொடுங்கள்.நான் அமர்ந்திருக்கும்
இந்த இடம் ஒரு மசூதி அல்ல,இது துவாரகாமாயி" எனக் கூறுவார்.அவர்
எல்லோருக்கும் எல்லாமாகவும் இருந்தார்."யே யதா மாம் ப்ரபத்யந்தே,
தாம்ஸ் ததைவ பஜாம் யஹம்" என்பது கீதையின் வாக்கு.

- பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி..

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 27, 2015, 10:28:38 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-b-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/10438977_845636938811222_1801445586169190322_n.jpg?oh=3a5114e39f044d9d9ce3966f8b702249&oe=5527659C)


உணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே,
காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில்
நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன்,
எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை.
அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று
என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.

- ஷிர்டி சாய்பாபா.

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 28, 2015, 11:17:29 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s720x720/10945742_859500030785154_1507716123890867949_n.jpg?oh=2569f15234cad0a7119be1d8ae4fb354&oe=555B0610&__gda__=1432862893_5308f837ed127dc2dc45be47cc1c59f3)


உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும்,
விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால்
வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து
நீ பயந்துவிடாதே. நான் எதுவரை உனது அசைக்கமுடியாத
நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத்
தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக
உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது
உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு
வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப்
பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப்
பார்த்தும் நீ பயப்படாதே.

என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது.

- ஸ்ரீ சாயி தரிசனம்.

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 29, 2015, 03:53:02 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p552x414/10406361_822087344499515_8081315454334295631_n.jpg?oh=4a1c74b564ecb9458a86a3ec4efea46c&oe=5553B883&__gda__=1432726707_e63ed4edf94af05f260a828b8a35eace)


சதா என்னை நினை.
நான் நடத்துகிறேன் என திடமாக நம்பு.
எனக்கு நானாகவே செய்கிறேன் என்ற பாவத்தை வரவிடாதே.
நான் துணையாக இருப்பேன்.
நீ நடக்கும் பாதையில் முட்கள் இருந்தால்
நான் முன்பாகவே களைந்து விடுகிறேன்.
நான் உன்னுடனேயே வந்து கொண்டிருப்பதை
நீ மறந்தால் நான் என்ன செய்ய முடியும்?

"உன் முன்னாலும் பின்னாலும் நான் நிழலைப் போல் இருக்கிறேன்.'

- ஷீரடி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 30, 2015, 11:25:01 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/10409029_827830287258554_7127320759283174951_n.jpg?oh=f49dc75d1c8a8e80c73da8fecf275171&oe=55567984&__gda__=1433307354_9cc86114184d6a141648d45f5cfd4544)


பாபா யாரை எப்போது எப்படி இழுக்க வேண்டும் என திட்டமிடுகிறாரோ,
அதை முடிப்பதற்காக தானே முன்கூட்டி அங்கு சென்று கவனிக்கப்படாத
காட்சியாளனாக அமர்ந்து விடுகிறார். அவர் அங்கே ஆண்டுக் கணக்கில்
இருந்தாலும் நாம் அவரை அடையாளம் கண்டு கொள்வதில்லை.
நமக்கு விதிக்கப்பட்ட நேரம் எப்போது வருகிறதோ, அப்போது அவர்
நமக்குத் தென்படுகிறார், அது மட்டுமல்ல, நம்மை பக்தனாக்கி,
பித்தேற்றி எல்லாவற்றையும் துறந்து தன்னை மட்டுமே நினைக்கும்படி
செய்துவிடுகிறார்.

-ஸ்ரீ சாயி தரிசனம்.

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 05, 2015, 10:51:56 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/1013627_850620284979554_3484298073721191256_n.jpg?oh=108c1b8444d31ae9a7a878d8197698fe&oe=5554FA87&__gda__=1431861975_0600dccc0926a7a8fc796d083480d5b3)


"மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும்
கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ,
மனம்புண்படும்படியாகவோ பேசாதே. அதை பொறுமையுடன்
சகித்துக்கொள்வாயாக; அதனால் உனக்கு அபாரமான
சுகம் கிடைக்கும்".

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!


Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 25, 2015, 04:28:33 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10922749_851527108222205_76145691366936357_n.jpg?oh=bd9230ad19ba3eda4ede47ea856f3ea2&oe=558F6037)


"யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது
என்னும் விதியை கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கிகொள்.
ஆனால் அவர்களுடைய உழைப்பை எவ்வளவு என்பதை அறிந்துகொள்".

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: birgitta on February 25, 2015, 10:39:37 AM
OM SAI RAM

Guruve Saranam. How kind and merciful Baba is. With all our faults and sins, we have been loved and cared by HIM. May we all follow HIS words as best as possible that we dont make our Father Unhappy even a little. Let us make ourselves worthy to be Loved by Sai who is ocean in Love and Kindness.

Sai Saranam




Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 26, 2015, 11:24:06 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/s720x720/18271_858403224201260_8635520119174423410_n.jpg?oh=a6d13407513343643e7475c544947108&oe=557C288D&__gda__=1431363959_931e47389a0911e484e2b5bc04c79f7b)


"சிறிதளவும் கவலைக்கு இடம்கொடுக்காதிர்கள்
எப்போதும் ஆனந்தம் நிரம்பியவர்களாக இருங்கள்.
மரணம் பற்றிய கவலை வேண்டாம், கவலையே வேண்டாம்.
அனைத்திற்கும் சாட்சியாக நான் இருக்கிறேன்.

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 27, 2015, 10:48:07 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/s720x720/11034269_771425196281208_1318427161488327125_n.jpg?oh=93d67442c467788e225817aa3dcb5d61&oe=55486C1D&__gda__=1434574381_d3fb33f9fda84e2a71334cfa56768d19)


"மன சாந்தி இல்லாத என்ற ஒரு அங்குல இடம் கூட
இவ்வுலகில் எங்கும் கிடையாது.
உன் பாரத்தை என் மேல் வை.
என் மீது உன் பார்வையை திருப்பு.
என்னையே தியானி,
நிச்சயமாய் நான் உனக்கு சாந்தியை அளிப்பேன்.

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!


Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 28, 2015, 10:26:43 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/s720x720/10906156_836093836432199_1432298970302276189_n.jpg?oh=4050999859052740f03e590a5d4ca9b6&oe=559383F3)


"உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும்,
விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால் வந்தது
என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே.
நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ,
அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக
உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு
நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய
நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும்,
உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும்
நீ பயப்படாதே.

என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது -

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!



Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 01, 2015, 05:26:00 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10945658_844765062231743_2648421645518845741_n.jpg?oh=3536deb82916ea7bb788d9b6b5cadbe2&oe=558D3B3B&__gda__=1430820945_53dc2d54ce747640c357861e129ca19f)


"உணவு கொடுப்பவர், உணவு உண்பவர் என் வடிவங்களே,
காரியநிமித்தம் நீங்கள் சிரமப்பட்டுக் கொண்டிருகையில்
நான் அவ்விதமாக அங்கு தோன்றிக் கொண்டிருப்பேன்,
எனக்கு ஒரு வடிவம் என்பதும் இல்லை, பெயரும் இல்லை.
அப்படி அன்பு மழை பெய்விப்பவர் நானே என்று
என்னை அறிந்து கொள்பவர் என் பக்தர்கள்.

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 02, 2015, 04:53:24 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/p480x480/1527092_823527461022170_1449455834007066513_n.jpg?oh=63691b7aa5beafbaac36f074c990a280&oe=5589E4AF)


"யார் எப்படி என்னை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கு
அதே விதத்தில் நான் கிடைக்கிறேன். விஸ்வாசம் இருக்கும்
இடத்தில நான் விஸ்வாசமாகவே இருப்பேன்.
என்னுடைய மூலசொருபமே விஸ்வாசமாகும்.

- ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 03, 2015, 06:11:41 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/10690318_834463233261926_2152539146300978452_n.jpg?oh=eb771acec748f22aa5aa9bd8680cbbb0&oe=5593DFC0&__gda__=1434279288_0ad10c96856c23cec3a7a6f4b07e710d)


"புண்ணிய கர்மாக்களில் சிரத்தை கொண்டவர்கள் அந்த கர்மாக்களின்
பலனாக பாபாவிடம் வசீகரிக்கப்பட்டு அவரிடம் ஓடி வருகின்றனர்.
அத்தகையோர் பாபாவின் குலம், சாதி பற்றி கவலைபடுவதில்லை.
ஆனால் சிலர் பாபாவினுடைய குலத்தை விவாதிப்பதிலேயே நாட்கள்
கழித்து இம்மையிலும் மறுமைக்கும் பலனடையும் வாய்ப்பை
இழந்துவிடுகின்றனர். ஸ்ரீ சாயியால் ஆகர்ஷிக்கப்படுவது ஒருவனது
ரிணானுபந்தம் அல்லது முன்வினைப்பயனாலேயே. ஆனால்,
ஒருவன் பொறுக்கவொணா வலி அல்லது பெரும் துன்பம் இவற்றால்
அவதிப்படும்போது,பாபா எங்கே பிறந்தார்,எப்படி வளர்ந்தார் என்பவற்றைப்
பற்றி சற்றும் கருதாமல் 'பாபா என்னைக் காத்தருளவேண்டும்' என துள்ளும்
இதயத்துடன் பாபாவை அணுகுகிறான்.அவனுக்கு அத்புதமான பல பலன்கள்
கிட்டிவிட்டவுடன், தனக்கு பாபாவே கடவுள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட்டு,
பின்னர் பாபா சட்டபூர்வமாக எந்த குலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றிய
விவாதங்களில் ஈடுபடுவதில்லை,தன்னை பற்றி பிறர் என்ன எண்ணுகிறார்கள்
என்பது பற்றியும் லட்சியம் செய்வதில்லை.தம்மை முஸ்லீமாக கருதிய
சில இந்துக்களுக்கு பாபாவே சில சமயங்களில்,"நான் ஒரு முஸ்லீம்,
என்னிடம் வராதீர்கள்" என சொல்வதுண்டு.தம்மை சத்குருவாகவும்,
குருதேவனாகவும் மதித்து வந்தவர்களிடம் பாபா,"நான் ஒரு பிராம்மணன்,
எனக்கு தட்சிணை கொடுங்கள்.நான் அமர்ந்திருக்கும் இந்த இடம் ஒரு மசூதி
அல்ல,இது துவாரகாமாயி" எனக் கூறுவார்.அவர் எல்லோருக்கும்
எல்லாமாகவும் இருந்தார்."யே யதா மாம் ப்ரபத்யந்தே, தாம்ஸ்
ததைவ பஜாம் யஹம்" என்பது கீதையின் வாக்கு. 

-பூஜ்யஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி.

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!


Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 04, 2015, 04:19:03 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p526x296/1513783_821632167878366_5905955810190714364_n.jpg?oh=533096f2be7c92763e1df786d21d5da3&oe=55922DC8&__gda__=1435431905_ac9b5f3fdf308dad64120d9c88f4da73)


"யாரேனும் ஏதாவது பிச்சை அளிக்கும்படி கேட்டு வந்தால்,
உம்மால் முடிந்த அளவு அளிக்கவும்; அந்த நபர் திருப்தியடையாமல்
இன்னும் அதிகமாகக் கேட்டால், சாந்தமாக இல்லையெனக் கூறவேண்டும்.
அவர் மீது கோபத்தையும், அதிகாரபூர்வமான ஆணவத்தையும்
காண்பிக்காதீர்கள். 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 05, 2015, 11:38:00 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/6275_814448421930074_7608727503564916073_n.jpg?oh=9d92673f296feb9c43b2d3f6f796635b&oe=5581A6E3)


"உனது நம்பிக்கை, பொறுமையின் அளவை நான் சோதித்துக்கொண்டே இருக்கிறேன்.
நீ இன்னும் பக்குவப்படவில்லை.படபடவெனப் பேசுவதையும்,குழப்பமடைவதையும்,
கோபப்படுவதையும்,குறைகூறுவதையும் குறைத்துக்கொள்ளும்வரை என்னால்
உனக்கு ஏற்றதை செய்ய இயலாது.

உன் வாயிலிருந்து பிறரைப் பற்றிய அவதூறான வார்த்தைகள் வராமல் இருந்தால்,
எப்போதும் எனது நாமம் உனது வாயின் துதிகளாக இருந்தால் விலை ஏதும் இல்லாமல்
கஷ்டத்திலிருந்து விடுதலை அடைவாய் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 09, 2015, 11:11:27 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1531847_812114505496799_4074650112541659058_n.jpg?oh=4efdbe0029746ec49a291bf11e8b1dc9&oe=559097A2)


"என்னை நினைவில் வைத்துக் கொண்டிருப்பவனை
நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, ரயிலோ
அல்லது விமானமோ தேவையில்லை. என்னை
எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று
நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன். 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 10, 2015, 05:03:26 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/10372505_805617866146463_6039996082946292824_n.jpg?oh=b737dc6814cefd9ae120e2719cc98d0e&oe=558598DB&__gda__=1438507697_6d6c5c12d99a01d479af5df090591367)


"நடப்பதை தாராளமாக பொறுத்துக்கொள்வோம்
அது சந்தோஷமாக இருந்தாலும் சரி,
கசப்பான செயலாக இருந்தாலும் சரி.
அல்லாமாலிக் நம்மை காப்பவர்.
நடப்பதை சுமப்பவரும் அவரே. 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: Nih@rik@ on March 10, 2015, 05:31:13 AM
OM SAI RAM

Shaivi Mam , Being new member in this divine forum i don't know whether i should suggest anything
but still want to make a request.

As you are posting this topic in Tamil like me there must be lots of other members who are not Tamil
and unable to understand the post , so if you can please post it in English/Hindi too.

So other members would also love to know more about our father.

Thanks, Nih@rik@
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 22, 2015, 10:53:24 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/603790_871447702896812_864783350503925955_n.jpg?oh=39820aa23744608dd63f2ba2a2f58d9f&oe=55B5DD81&__gda__=1437535484_2e4c41a0993eec4223e722dcc68ea74e)


"யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும்.
உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள்.
அவரிடம் நம்பிக்கை வையுங்கள் இவரிடம் நம்பிக்கை வையுங்கள்
என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள்.
முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே
என் மீது நீங்கள் வைக்கிற நம்பிக்கையாகும்.
என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள்,
 நிச்சயம் அது முடியும். காரணம்,
உன்னில் இருப்பது நீயல்ல, நான்!" 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 22, 2015, 11:10:48 AM
OM SAI RAM

Shaivi Mam , Being new member in this divine forum i don't know whether i should suggest anything
but still want to make a request.

As you are posting this topic in Tamil like me there must be lots of other members who are not Tamil
and unable to understand the post , so if you can please post it in English/Hindi too.

So other members would also love to know more about our father.

Thanks, Nih@rik@

OM SAI RAM Nih@rik@ ji,

Thank you for your suggestion.
would like to clarify that, i am posting in tamil whatever i read or post in the following links.
Its only tamil translation  of our BABA's thoughts .

http://forum.spiritualindia.org/sai-thoughts/spiritual-gems-from-sri-sai-satcharitra/msg454360/#msg454360

http://forum.spiritualindia.org/sai-thoughts/baba-says/

http://forum.spiritualindia.org/sai-thoughts/shirdi-sai-thought!/


JAI SAI RAM !!!


Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on March 23, 2015, 10:38:50 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-mxp.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/11010593_867406163300966_707827893113853043_n.jpg?oh=f22145ce2d2c58c79f36c359fa178c80&oe=5576C8D8)


"என்னை நினைத்து,எனக்காக ஏங்குபவனையும்,
எதையும் முதலில் என்னை நினைக்காமல்
உண்ணாதவன்பாலும் நான் சார்ந்து இருக்கிறேன்.
இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன்
ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான்" 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on April 23, 2015, 05:15:29 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/1509946_1429369817376753_2632887530741081390_n.jpg?oh=e26e54a521d64901ef80d2cef36cf9ef&oe=5597F698)


பாபாவின் பாதத்தை தஞ்சம் அடைந்தபிறகு, பொறுமையை
சோதிக்கும் நிகழ்வுகள் நடக்கும்.எல்லாமே கழுத்தைப் பிடித்து
நெறிப்பது போல இருக்கும். அதை கண்டோ, கேட்டோ தளராமல்
உறுதியுடன் இருந்து நம் உறுதியைக் குலைக்கும் மனக் கவலையை
விட வேண்டும்.

என் பேரில் உன் பளுவை சுமத்தினால் அதை நான் நிச்சயம் தாங்குவேன்
என உறுதியளித்துள்ளார். நான் இருக்க பயம் எதற்கு? என்றவர் அவர்.
அவரை நம்புகிறவன், அவர் வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து,
தன் கவலைகளை விட்டு விட வேண்டும். சாயி மீது பாரத்தை
ஏற்றியாகிவிட்டது. அவர் பார்த்துக் கொள்வார்.ஒருவேளை பார்க்காமல்
போனாலும் நான் கவலைப்படமாட்டேன். என்னைப் பற்றி கவலைப்பட
வேண்டியது அவர், நானல்ல! என்ற உண்மையை உணர வேண்டும். 

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: mysur on April 23, 2015, 07:11:48 AM
Shaiviji  thank you for sharing. It's been wonderful to look at these on Thursday.
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on April 24, 2015, 06:36:35 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/11149329_883839108324338_7058103815829806724_n.jpg?oh=e5bf5d3d5dc756554476eb799e553db8&oe=55D0366D&__gda__=1440674651_b1700281f77ad6a00db1340a10c17cc4)


நம்பிக்கை இல்லாதவர்களுக்கு பாபா தெரிவது இல்லை.
நம்பிக்கை உள்ளவர்களுக்கு அவர் எங்கிருந்தாலும் தரிசனம் தருவார்.
மக்களுடைய மனச்சாய்வு எப்படியோ அப்படியே நேரிடை அனுபவம் ஏற்படுகிறது.

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on April 25, 2015, 11:34:37 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/p720x720/11110286_806094972807737_6036012063285304131_n.jpg?oh=66bca27168476c171df733a0db4a1fa7&oe=55A2C95A)


கண்டயோகம் உங்களுக்குத் தேவையில்லை.
கடின தவமும் வேண்டாம்.
அடர்ந்த கானகத்திற்கும் போகத் தேவையில்லை.
கடுமையான உபவாச தீட்சைகளும் தேவை இல்லை.
உங்கள் வீட்டிலேயே நீங்கள் இருங்கள்.
உங்கள் காரியங்களை நீங்கள் செய்து கொண்டிருங்கள்.
உங்கள் கடமைகளை,கடமைதவறாமல் செய்துவாருங்கள்.
என்னை கோவிலுக்கே கட்டுப்படுத்தாதீர்கள்.
உங்கள் இதயக் கோவிலில் வைத்திருங்கள்.
பூஜைகள் செய்து அலுத்துப் போக வேண்டியதில்லை.
சிறிதளவு நேரத்தை ஒதுக்கி என் நாமஸ்மரணை செய்யுங்கள்.
சாயி என்று ஜபம் செய்தால்,ஸ்மரித்தால்,
நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய சித்தமாக இருக்கிறேன்.
என் விருப்பம் அது மட்டுமே.
என் அவதார ரகசியமும் அதுவே.

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on April 26, 2015, 10:59:07 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-fra.xx.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/11148440_781427208641373_5420188337553510476_n.jpg?oh=fc4db2d39bd1b61fb43ce6066f51af84&oe=55D56447)


தனது பக்தர்களின் தேவையை பாபா நன்கு அறிவார்.
அவர்களுக்கு எது நன்மையோ அதை மட்டுமே பாபா அளிப்பார்.
பாபாவை நேசிக்கும் ஒருவன், உண்மையில் அவரிடம் 
எந்த வேண்டுதலையும் வைக்கத் தேவையில்லை.
எது நேரினும் அது பாபாவின் விருப்பம் என்பதை நன்கு அறிவோம்.

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on April 29, 2015, 10:46:31 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/11057523_880494455325470_5781852371060340770_n.jpg?oh=ac4297e6889ccfd7aa1290353682a8b6&oe=55DB640D&__gda__=1440125287_d449e8dc6ad9dfcdb9592f1ff0af06df)


சத்குருவின் பாதங்களை உறுதியாக பிடித்துக் கொள்பவர்,
மற்றவர்கள் பலவிதமாக சிரமப்பட்டும் அடையமுடியாததை
சொற்பமான முயற்சியாலேயே அடைந்துவிடுவர்.

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on April 30, 2015, 11:33:40 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-lhr.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/1010154_869869449721304_1104107249800280107_n.jpg?oh=4846b5e035896d6b2cb7314a4679684b&oe=55DF0C6D)


யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும்.
உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள்.
அவரிடம் நம்பிக்கை வையுங்கள் இவரிடம் நம்பிக்கை வையுங்கள்
என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள்.
முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.
உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே
என் மீது நீங்கள் வைக்கிற நம்பிக்கையாகும்.
என்னால் எதுவும் முடியும் என்று சொல்லுங்கள்,
நிச்சயம் அது முடியும். காரணம்,
உன்னில் இருப்பது நீயல்ல, நான்!.

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: birgitta on April 30, 2015, 11:41:31 AM
Om Sai Ram

Guruve Saranam. Very nice post Shaiviji. We always get disturbed when others pass any comment or advise even when we are being guided by Guru Supreme. the words above are just a Blessings from Sai for each of us. Love YOU APPA and Koti Pranams for bringing me into this Divine DWARAKAMAI GROUP. May Sai Be with each of us hear us sing PRAISES FOR HIM.


Sai Saranam
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on May 01, 2015, 11:43:39 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/p180x540/11174992_983163288418827_1574263506207469132_n.jpg?oh=a56e9fd264d1f9a2329550b9d6fe4ca7&oe=55C71231&__gda__=1440449751_68254941bfde697f04c2849a7d60e482)


நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்;
நீ அளித்த வாக்குறிதிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.
விசுவாசமும் பொறுமையும் பெற்றிரு.
நீ எங்கே இருந்தாலும் எல்லா நேரங்களிலும்
அப்போது நான் உன்னுடனேயே இருப்பேன்

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on May 07, 2015, 11:04:06 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11182153_755309771253177_6921889907380533754_n.jpg?oh=bd8008a952dc8f48b40757c8d4a77d51&oe=55DA2D29)


யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில்
நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன்.
நான் இல்லாது அவருக்கு இவ்வுலகம் அனைத்தும் சூனியமாகத் தெரியும்.
அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே வெளிவரும்.

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on May 09, 2015, 10:42:04 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xtf1/v/t1.0-9/11084274_874345325940383_8473061013568231765_n.jpg?oh=1146bf4b53914214c4e8c77791f1445b&oe=55C559A4&__gda__=1438631935_6cb01acd0205acd2bb0fac73cc130c19)


அயராத கண்காணிப்புடன் கூடிய எனது பார்வை
என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்.
செய்வது யாதாயினும், எங்கு இருப்பினும்,
எப்போதும் இதை நினைவில் வை.
உனது ஒவ்வொரு செயலையும் நான் அறிவேன்

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on May 14, 2015, 06:08:49 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xta1/v/t1.0-9/11265256_906462782751993_5194160914161779647_n.jpg?oh=dd8d3d4df048954f90cecca3e9e68d19&oe=55CED0B7&__gda__=1442954558_60cbff9f1b7bbf82d5b51bd19a2bcd20)


"மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும்
கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்துக் கசப்பாகவோ,
மனம்புண்படும்படியாகவோ பேசாதே.
அதை பொறுமையுடன் சகித்துக்கொள்வாயாக;
அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்".

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on May 21, 2015, 01:06:02 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/p552x414/11127667_889153547792894_4614948426235775176_n.png?oh=045d3929eeb7408c6e140f2b6184076b&oe=55CE41C6)


"என்ன நடக்கிறதோ, அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது.
அவரே தூக்கிவிடுகிறார்; அவரே தள்ளியும்விடுகிறார்,
அவரே சண்டைபோடுகிறார், அல்லது மற்றவர்களை சண்டையிடவைக்கிறார்.
அவரே காரியங்களை செய்பவரும், செய்யவைப்பவரும் ஆவார்.".

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on June 04, 2015, 10:49:23 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/p640x640/11061191_897194563655459_8601993857028696255_n.jpg?oh=7543e4ce46aae95b07e57a70ec298a37&oe=5604FD2E&__gda__=1441516985_c92d7a9d516cf4a1c6e4148d33d8e596)


"யார் என்னைப் பெரிதும் நேசிக்கிறாரோ அவருடைய பார்வையில்
நான் அகண்டமாக (இடைவிடாது) இருக்கிறேன். நான் இல்லாது
அவருக்கு இவ்வுலகம் அனைத்தும் சூனியமாகத் தெரியும்.
அவருடைய வாயிலிருந்து என்னுடைய பெருமை மட்டுமே
வெளிவரும் ."

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on June 11, 2015, 11:53:22 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-frc3/v/t1.0-9/11057523_880494455325470_5781852371060340770_n.jpg?oh=be228cf52b07c23d3ebbf4ea1f1dd394&oe=5602F10D)


"துவைத உணர்வின்றி வித்தியாசமின்றி பக்தர்கள்
கீழே விழுந்து வணங்கும்போது அவர்களை அரவணைத்து
எட்டி அடைய முடியாத பொருளாகிய தம்மையே[பாபா]
அவர்களுக்குக் கொடுக்கிறார்.பக்தர்களுடன் அவர் ஒன்றாகி
அவர்களுக்கத் தம் ஆற்றலையும் அந்தஸ்தையும் அளிக்கிறார் ."

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: birgitta on June 11, 2015, 12:07:54 PM
Jai Sai Ram. His Love is our life. His Mercy is what we breathe. His kindness has no limits. Sai saranam Guruve saranam
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on June 18, 2015, 03:44:06 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/s720x720/11206951_779309942186493_6611483827350779289_n.jpg?oh=84d1a0d262d835c5a514a92a3e38dd44&oe=55F98367&__gda__=1445188481_d777f8c06a5d758889fed2cedf503f91)


"எப்போதும் திருப்தி உள்ளவனாக இரு.
சஞ்சலத்திற்கோ கவலைக்கோ எப்போதும் இடம் கொடுக்காதே.
நீ துவாரகாமாயியின் குழந்தை.
துவாரகாமாயியின் நிழலில் வாழ்பவர் சுகத்தையும்
சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில்
உட்கார்ந்தவர் ஆகிறார் ."

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on June 26, 2015, 01:39:07 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-cdg2-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/11113749_848051938617571_7988680268587124602_n.jpg?oh=f86419c76d5eb295c8f8ec2ac1863c9f&oe=5621AD8C)


"பாபாவின் அருகில் இருக்கும் பாக்கியம் நமக்கு கிடைக்க வேண்டும்;
அதன்பிறகு,தாண்டமுடியாதது எதுவுமே இல்லை.
கொஞ்சங் கொஞ்சமாக அனைத்து விஷயங்களும் ஓர் ஒழுங்கிற்கு வந்து நிற்கும். ஓய்வெடுப்பதோ,பேசுவதோ,நடப்பதோ,எந்த வேலையை செய்தாலும் சரி,
ஒவ்வொரு கணமும் அசைக்க முடியாத நம்பிக்கையை பாபாவிடம் கடைப்பிடித்தால்,
பக்தன் தான் விரும்பிய மனோரதங்கள் அனைத்திலும் நிறைவு பெறுவான்.."

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on July 10, 2015, 01:12:03 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/11698500_858755537554363_8397240661416864358_n.jpg?oh=254ec8922f7709b9fb8116146b9e61ee&oe=5619A37B&__gda__=1445363071_0904d9d74a3c9e84722037da1fa50626)


"வருவது வரட்டும்,விட்டு விடாதே. என்னையே உறுதியாகப் பற்றிக்கொண்டு
எப்போதும் நிதானத்துடனும்,சதாகாலமும் என்னுடன் ஒன்றியும் இருப்பாய்".."

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

\
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on July 16, 2015, 10:39:03 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p600x600/11752545_926360407405541_4948055455248774480_n.jpg?oh=ba4c1a22690d2522d98a38371267ff43&oe=5613887F)


"நான் இல்லாமல் போய்விடுவேன் என்று ஒரு காலமும் கவலைபடாதீர்கள்.
உங்கள் நலன் கொண்ட விஷயங்களைபற்றி என்னுடைய எலும்புகள் பேசுவதை கேட்பீர்கள்."

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on July 23, 2015, 09:52:26 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpt1/v/t1.0-9/p600x600/11695849_925022927539289_5988788459496707455_n.jpg?oh=a84c9ec413890beaa28db2d4f72d5633&oe=56491084&__gda__=1447721890_ace7226354082be51032641176843c6c)


"உங்களில் நான் இருக்கிறேன். என்னில் நீங்கள் இருகிறீர்கள்.
உங்கள் வேலைகளை பௌதீக தேவைகளைத் தெரிந்துகொண்டு
நானே நிறைவேற்றி வைக்கிறேன். "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on August 20, 2015, 07:00:52 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p180x540/11903988_439843579536692_5056029858444685160_n.jpg?oh=8fe470cf2266c31f3d3a6a84e36ce945&oe=5679962A&__gda__=1451018010_7b3deec294c0ecd2cf8e146edaee788e)


"உயிருள்ள ஜந்துக்கள் அனைத்திலும் என்னைப் பார்ப்பவரையே
நான் விரும்புகிறேன் என்று அறிந்து கொள்ளுங்கள். "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on September 03, 2015, 01:06:53 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/p180x540/11813252_867700126632377_3273951116641953314_n.jpg?oh=181089a060ad769ea3cd4d05e09ab93d&oe=566C02EE)


"யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு எதிராக கூறட்டும்,
ஆனால் கசப்பான எவ்விதத்திலும் அவர்களுக்கு பதில் அளிக்கும் படியான
சீற்றங்கொள்ளாதீர்கள். இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக்
கொண்டிருப்பீர்களேயானால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.
உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை இடித்து விடுங்கள்.
பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது தடங்கலின்றியும் திறந்தும்
இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும்
தடையரணாகும். அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல் அல்லது
ஐக்கியமாதல் இயலாது.. "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on September 17, 2015, 05:31:23 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-lhr3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11949341_957114224330159_4730794833906037644_n.jpg?oh=73324271a03309f69b87345bda3dc7e3&oe=56AA0B38)


"பாபா ஒரு சாதாரண வித்தைகாரர் அல்ல,அவர் ஒரு சமர்த்த சத்குரு.
பக்தர்களின் உள்ளங்களில் விசுவாமும் நம்பிக்கையும் நிரம்பி வழிய
பாபா சில சமத்காரங்களையோ,வியக்கத்தகும் உத்திகளையோ
கையாளுகிறார்.நன்றி உணர்ச்சி,பிரேமை,பக்தியாக மாறுகிறது.இவ்வாரு
பாபாவின் செயல்பாட்டின் உண்மை நோக்கம் காணப்படுகிறது.கீழ்த்தரமான
பற்றுக்களால் உண்டாகும் மாசுகளையும் அதன் விளைவுகளையும்
பக்தர்களின் இதயங்களிலிருந்து போக்கி,தூய்மைப்படுத்தி,படிப்படியாக
பக்தர்களின் ஆன்மாக்களை உயர்ந்த,மேன்மேலும் உயர்ந்த,நிலைகளுக்கு
நடத்திச் சென்று அவர்கள் இறுதியில் தம்முடனே இரண்டறக் கலந்து விடும்படி
செய்கிறார் பாபா.தங்கள் தேவைகள் யாவற்றையும் அளிக்கக் கூடிய வள்ளல்
என்ற நோக்கத்துடன் மக்கள் பாபாவை அணுகுகின்றனர்.அவர்களது லௌகீக
தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே பாபாவிடம் செல்கின்றனர்.ஆனால்
பின்னர் பலர் பாபா ராமன்,சிவன் போலவே தங்கள் இஷ்ட தெய்வம் என்றும்,
தங்கள் முன்னோர்களின் குல தெய்வமே பாபாவாக புதிய உருவில் தோன்றி
வையகத்தில் புராதானதெய்வீக பணிகளை நிறைவேற்றுகிறது எனவும்,
கண்டு கொண்டுவிடுகின்றனர்.. "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!

Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on October 25, 2015, 01:03:27 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10303867_976254562416125_5242795110916569913_n.jpg?oh=c7fce7f04ee1ad864acd68cf5f69ca98&oe=56879F6E)


"பாபாவுக்கும், பக்தனுக்கும் இடைவெளி ஏதும் இல்லை.
அவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைந்தேயிருக்கிறார்கள்.
பக்தன் பாபாவின் பாதங்களில் தலைசாய்ப்பது உடலளவில்
செய்யப்படும் மரியாதையே. பக்தன், தான் பாபாவோடு
ஒன்றியவன் என்ற எண்ணத்திலேயே பாபாவை வழிபடுகிறான்.
பாபாவும் பக்தனை தன்னில் ஒன்றியவன் என்றே வழிபாட்டை
ஏற்றுக்கொள்கிறார். இவ்வாறான பரஸ்பர அன்பை பக்தன்
புரிந்துகொள்ளவேண்டும். "

ஷிர்டி சாய்பாபா

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on October 28, 2015, 11:31:39 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12105912_1628519124064647_6594001475921057_n.jpg?oh=becdc25c5ff86a8c6a6b5f4e2f8b2c5d&oe=56C83E77)


"ஆன்மிகப் பாதையில் முன்னேற முயற்சிக்கும் லெளகீக (சாதாரண)
மக்களை கர்மவினை, சிறிய மற்றும் பெரிய சம்பவங்களை தடைகளாக
ஏற்படுத்தி, அச்சம்பவங்களின் பிடியில் மனதை சிக்க வைத்து வாழ்வின்
சில காலத்தை விழுங்கி விடுகிறது. இச்சம்பவங்கள் நமது சக்தியையும்
அறிவின் எல்லையையும் மீறி வாழ்க்கை துன்பங்களால் வெவ்வேறு
ரூபங்களில் நம்மை கட்டுப்படுத்துகிறது. இதற்காக பாபாவால்
அறிவுறுத்தப்பட்ட தாரக மந்திரமே "நம்பிக்கை" மற்றும் "பொறுமை"
ஆகும்.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 04, 2015, 10:12:38 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/12191633_1630985733817986_1703234607469393634_n.jpg?oh=3c3516c2c26f801182ab0b02f9d26c99&oe=56C1B125)


"நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன். என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு. என் பார்வையை உன்மேல் வைப்பேன். ஆகையால் மந்திரம்,தந்திரம்,உபதேசங்கள் எல்லாம் வீண். என் பேச்சை கேள்.விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள். என்னையே லட்சியமாகக் கொள். உனக்கு நிச்சயம் சுபம் விளையும். என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 04, 2015, 11:02:17 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-2.fna.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-0/p480x480/12079552_452162541635127_1992799121453447683_n.jpg?oh=cfbabe5a93de92e82c68ff376ee40b1e&oe=56C947CB)


"உனக்குள் இருக்கும் கவலைகளை தூக்கி உனது தந்தையான இந்த சாயி மீது
வைத்துவிடு. இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்வதற்குப் பார். பிறரது
ஆலோசனை உனக்குப் பலன் தராது. என் மீது நம்பிக்கை வைத்து வழி
நடத்துமாறு வேண்டி, முழு மனதோடு என்னை சரணடைந்து விடு.
உன்னுடைய பொறுப்பை நான் சுமப்பேன். உன் குடும்பத்தை தாங்குவேன்.
உன் கண்ணீரை என் விரல்கள் துடைப்பதை அப்போது நீ உணர்ந்துகொள்வாய்.
புதிய வழிகளை உருவாக்கித் தருவேன். நீயாக எந்த சிக்கலிலும்
மாட்டிக்கொள்ளாதே.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்

ஓம் சாய் ராம், ஸ்ரீ சாய் ராம், ஜெய் ஜெய் சாய் ராம் !!!
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 14, 2015, 06:42:57 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-xpa1/v/t1.0-9/12219395_1633651486884744_7895523547664475029_n.jpg?oh=79ec5e65b5902592b4725add97b20286&oe=56C10107&__gda__=1459020653_6fb7481dffdfdfe83039eb50d80a973a)


"நீ என்ன செய்தாலும் நான் உன் மீது கோபம் கொள்ளவே மாட்டேன்.
நீ என் செல்லக்குழந்தை. உனக்கு இன்னும் பக்குவத்தைப் போதிக்கவே
நான் தோல்வியை அனுமதித்தேன், உனது சிந்தனை இன்றைய
காலக்கட்டத்தை பார்க்கிறது, எனது நோக்கமோ உனது எதிர்காலம்
தொடர்பானது. நீ அந்தக்காலத்தில் சிறப்பாக வாழவேண்டும்
என்பதற்காக உன்னால் சகித்துக்கொள்ளக் கூடிய வகையில் இத்தகைய
சின்னச் சின்ன பிரச்சனைகளை தந்து உன்னை பக்குவப் படுத்துகிறேன்.

"ஸ்ரீ சாய்யியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 14, 2015, 11:24:40 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bru2-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12250113_1633385213578038_1910742927005399941_n.jpg?oh=7ece63e3c56ae578335c69ce166f2325&oe=56B3DA9D)


"என்னிடம் முழு நம்பிக்கை இருந்தால் நிறைவேறாத காரியம் இருக்காது.
விசுவாசமே ஒரு வடிவம் கொண்டு நானாக இருக்கிறேன்.
ஆகையால் உங்கள் நம்பிக்கையை என் மேல் உறுதியக்குங்கள்.
உங்களுக்கு முன்புறமும்,பின்புறமும் நானே இருப்பதை கிரகிப்பீர்கள்.
உன் காரியங்கள் அனைத்திலும் நான் இருப்பேன். இது என்னுடைய வாக்கு தானம்.

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 18, 2015, 02:46:05 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-photos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-0/p480x480/11988766_1634691320114094_3600721530862502012_n.jpg?oh=512f0e1a49601aacf317e3dab2c41565&oe=56E9FCAF&__gda__=1458359300_db877f55b56dbabffbafd518f9a171ad)


"சாய் நாதனின் சத்திய வாக்கு

நான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன், எல்லா திசைகளிலும் இருக்கேன்,
மொத்த அண்ட சராசரத்துலும் புகுந்து வியாபித்து இருக்கிறேன்,
சிரத்தையுடனும் நம்பிக்கையுடன் என்னை பார்க்கனும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு
கண்டிப்பாக தரிசனம் கொடுக்காமல் இருக்கவே மாட்டேன்,
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும்,என்ன செய்துட்டு இருந்தாலும் என்னிடம்
எதையும் மறைக்க முடியாது என்பதை தெறிந்து கொள்ளுங்கள், என் மேல் பக்தி
செலுத்துரவங்களை பார்த்தா எனக்கு ஆனந்தம் எப்பவும் என் பக்தர்களுக்கு
வாழ்கையில் தீமைகள் நடக்க விடமாட்டேன், அது மட்டும் இல்லை தன்னை
என்னிடம் முழுமையாக சமர்பணம் செய்கிற பக்தர்களுக்கு சகல விதமான
கவலைகளையும் நான் விளக்கி விடுவேன்,அப்புறம் அவர்களுடைய
வேதனைகள் அவர்களை விட்டு நிறந்தறமாக விலகிவிடும்.

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 18, 2015, 11:47:17 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12219589_1634544763462083_2911898727181019131_n.jpg?oh=7ed8a194b588a66bb9badbc3363c0a56&oe=56E787C0)


"சாய் நாதனின் சத்திய வாக்கு

உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடிரென தாழும் போதும்,
விழும்போதும், அழும்போதும் அது அவர்கள் கர்மாவினால்
வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து
நீ பயந்துவிடாதே. நான் எதுவரை உனது அசைக்கமுடியாத
நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத்
தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக
உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே.
அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு
வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப்
பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும்
நீ பயப்படாதே.

என்னை மீறி யாரும் உனது இடத்தைப் பிடித்துக் கொள்ளமுடியாது .

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 20, 2015, 12:33:27 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/12241402_1633918880191338_122195844793757055_n.jpg?oh=904d0f3daef616282887cfb653a142d2&oe=56F53A7D)


"சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து,
தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்பிக்கிறானோ,
அவன் வாழ்கையின் நான்கு முக்கிய குறிக்கோள்களாகிய
அறம் (தருமம்),பொருள்( செல்வம் ), இன்பம் ( ஆசை ),
வீடு ( முக்தி ) இவைகளை எளிதில் அடைகிறான்

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 22, 2015, 01:36:28 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fdel1-2.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/11206948_1635356893380870_3883505826991106503_n.jpg?oh=abf30c6ad683ba3bb1b26a4571ed7a18&oe=56F9107F)


"யாரேனும் நூற்றுக்கணக்கான விஷயங்களை உங்களுக்கு
எதிராக கூறட்டும், ஆனால் கசப்பான எவ்விதத்திலும்
அவர்களுக்கு பதில் அளிக்கும் படியான சீற்றங்கொள்ளாதீர்கள்.
இவ்வாறான விஷயங்களை எப்போதும் சகித்துக் கொண்டிருப்பீர்களேயானால்
நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள்.

உங்களிடமிருந்து என்னைப் பிரிக்கும் வேற்றுமைச் சுவரை
இடித்து விடுங்கள். பின்னர் நமது சந்திப்பிற்குரிய சாலையானது
தடங்கலின்றியும் திறந்தும் இருக்கும். ‘நான்’ ‘நீ’ என்ற வேறுபாட்டுணர்வே
குருவிடமிருந்து சீடனைப் பிரிக்கும் தடையரணாகும்.
அது அழிக்கப்பட்டாலன்றி இரண்டறக் கலத்தல்
அல்லது ஐக்கியமாதல் இயலாது

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 28, 2015, 07:11:43 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fdel1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/12310530_1636794503237109_5227737979625604167_n.jpg?oh=3962d4be7a467a0b60630c9a754686c1&oe=56F1381D)


"ஜாதகம் ,கைரேகைக்காரர்களின் ஜோசியம் ஆகியோரின்
முன்னோடி உரைகளைத் தூக்கியெறிந்துவிட்டு என்னை
மட்டுமே நம்புங்கள். என்னை நம்பி என்பால் லயமாகும்
மனிதனின் எல்லாக் காரியங்களையும் பொம்மளாட்டத்தைப்
போன்று நான் நின்று நடத்துகிறேன்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on December 10, 2015, 09:57:02 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xpl1/v/t1.0-9/12347730_1640193346230558_514926886118737810_n.jpg?oh=338894e8a10e1841c66a73eac0577f97&oe=56E67D22)


"பாபா எங்கிருக்கிறார் என்று எவருக்கும் தெரியாத வகையில்
நூலை இழுக்கிறார்; ஆனாலும், விளைவுகள் என்னவோ,
பக்தர்களுக்குப் பின்னால் எந்நேரமும் அரணாக நிற்கிறார்
என்பதை பக்தர்கள் உணரவேண்டும்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on December 14, 2015, 09:24:23 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12345529_1641516559431570_7410604681032864120_n.jpg?oh=05b87640953584a003129a47b27b08fa&oe=56E4EEBA)


"பாபாவுக்கு பக்தியுடன் சேவை செய்யும் அடியவர், இறைவனிடம் ஒன்று கலந்த
உணர்வை அடைகிறார். இதர சாதனைகளைத் தள்ளி வைத்து விட்டு
குரு சேவையில் பணிவுடன் ஈடுபடுங்கள். அந்த சேவையில் சிறிது
கவனக்குறைவு ஏற்பட்டாலும், கபடமான சாமர்த்தியத்தின் நிழல் பட்டாலும்,
சாதகருக்கு தீமையே விளையும். தேவை என்னவென்றால், பாபாவின் மீது
உறுதியான விசுவாசமே.மேலும், சிஷ்யன் சுயமுயற்சியால் என்ன செய்கிறான்?
ஒன்றுமில்லையே! அவன் செய்வதையெல்லாம் சத்குருவன்றோ லாவகப் படுத்துகிறார்!
சிஷ்யனுக்கு தனக்கு வரப்போகும் அபாயங்களை பற்றி எதுவும் தெரிவதில்லை.
பாபா அந்த அபாயங்களை விலக்குவதற்காக செய்யும் உபாயங்களும் கூட
சிஷ்யனுக்கு தெரிவதில்லை!மூவுலகங்களிலும் தேடினாலும் பாபாவைப்
போன்ற தர்மதாதாவை காண்பதரிது. சரணமடைந்தவர்களுக்கு மாபெரும்
புகலிடமான பாபாவிடம் வேறெதையும் நாடாமல் பரிபூரணமாக
சரணடைவோமாக"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on December 23, 2015, 12:02:19 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xft1/v/t1.0-9/12391806_1644414022475157_2383206591583532496_n.jpg?oh=ca335e78534fe8aee31d0b466ad5db58&oe=57087CD8)


"அன்புக் குழந்தையே!
உனக்கு வருவதாக நினைக்கிற நன்மையும் தீமையும் நான் உன்னை சரிபடுத்துவதால்
வருகிறது என்பதை உணர்ந்துகொள். உன்னை மேம்படுத்தவே, இதை மேற்கொண்டு
வருகிறேன். உனது உணர்வு பக்தியாக மாறி என்னையே நீ குலதெய்வமாக வழிபடுவாய்.
எந்த நிலையிலும் அப்பா கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை உனக்குள் வேண்டும்.
என்ன கஷ்டமானால் என்ன எல்லாம் அப்பாவையே சேரும் என்று எண்ணிக்கொள்.
இந்த மானுட தேசத்திற்கு கிடைக்கும் சுகம், புல்லின் மீது பூத்திருக்கும் பூவை போன்றது.
வெயில் வரும்போது காய்ந்து உலர்ந்து காற்றில் பறந்துவிடும் பூவைப் போல கஷ்டத்தில்
அடிபட்டு நோயில் வாடி உதிர்ந்துபோகும் தன்மை கொண்டது. இந்த நிலையாமையை
நினைத்து, என் மீது நம்பிக்கை கொண்டவர்கள், இத்தகைய நிலையாமையிலும்
என்னை அடைந்துவிடுவார்கள். அவர்களின் எதிர்காலம் என் கையில் இருக்கும்.
நான் அடைக்கலமாக இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்து இவ்வுலக வாழ்வில்
நடக்கும் இன்ப துன்ப நிகழ்வுகள் அனைத்தையும் என் மீது வைத்துவிட்டு சுகமாக
நடப்பவர்களுக்கு இதுவே பலன். மகளே இன்னும் சிறிது காலம் இந்த சோதனையை
சகித்துக்கொள்கிறாயா அல்லது என்னை விட்டு விலகி தொடர்ந்து துன்பத்தை
அனுபவிக்க போகிறாயா? . அப்பா நீயே கதி என்றால் உன்னை கையில் தூக்கி
வைத்துக்கொள்வேன். வேண்டாம் எனக்கு எந்த சோதனையும் வேண்டாம் என்னை
இப்படியே விட்டுவிடு என்று சொன்னால், நான் விட்டுவிட்டு பக்கத்தில் நின்று வேடிக்கை
பார்ப்பேன். இடையில் வரும் கஷ்டங்களுக்கு நான் பொறுப்பாளியாக மாட்டேன்.
சரி என்று ஒப்புக் கொண்டால் உனது கவசமாக இருந்து உன்னை காப்பேன்.
வாழ்க்கையில் ஜெயிக்கலாம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on December 28, 2015, 04:19:27 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bru2-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/8280_1646215295628363_5212400063648741295_n.jpg?oh=3156c10c290393f0198eab000c6d8e14&oe=571C248C)


"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து
இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும்
நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.
நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,
அழிப்பவனுமாம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 03, 2016, 09:52:39 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-2.fna.fbcdn.net/hphotos-xlp1/v/t1.0-9/6193_458923204290783_5112538781962893242_n.jpg?oh=855d9f79add414b7edfc22ccb1eda511&oe=57147EB6)


"என்னை தஞ்சம் அடைந்து விட்டாயல்லவா!
இனி எதற்கும் பயப்படாதே.
உன் பயனம் என் பாதையை நோக்கியிருக்கட்டும்.
உனது மனம், புத்தி, அகங்காரம் எனும் மூன்றையும் என்னிடம் சமர்பித்து விடு.
இவ்வுலக வாழ்க்கையில் உன் கையில் ஏதும் இல்லை.
எல்லாவற்றையும் நானே இயக்குகிறேன்.
நம்பிக்கை எனும் அச்சாணியாக என்னை மனதினில் நிறுத்து.
பொறுமையாக வாழ்ந்து வா.
உன்னை சேர்ப்பிக்க வேண்டிய இடத்தில் நான் சேர்ப்பிக்கிறேன்.
நானே உன் சத்குரு, நானே ஈசன் என்னையே வணங்கு,
என் நாமத்தை எப்போதும் ஸமரிசித்து கொண்டிரு ,
என்னை உன் மனதில் நினைத்து உன் கர்மாவை செய்து வா.
அது போதும் உனக்கு .உன்னை நான் கைவிட மாட்டேன் என்னை நம்பு.
இனி வரும் காலம் வளம் பெரும், உன் வாழ்வில் வசந்தம் வீசும்..

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,
அழிப்பவனுமாம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 07, 2016, 11:06:54 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/1917275_1649268831989676_4681767829080355301_n.jpg?oh=0650cff7215e6614471567fb4c8a2203&oe=57059561)


"நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில்
அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசையும் அசைவற்ற
சர்வ ஜீவராசிகளையும் நானே அரைவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும்
தோற்றத்தை நானே கட்டுபடுத்துபவன்,ஆட்டுவிப்பவன்.எல்லா
வர்க்கங்களின் மூலமாதா நானே.நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,அழிப்பவனுமாம்.

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன்,படைப்பவன்,காப்பவன்,
அழிப்பவனுமாம்."

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 09, 2016, 10:59:45 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xlf1/v/t1.0-9/1931347_1649446391971920_4305138027232627268_n.jpg?oh=c11c660d6a6a8a0e989b79c06899f37d&oe=57092A89&__gda__=1463685110_ffb68459f3179eb75cb2b976a330aca2)


"நீங்கள் எதைத் தேடுகிறீர்களோ அதை உடனே உங்களுக்கு
காட்டிக்கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய சொல்லுக்கு
கட்டுப்பட்டவனே தான் விரும்பியதை அடைவான்.."

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 14, 2016, 05:10:03 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12552655_1650888111827748_3794699971602374204_n.jpg?oh=e5388e48f23bcb602df4208a9b1cd6a0&oe=573B6B8A&__gda__=1463565749_0b5ffce3ad8a9b6ff32ffe304b87f81f)


"ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான
மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில்
கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ
தேவையில்லை. என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம்
ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

பாபா தமது உடலில் இருந்த போதும், உண்மையில் அவர் உடலில்
கட்டுண்டு இருக்கவில்லை. அவர் எல்லா இடங்களிலும் எல்லா உருவிலும்
இருந்தார். பாபா அன்றும் இன்றும் ஜீவுடனேயே விளங்குகிறார்.
ஆனால் நம்மிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில்தான்.
இன்றும்கூட அவர் மீண்டும் தமது பக்தர்களுக்கு முன் தோன்ற
முடியும் ; தோன்றுகிறார்."

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 16, 2016, 03:05:40 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-2.fna.fbcdn.net/hphotos-xfl1/v/t1.0-9/12509808_1651034878479738_8525341956256992705_n.jpg?oh=50a7e1c64ccd3f6a95a084f3f8a04d4b&oe=57396498)


"என்னிடம் வரும் எல்லா மனிதர்களும் பணம், ஆரோக்கியம்,
குழந்தைகள் இவைகளையே கேட்கிறார்கள். நான் என் பக்தர்களுக்குக்
கொடுப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அந்த மேன்மையான
ஆத்மீக அனுபவத்தைத் தவிர, வேறு எதுவும் வேண்டாமென்று
கேட்கும் மனிதன் கிடைப்பதே அரிது"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 26, 2016, 06:16:32 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12645198_1655091554740737_2200885943418961340_n.jpg?oh=c6a1cea50c91dd5518951da3103fcb19&oe=57316108)


"குரு ஒரே கடவுள். சற்குருவின் புனிதத் திருவடிகளை நினைவு
கூர்வோமானால், அவர் மேலும் சிறப்பான நிலைக்கு நமது அதிஷ்டத்தை
மாற்றிவிட இயலும்.அவருக்கு சிறப்பாகக் சேவை செய்வோமானால்,
நாம் நமது சம்சாரத்தினின்று விடுபடுகிறோம்.நியாயம், மீமாம்ஸம்
போன்ற தத்துவங்களை நாம் பயிலத் தேவையில்லை.

அவரை நமது வழிகாட்டியாக நாம் அமைத்துக்கொள்வோமானால்,
நமது அனைத்துத் துன்பங்கள், கவலைகள் என்னும் கடலை எளிதாகக்
கடந்து செல்லலாம். ஆற்றையும் கடலையும் கடப்பதில் நாம் மாலுமியை
நம்பியிருப்பதைப் போன்றே,இவ்வுலக வாழ்வெனும் கடலைக் கடப்பதில்,
நமது சற்குருவை நாம் நம்பவேண்டும். நமது அடியவர்களின் தீவிரமான
உணர்வையும்,பக்தியையும் அவர் நோக்கி ஞானத்தையும், சாஸ்வதமாக
கழிபேருவகையையும் அவர்களுக்கு உரித்தாக்குகிறார்."

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 28, 2016, 06:10:53 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/hphotos-xlt1/v/t1.0-9/12565399_477966672388047_4375294246891992907_n.jpg?oh=25a6050a383fc2cb89c9b036375baf21&oe=5742BBA2)


"இதயத்தில் காயம் உண்டாகாதே

யாராவது பண உதவி கேட்டோ, பசியின் காரணமாக உணவு கேட்டோ,
அல்லது உடைக்காகவோ,அல்லது இருக்க இடம் கேட்டோ
உன்னிடம் வரலாம். ருணானுபந்தம் இருந்தாலொழிய
ஒருவரிடம் மற்றவர் வரமாட்டார். அப்படி யாராகிலும் வந்தால்,
உன்னால் முடிந்தால் உதவு, இல்லையேல் மிருதுவான
மொழியில் பேசி அனுப்பிவிடு, கண்டிப்புடன் பேசி
அவர்கள் இதயத்தில் காயம் உண்டாகாதே. ."

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

"ஸ்ரீ சாயி சச்சரித்ரம்

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 01, 2016, 09:23:16 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xta1/v/t1.0-9/12494951_1656918411224718_1139353431339121825_n.jpg?oh=194c089627cc3538ce1cba6226d5eec5&oe=572672B2)


மசூதி (துவாரகாமாயி) மிகவும் பழையதாகவும் பாழடைந்த
மண் கட்டிடாமாகவும் இருந்தது. அடிக்கடி கூரையிலிருந்து
கற்களும் மண்ணும் உதிருவது வழக்கம். ஒருநாள் பாபா
சில பக்தர்களுடன் பகலுணவு உண்டு கொண்டிருந்தார்.
தலைக்கு மேல் ஏதோ இடிவது போன்று சத்தம் எல்லோருக்கும்
கேட்டது. உடனே பாபா தம் கையை உயர்த்தி "இரு, இரு" என்றார்.
உடனே சத்தம் நின்று விட்டது. எல்லோரும் உணவை முடித்தவுடன்
பாபாவும் பக்தர்களுடன் வெளியே வந்துவிட்டார். உடனே மேலேயிருந்து
மண்ணும் கல்லும் கூரையின் பெரும்பகுதியும், இடிந்து, பலத்த சத்தத்துடன்
சற்று முன்பு பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில் விழுந்தது.
அப்போதுதான், யாரிடம் பாபா 'இரு' என்று ஊறினார் என்பதை
எல்லோரும் புரிந்து கொண்டனர். இடிந்து கொண்டிருந்த கூரையிடம்
தான் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். அதுவும் நல்ல பையனைப்
போல அவர் தமது மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு வெளியேறும்
வரை காத்திருக்கவே செய்தது.."

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on July 28, 2016, 12:33:05 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/13659158_1724635731119652_190511767344107860_n.jpg?oh=f160c236f1a693f41b886b17e126511c&oe=5832ABC6)


“நீயே சரணம் என்று தஞ்சம் அடைந்த பக்தனின் துன்பத்தையும் சாயி ஏற்பார்"

இவ்வாக்கு சாய் நாதர் அவர் பக்தர்களின் மேல் கொண்டுள்ள
உள்ளன்பின் வெளிப்பாடே ஆகும். துன்பத்தை அவர் காலடியின் கீழ் வை;
அடுத்தகட்ட வேலையை கவனி; சாய் பாபாவின் மீது உறுதியான
நம்பிக்கை வை; கண்டிப்பாக நிலைமை மாறும். இது அவர் பக்தர்கள்
தங்கள் வாழ்வில் கண்ட உண்மை அனுபவங்கள் ஆகும். பிரச்சனை
உள்ளவர்கள் உங்கள் மானசீக குருவை நினைத்து இதனைக் கடைப்பிடியுங்கள்:
வரும் நாட்களில் என் நிலைமை மாறும் என நம்புங்கள்
சாய் என் வலியை மாற்றுவார் என திடமாக நம்புங்கள்
சாய் ஆதரவு என்றும் எனக்கு உண்டு என மனதார எண்ணுங்கள்
சாயிடம் உள்ள சக்தி என் நோய்களைக் குணப்படுத்தும் கண்டிப்பாக
நானும் சாயின் அருளால் குணமாவேன் என மனதார நம்புங்கள்

உங்களுடைய கவலைகள் அனைத்தையும் சாய் பாபாவின் திருப்பாதங்களின்
அடியில் வையுங்கள்.உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ உங்கள்
பிரச்சனைகளைப் பற்றி என்ன கூறினாலும் கவலைப்படாதீர்கள்.
சாய் பாபாவை முழுமனதோடு நேசிப்பது எப்படி என்பதை மட்டும்
கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனம் முழுவதும் சாய், சாய், சாய்
என நிறைந்திருக்க வேண்டும்.ஒவ்வொரு நொடியும் சாய் பாபாவை
நினைக்க வேண்டும், அவரின் சச்சரித்திரம் பாமாலைகளை நாவும் பாடிட
வேண்டும். இவ்வாறு சாய் நாதரை உங்கள் உடல் முழுவதும் நிரப்பினால்
உங்கள் தேவைகளை அவர் நிறைவேற்றுவார். சித்திகள் அனைத்தும்
கொண்ட சாய் மகானின் நினைவுகளே உங்கள் மனதின் காயங்களை
குறிப்பாக உடல் நலக்குறைவைப் போக்கும் அருமருந்து.

"ஸ்ரீ சாயியைப் பணிக அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும். "

"ஸ்ரீ சற்குரு சாய் நாதனின் திருவடிகளே சரணம்"

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 01, 2016, 12:40:27 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14907611_1236429979766656_460883736482186492_n.jpg?oh=54aa0c7dddc1f2458f1c88218432cff2&oe=58D09E87)


என் செல்லப்பிள்ளையே!

எதற்காக இந்தப் புலம்பல்? ஏன் இந்தத் தள்ளாட்டமும், சோர்வும்?
உன் இறுதி நாள் வரையில் உனக்குத் துணை செய்வேன் என்று நான்
ஒரு தரம் சொல்லிவிட்டு மனம் மாறிப் போவதற்கு மனிதன் கிடையாது.
உன்னைப் படைத்த பரப்பிரம்மம் என்று பலமுறை எடுத்துச் சொல்லியும்
எதற்காக இந்த அவநம்பிக்கை?

வாழ்க்கை என்பது மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பது நீ அறியாததா?
வாழ்க்கையில் நீ நினைத்தது எல்லாம் நடந்துவிட்டால், பிறகு நான் எதற்கு?
வாழ்க்கை என்ற ஒன்று எதற்கு? அனைத்தும் அனுபவம் தருவதற்காக
உனக்குத் தரப்படுபவை என்று நான் விளக்கிக் கூறியும் எதற்காக இப்படி
அறியாமையால் அவதிப்படுகிறாய்?

உனக்குத் துயரத்தை தருவது இப்போதைய உனது நிலையல்ல. உனது
தன்னம்பிக்கைக்குறைந்த தன்மை, அதாவது அவநம்பிக்கை என்பதைத்
தெரிந்துகொள். உயிரே போனாலும் தானாகப் போகட்டும், அது உன் உடலில்
இருக்கும் வரை தொடர்ந்து போராடு. கோழையாக அழுது புலம்பாதே. தலைவலியாக
இருந்தால் என்ன? தலை போகும் காரியமாக இருந்தால் என்ன? இந்த வாழ்க்கையில்
இந்த ஒரு தரம் மட்டுமே நீ கடினமான பாதையைக்கடந்து போகப் போகிறாய்..
இதோ நடுப்பகுதியைத் தாண்டிவிட்டாய். இன்னும் கொஞ்ச நேரம்.. கொஞ்ச தூரம்..
சுமையை இறக்கிவைக்கும் காலத்தை எட்டிப்பிடிக்க இன்னும் சற்று அவகாசம்தான்
இருக்கிறது..

அதற்குள் அவசரப்பட்டுவிடாதே சோதனையை சகிக்கிறவன்தான் பாக்கியவான்.
ஏனெனில்,சோதனைக் காலத்தில் அவனோடு நான் நீக்கமற நிறைந்திருக்கிறேன்.
பிரச்சினைகளை எதிர்கொண்டு போராடத் தயாராகிறவன் பாக்கியவான், அவனோடு
கைகோர்த்து யுத்த களத்தில் அவன் சார்பாக நான் நிற்கிறேன்.. இழிவு
படுத்தப்படும்போது சகிக்கிற நீ பாக்கியசாலி.. உன் இழிவுகளை நான் புண்ணியங்களாக
மாற்றிக் கொடுத்துக்கொண்டு உன் துயரத்தில் பங்கெடுக்கிறேன்..

சொல்வதெல்லாம் என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது, ஆனால் ஒன்றையும்
செய்யவில்லையே என்று நீ கேட்பாய்.. அந்தளவுக்கு உன்னை புத்திசாலியாக நினைத்துக்
கொண்டிருப்பாய்.. நான் செய்வது உனக்குத் தெரியும்போது, நீ என்னை முகம் முகமாகப்
பார்க்க முடியாது, தலை கவிழ்ந்து கொண்டிருப்பாய்.

நீ விரும்புகிற வழிகளில் அல்ல, நான் விரும்புகிற வழிகளில் உன்னை நடத்திச் சென்று
ஜெயிக்க வைப்பதுதான் எனது நோக்கம். அந்த நோக்கத்தில் நான் உறுதியாக
இருக்கிறேன், அவநம்பிக்கை கொண்டு அதை நீதான் தளர்த்துகிறாய்.

நான் வளர்க்கிற சிறுத்தைக் குட்டியாக நீ மாற வேண்டும். பசி பட்டினி பொறுத்தாலும்
கம்பீரத்தை கைவிடக்கூடாது.. வாய்ப்பு கிடைக்கும்போது வெற்றியோ தோல்வியோ
முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும். ஆழ்கடலாக இருந்தால் என்ன?ஆகாயவெளியாக
இருந்தால் என்ன? நான் உன்னோடு இருக்கும் போது அவை அனைத்தும் உனக்கு
அற்பமானவைதான் என்பதை மறந்துவிடாதே.

நீ ஞானியாக இருந்தால் நான் உனக்கு வேறு மாதிரி உபதேசித்திருப்பேன். “இந்த
தேகமானது கர்மாதீனமாக ஏற்பட்டது. தன்னை உண்டு பண்ணிய கர்ம வேகம் எதுவரையில்
இருக்குமோ, அந்தக் காலம்வரை, பிராணனுடன் இந்த தேகம் இருந்துகொண்டிருக்கும்.
அது கனவு போன்றது. ஆத்ம சாட்சாத்காரம் பெற்ற ஞானியும், யோகத்தில் முன்னேறியவரும்
நிலையற்ற இந்த தேகத்தை நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள். நீயும் அப்படியே இரு”“
என போதித்திருப்பேன்.

ஆனால், நீயோ சம்சாரத்தில் இருக்கிறாய்.. உனக்குத் தேவையானது இப்போது, பிரச்சினையில்
இருந்து விடுதலை.. மிகப் பெரிய அளவில் எரியும் அக்னியானது எப்படி விறகுக்
கட்டைகளை எரித்து சாம்பலாக்குகிறதோ, அப்படி, என் மீது நீ கொண்ட நம்பிக்கையும்,
பக்தியும் பிரச்சினைகள் என்கிற கட்டைகளை, பாவக் குவியல்களை எரித்துச்சாம்பலாக்கிவிடும்.
யோகம், சாங்க்யம்,தர்மத்தை அனுசரிப்பதால் வரும் பலன்கள், வேதத்தை பாராயணம்
செய்வதால் கிடைக்கும் பலன், தவம்,தியாகம் போன்றவை தரும் எல்லா
நன்மைகளைக்காட்டிலும் என் மீது பக்தி செய்வதால் உனக்கு கிடைக்கும் பலனின்
அளவு அதிகம்.

நீ பலனைக் கருதாமல் பக்தி செலுத்து. நான்உன் பலனை வைக்காமல் எடுத்துத்
தருவேன்.உரியவரின் கூலியை கொடுக்காமல் வைத்துக்கொள்ள மாட்டேன்
என்பதற்கு, நானே உதாரணமாகவாழ்ந்ததை நினைவு படுத்துகிறேன். எனக்கு
ஒருபக்தன் ஏணி எடுத்துப் போட்டான், நான் அவனுக்குஇரண்டு ரூபாய் கொடுத்தேன்.
எதற்கு இப்படி தருகிறீர்கள் என்று என் பக்தர்கள் கேட்டபோது,உழைத்தவனின்
கூலியை வைத்துக் கொள்ளக்கூடாது என்றேன். இந்த உதாரணம் உனக்கு நினைவு
இருக்கும் என நினைக்கிறேன்.

இதை உணராமல், என் மீது வைக்கிற பக்தியில் ஏற்படுகிற சுனக்கம் காரணமாகத்தான்
தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன. உன்னை புடம் போடுகிறேன் என்று சொல்லிப்
பார்த்தேன்.. அழகு படுத்த இப்போது உன் அஸ்திவாரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறேன்
என்று கூறினேன். நீ எதையும் லட்சியம் செய்யாமல், புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.

எப்போதும் என் மீது பக்தி கொண்டுள்ளவன் மாறாத தைரியம் உள்ளவனாக இருப்பான்.
அப்போது வியாதிகளுக்கும், கவலைகளுக்கும் வலிகளுக்கும் இன்னல்களுக்கும்
எங்கு இடம் இல்லையோ, யாரும் பசியாலும் தாகத்தாலும் முதுமை பற்றிய பயத்தாலும்
எங்கு வருத்தப்படுவது இல்லையோ, எவ்விடத்தில் மரண பயம் இல்லையோ,
எவ்விடத்தில் விதிக்கப்பட்டது, விதிக்கப்படாதது என்னும் பேதத்திற்கு இடம் இல்லையோ,
எவ்விடத்தில் ஜீவன்கள் பயமின்றி உலவுகின்றனவோ அவ்விடம்தான் சொர்க்கம்
என்பதை உணர்வீராக.

அவனுள் அறிவு ஆட்சி செய்யும், அதனால் அவன் எந்தப் பிரச்சினை வந்தாலும்
புலம்பமாட்டான். என் மீது பக்தி செய்வதாக சொல்லிக்கொண்டு, நடக்குமோ,நடக்காதோ,
கிடைக்குமோ, கிடைக்காதோ, ஆகுமோ ஆகாதோ என்று நினைப்பவன் என் பக்தனல்ல.

அறிவுடன் என்னை அசகுகிறவனை நான் கடாட்சிக்கிறேன். ஏனெனில், அறிவிழந்தவனது
செயல்பாடுகளில் திட்டமிடும் சக்தி அழிந்து விடுவதால், பாதியிலேயே தன் பக்தியை
அவன் முறித்துக்கொண்டு, சந்தேகப்பட ஆரம்பித்து விடுகிறான்.

கசப்பு மருந்தின் மீது இனிப்பைத் தடவி உள்ளுக்குக்கொடுப்பதைப் போல, உன்
பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு தருவதற்கு இப்போது இந்த இக்கட்டான நிலை
என்கிற மருந்தை தந்திருக்கிறேன். அதன் மீது என் பக்தி என்ற இனிப்பைத் தடவி
உள்கொள்ள உனக்குக் கற்றுத்தருகிறேன். என் பேச்சைக்கேட்டு, அப்பா உன் விருப்பம்
போல என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்..

என்னைக் கைவிட்டுவிடாதே என்று சரணாகதி செய்து விட்டாயானால், உனக்கு மிக
விரைவில் மகிழ்ச்சியான நிலையைத் தந்து விடுகிறேன் நீ எப்படிப்பட்ட பிரச்சினையில்
இருந்தாலும் உன்னை நான் காப்பாற்றிவிடுகிறேன், உன்னை நிர்க்கதியாக ஒருபோதும்
விடமாட்டேன். சில விஷயங்களை எதிர்காலத்தில் நீ உணர்ந்து கொள்வதற்காகவே
இப்போது தீவிரமாக பிரச்சினையை தருகிறேன்.
என்னைத் தஞ்சமடைந்த உன்னை எப்போதும் நிர்க்கதியாக இருக்கவிடமாட்டேன்
என்பதையும்,ஒருபோதும் கைவிட மாட்டேன் என்பதையும் உறுதியாக நம்பு. உன்
நம்பிக்கை வீண் போகாது. இன்னும் கொஞ்ச காலத்தில் உன் பிரச்சினைகள்,நோய், கடன்,
கசப்பான உறவுகள் அனைத்தும் மாறி அனைத்திலும் சுகமாக வாழ ஆரம்பிப்பாய்.

மற்றவர்கள் உன்னை உதாரணமாக வைத்து என்னை நம்பிக்கையோடு வணங்குவார்கள்.

அன்புடன்

அப்பா சாயி பாபா

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 01, 2016, 11:49:10 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14910455_1729705550681831_2261921218363121803_n.jpg?oh=af707f508cdf027ebdc046c2ce513fe1&oe=588E8A04)


என் செல்லப்பிள்ளையே!

கடும் சோதனைகள் வருவது ஏன் ...?
கடும் சோதனைகள் வருவது ஏன் ...?
கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் ...?
.
சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை
பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ,
 இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.

கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை.
அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும்
நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச்
சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.

நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக்
கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.

மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை
அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில்,
எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை ... !

எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு
மட்டும் ஏன், இந்த மாருதி கார், ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி
மொபைல், லேப் டாப், ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை,
வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?

வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது, தங்கம் நெருப்பில்
புடம் போடாமல் புனிதமாகாது. நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,
ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை
சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.

ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த
உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை
சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.

கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு
நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும்
ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.

விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே
மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்

சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது.
ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம்
காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது
எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.

எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம்
சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி
கடந்து சாதனையாக்கலாம்.

உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம்
இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும்
தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.

கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்...
நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகுங்கள்....
வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்....
கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்...
பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்...
சந்தேகங்களை நம்பாதீர்கள்
நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.
உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.
கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்..

அன்புடன்

அப்பா சாயி பாபா

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 02, 2016, 11:43:43 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14915456_10205553601438633_4323360535096165757_n.jpg?oh=6464a8a2312fb8a804864e79eaecd044&oe=58CBA860)

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14639676_335336830161910_609071577816963253_n.jpg?oh=0c2251406dbca271185e9c6a6d6c96d7&oe=58D13AA1)



பாபா யோகாசனத்தையோ, பிராணாயாமத்தையோ, இந்திரியங்களைப்
பலவந்தமாக அடக்குவதையோ, மந்திரத்தையோ, தந்திரத்தையோ,
யந்திர பூஜையையோ, யாருக்கும் போதிக்கவோ, விதிக்கவோ இல்லை.
பாபாவின் ஓரே போதனை பொறுமை, நம்பிக்கை

- ஸ்ரீ சாயி சத்சரித்ரா

ஓம் ஜெய் சாய் ராம்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14947946_1730294897289563_8396722396423770425_n.jpg?oh=7bbe5b6bb249ea7e903778efba2263b0&oe=58D56B8A)

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14900533_890925191041985_4882060302416079881_n.jpg?oh=b513b24369e5c5cb3873ab66e1daffc7&oe=58D16694)
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on November 04, 2016, 01:40:55 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/14702300_1721494738169579_4502587237304501494_n.jpg?oh=b438c93eee60dc8d74f4774c38a94144&oe=58873BE9)


என் செல்லப்பிள்ளையே!

நீ இன்று வரை நடக்குமோ நடக்காதோ என தவித்துக் கொண்டு இருக்கிற
விஷயம் நிச்சயமாக நடந்துவிடும். பல நாட்களாக வைக்கப்படும் என்னுடைய
வேண்டுதல், தாமதமாகி தாமதமாகி இன்றைய தினத்திற்கு வந்து விட்டது.
இவ்விதமாக இழுத்துக் கொண்டே போவது நன்று அன்று என நினைத்து
என் பாதத்தில் விழுந்து வலியையும் துன்பத்தையும் நிவர்த்தி செய்ய
வேண்டினாய். அது இதோ நிறைவுக்கு வருகிறது. நான் அடிக்கடி கூறும்
இரண்டு பைசாக்களை உன் கையில் பத்திரமாக வைத்துக் கொள். அது உன்னை
பாதுகாக்கும். நம்பிக்கை பொறுமை தான் அந்த பைசாக்கள். பொறுமையாக இரு
என்பதற்கு பொருள் அடிமையாக இருப்பதல்ல. அமைதியாக இருப்பதும் அல்ல.
விருப்பத்திற்கு மாறான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் போது அதை
சகித்துக்கொள்ளுகிற தன்மைக்கு தான் பொறுமை எனப்பெயர். என்ன நடந்தாலும்
நான் பொறுமையாக இருந்து அப்பாவிடம் முறையிடுவேன் என்று மட்டும்
சொல்லிக்கொள். அவ்வித பொறுமையை வளர்க்க என்னிடம் பிரார்த்தனை செய்.
இது உன் மன வலிமையை அதிகமாக்கி சகலத்தையும் கொண்டு வந்து சேர்க்கும்.

தன்னம்பிக்கை வளர இரண்டு விஷயங்கள் மட்டும் தேவை. தைரியம் அதில்
முதலாவது. இதை கடைபிடித்தால் எந்த வேலையும் சுலபமாக முடியும். அஞ்சாமை
வாழ்வு, அச்சம் மரணம் என்பதை நீ அறியமாட்டாயா? துணிவே வாழ்வின் துணை
என்பது உனக்கு தெரியாதா? ஆகவே முதலில் தைரியத்தை வளர்த்துக்கொல்.
அது கடவுளை உனக்குள் அழைத்து வந்து அமரவைக்கும். அடுத்து, சுயநலமின்மை
இருந்தால் எந்த ஒன்றும் இன்பமாக தெரியும். சுகமும் துக்கமும் உன்னை நெருக்காது.
தீமைகள் வந்தால் அது நம்மை பக்குவப்படுத்த வந்தது என நினைத்து அதை ஏற்று
தீர்க்கும் முயற்சியிலேயே பக்குவபட்டுக்கொள்ளும்.

தோல்வி தோல்வி என நினைத்துக்கொண்டு காலத்தை கடத்தாதே, இனி அந்த
வார்த்தை உன் வாயில் இருக்காது. ஆம் நீ ஜெயிக்க போகிறாய் அதுவும்
என் ஆசியோடு. சந்தோஷப்படு!

அன்புடன்

அப்பா சாயி பாபா

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 28, 2017, 03:31:43 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fbom1-1.fna.fbcdn.net/v/t1.0-9/15672569_10205921836924290_3362885639365247593_n.jpg?oh=261393b07e0e14b5fea0d066dc0f3d7c&oe=591BF4B3)


மனிதன் தானே செய்விப்பவனும்,அனுபவிப்பவனும் என்று நினைத்துக்கொண்டு
முடிவற்ற இடர்பாடினால் தன்னை தானே சிக்கவைத்துக் கொள்கிறான்.
விடுவித்துக்கொள்ளும் வழியும் அவனுக்கு புலப்படவில்லை. பாபாவின் பாதத்தில்
செலுத்தும் அன்பான பக்தி ஒன்றே ஒரே வழி. சாய்பாபா என்னும் மகத்தான
விளையாட்டுக்காரர் தமது அடியவர்களை வழிநடத்துகிறார், அவர்களை
தாமாகவே, தமது பண்புருவாகவே மாற்றம் செய்து கொள்கிறார்.- ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on August 23, 2017, 05:16:32 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent.fdel1-2.fna.fbcdn.net/v/t1.0-9/20953251_510575249275485_3685780693480381023_n.jpg?oh=bcadea677b52ff6bbecad188135589ff&oe=5A29EB43)


ஓம்ஜெய்சாய்ராம்!

என் அன்பு குழந்தையே வாழ்க்கை நினைத்து நீ திகைத்து நிற்கின்றாய்
வாழ்க்கை பற்றிய திகைப்பு எதற்கு என் பிள்ளையை நான் எப்படி திகைக்க
வைப்பேன் வாழ்க்கை என்பது ஒரு தோற்றம் உன்னை படைத்த தோற்றம்
உன் குணங்களின் தோற்றம் என தோற்றத்தின் அடிப்படையில் உன் வாழ்க்கையின்
அடிப்படை விஷயங்கள் அந்த தோற்றத்தை நீ எப்படி கைபிடிக்கிறாய் என்பதை
வைத்தே உன் வாழ்க்கையின் பக்கங்கள் இருக்கும் என்றும் மறக்காதே அந்த எல்லா
பக்கங்களில் உன் சாய்தேவா தான் எழுதுகிறேன் என்று உன் போக்கை நான் கவனித்துக்
கொண்டு தான் இருக்கிறேன் என் கண்ணில் இருந்து எதுவும் மறையாது என் குழந்தை
நீ நல்ல மனது கொண்டவர் உன் தவறுகளையும் நான் அறிவேன் அவை சரி செய்யவே
நான் இந்த விளையாட்டை உனக்கு நடத்தினேன் எதையும் அதிகமாக ஆராய்ந்து
பார்க்காதே வாழ்க்கையை நிம்மதியாய் வாழ முடியாது உன் வாழ்க்கைக்கு உன் சாய்அப்பா
பொறுப்பு என் பொறுப்பில் உள்ள பிள்ளையை நல்ல வழியில் வழிநடத்தி வாழ்க்கை
என்னும் பெருங்கடலை கடக்கச் செய்து கரை சேர்ப்பது தான் எனக்கு நிம்மதி நீ கடக்கும்
பாதை எப்படி பட்டதாய் இருக்கும் என்று நீ யோசிக்க வேண்டாம் அது உன் சாய்தேவா
காண்பிக்கற பாதை அதில் அவர் துணை எனக்கு உண்டு என்று மண்டும் நீ நினை உன்னை
பாதுகாப்பதற்கே நான் இங்கு உள்ளேன் உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை
உன்னை விலகி போகும்படி நான் சய்வதும் இல்லை உன் அம்மாவாக அப்பாவாக
என்றும் துணையாய் அரவணைப்பேன் !!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on August 24, 2017, 01:47:43 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/20993922_1819394811706853_6720798381529975483_n.jpg?oh=7077ce9eab1724e858632f9c30e1d981&oe=5A2D13B7)


ஓம் ஜெய் சாய்ராம்!

நான் விரும்புவதில்லை

நான் உனது ஆசைகளை பூர்த்தி செய்ய ஆவலாய் இருக்கும்போது வீணாக
மற்றவர்களை கேட்டு தெரிவது பயனில்லை. உனது எல்லா கேள்விக்கும்
நானே விடையளிக்கத் தயாராக இருக்கும்போது மற்றவர்களைக் கேட்பதையும்,
அனாவசியமாகப் பிறரிடம் விசாரிப்பதையும் நான் விரும்புவதில்லை-

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on September 04, 2017, 01:27:37 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/21231213_515363252130018_1546682129485853473_n.jpg?oh=f141de527789cc0291b7372bd8c39e52&oe=5A128EC2)


ஓநீ எனக்கு மனதிலும், தாளிலும் எழுதிய கோரிக்கைகளை பார்க்கிறேன்,
கண்ணீர் முட்டுகிறது. என் பிள்ளைகள் சீர்கெட்டு போகிறார்களே என்ற
ஆதங்கத்தால், வயதாகி, குழி விழுந்த என் கண்களில் இருந்து கங்கை பிரவாகித்து
வருகிறாள். சக்தி என்னை விட்டு விலகி உட்கார்ந்து கொள்வதால் எனது கால்கள்
பலமிழந்து தள்ளாடுகிறது. குழந்தையே! எனதருள் உனக்கு பூரணமாக இல்லையென
நினைக்கிறாய், அப்படியில்லை. எல்லோருக்கும் எனது அருள் பூரணமாகவே
வழங்கப்படுகிறது. குழந்தைகளில் நல்ல குழந்தை கெட்ட குழந்தை என நான்
தரம் பிரிப்பது இல்லை. எல்லோரும் என் குழந்தைகள், நான் எல்லோருக்கும்
தாய் தந்தை. உனது நலன் மட்டுமே என் விருப்பம், இப்படி இருந்தும் நீ கஷ்டபடுவதற்கு
காரணம், என் மீது உனக்கு இன்னும் பூரணமாக வராத நம்பிக்கை. உனது பூர்வ ஜென்ம
வினைகளை முடித்த பிறகே நான் உன்னிடம் நிரந்தரமாக தங்கமுடிந்தது.

எனது லீலைகளை அனுபவிக்க ஆரம்பித்தாய். உன்னுள் தன்னம்பிக்கை வளர்ந்தது.
உனக்கு ஜெய்ப்போம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இப்போது பிடி தளர்ந்து நீ தள்ளாட
ஆரம்பித்திருப்பதற்கு காரணம், உனது அஜாக்கிரதை உணர்வு. குழந்தையே உங்களது
அஜாக்கிரதை உணர்வு, கவனமின்மை, அலட்சிய போக்கு போன்றவற்றை மாற்றிக் கொள்,
என் மீது மாறாத நம்பிக்கை வை அனைத்திலும் உனக்கு வெற்றி கிட்டும், அதைவிடுத்து
நான் உனக்கு அருள் புரிவதில்லை, நான் உன்னை கைவிட்டுவிட்டேன் என்றெல்லாம்
அசட்டுத்தனமாக யோசித்து என் மீது வெறுப்பை உமிழாதே! ஏனெனில் நீயாக என்னை
தேடவில்லை, நானே உன்னை தேடி வந்தேன். நீயாக என்னை வணங்கவில்லை
நானே வணங்க வைத்தேன். ஏன்? ஏனென்றால், நீங்கள் உணர்வுள்ளவர்கள், சன்மார்க்க
நம்பிக்கை உள்ளவர்கள். மனசாட்சிக்கு பயந்தவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக
என்னோடு பூர்வ ஜென்ம பந்தம் உள்ளவர்கள். அப்படி இருக்க நான் எப்படி
உன்னை கைவிடுவேன்.....................

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/21231064_515363268796683_7969465659463746990_n.jpg?oh=b07fafcfdc74a0045426b129f3776f31&oe=5A538230)

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/21231807_515363295463347_5135518882022169643_n.jpg?oh=285305ed5dc04e6d822d45749af75382&oe=5A24E83B)

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on September 11, 2017, 02:34:07 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/21371329_1852379598124639_3161086116158729753_n.jpg?oh=8962b33f5a3e3ca84fbeb12e1cd300ca&oe=5A608D9B)


ஓம் ஜெய் சாய்ராம்!

அன்பு குழந்தையே..!

 ஏன் காரணமில்லாமல் ஒரு விஷயத்தை நீ நினைத்து கொண்டு
இன்று புலம்பி வேறு எதிலும் உன் கவனத்தை திசை திருப்ப முடியாமல்
நின்று கொண்டியிருக்கிறாய் , உன் வாழ்க்கையில் எல்லாரையும் நேசி
அவர்கள் அன்பை புரிந்து கொள், அவர்கள் உன்னை காயப்படுத்தி இருக்கலாம் ,
உங்களை பற்றி தவறாக கூட பேசி இருக்கலாம் ,ஆனால் அவர்கள் உன்னை
நேசிக்கிறார்கள் ,உன் மனம் காயப்பட்டு இருக்கிறது ,உன் மனதில் கோபம்
எரிச்சல் வெறுப்பு இவை எல்லாம் பாலில் படிந்த ஆடை போல தான்
மேலொட்டமாக தான் இருக்கிறது ,அதை இன்று உனக்கு உணர வைத்தேன் ,
அதனால் உன் கோபத்தை விட்டு விடு ,உன் மனதிலும் பாசம் இருக்கின்றது,
அது தான் உண்மை உண்மையானதும் கூட ஆனால் உன் பாசத்தை நீ வெளியே
காட்டாதே, அது இருக்கும் இடம் தெரியாமால் இருந்தால் தான் உனக்கு மதிப்பு,
அதற்கும் மேல் உண்மையான அன்பை வெளியே காண்பிக்க வேண்டிய
அவசியமில்லை, உன்னோடு எல்லா சந்தேங்களையும் பிரச்சனைகளையும்
நான் தீர்த்து வைப்பேன், உன் அம்மாவாக அப்பாவாக நான் துணை நிற்பேன்...."

ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on September 12, 2017, 01:25:53 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/21430575_1850742408288358_8398691910611780679_n.jpg?oh=97dbc919d9aa18a32a5cbe951ab04141&oe=5A48DD87)


ஓம்ஜெய்சாய்ராம்!

அல்லா மாலிக்!

என் அன்பு குழந்தையே!

என் உயிரான என் பிள்ளைக்கு வாழ்க்கையின் வேகம் புரியவில்லை
தண்ணீர் எப்படி கீழே சிந்தினால் காய்கிறதோ அந்த அளவு சீக்கரமாக
நகர்க்கின்றது தான் வாழ்க்கை

எல்லாருக்கும் நல்ல நேரம் வாழ்க்கையில் வேகமாக வருகிறது
எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டமான நேரங்கள் என ஆதங்கப்படுகிறாயா

உன் வாழ்க்கையில் உனக்கானது உனக்கான சரியான நேரத்தில் நடைபெறும்

மற்றவர் வாழ்க்கையோடு உன்னை ஓப்பிடாதே அவர்களின் வாழ்க்கை
சாயல் வேறு உன் வாழ்க்கையின் சாயல் வேறு இரண்டையும் படைத்தவன்
நான் அதற்கான தேவைகள் எல்லாம் நேரம் வரும் போது நிச்சயம்
உன்னை வந்து அடையும்

பொறாமை நான் படப் கூடாது என்று நினைக்கும் போதே நீ அதில் இருந்து
விடுப்பட ஆரம்பித்துவிட்டாய்

எதற்காகவும் கலங்காதே உன்னையும் உன் குடும்பத்தையும் மீண்டும்
வேரூன்றி நிற்க செய்வேன்

அந்த வேரானது பூமியில் இருந்து மேலொங்கி வளர்ந்து நிற்கும் தன்மையுடையது

உன்னை மாற்ற எனது விருப்பங்களே இந்த நிகழ்வுகளெல்லாம் உன்னை எட்டி பார்க்கிறது

உப்பும் சீனியும் பார்ப்பற்கு ஓன்றாக இருக்கும் அதை வெறுப்படுத்தி பார்க்க
தெரிந்தால் தான் அது என்ன என்பது உனக்கு புரியும்

அதே போலவே தான் உன்னிடம் நிறை குறை என்ன என்பதை  சூழ்நிலைகளில்
தான் உணர முடியும்

அதை புரியவைக்க தான் இவ்வளவு நிகழ்வுகளை நடத்தி வைக்கிறேன்

என் பொறுப்பு நீ நிச்சயம் நீ ஜெயமாக வாழ்வாய்

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் எப்போதும் உனக்கும் உன்னை
சார்ந்தவர்களுக்கும் உண்டு

உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி
நான் செய்வதும் இல்லை

ஏனென்றால் நீ என்பது நான் என்ற என் சாய்தேவா என்பதை நீ உணர ஆரம்பித்த
அந்த நொடியில் இருந்தே என் உயிராய் ஆகிவிட்டாய் நீ

என்றும் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இருதயத்தின்
கருவறையில் சுமந்து அரவணைத்து வளர்ப்பேன்!!!

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on December 25, 2017, 07:05:27 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/25507946_1562319423837107_8977758528473855032_n.jpg?oh=dbcf03fce0888d99701bf6706c1577eb&oe=5AB7B3FD)



ஓம்ஜெய்சாய்ராம்!

அல்லா மாலிக்!

என் அன்பு குழந்தையே!!!

வாழ்க்கையில் நீ என்னை அறியும் முன்பாக உன்னை நான் அறிந்தேன் !

அப்படி இருக்கையில் உனக்கு எது சரி எது உனக்கானது இல்லை
என்பது எனக்கு தெரியும்!

உன் உருவத்திற்கு உன்னுடைய ஜென்மம் புதியதாய் உறவுகளும்
பந்தம்களும் புதியதாய் இருக்கலாம் ,ஆனால் உன் நீ எடுத்த எல்லா
ஜென்மத்திலும் நீ என் பிள்ளை !

உன் உச்சிமுதல் நுனி  கால் வரை நான் அறிவேன் !

உன்னை எப்படி நல்வழி படுத்தவேண்டும் என்று உன் மனதில்
எந்த வகையில் உனக்கு நான் காண்பித்தால் நீ நேர்மறை வழியில்
வருவாய் என்பதை நான் அறிவேன் !

உன்னை சேர்க்க வேண்டிய இடத்தில் உனக்கான சுற்றத்தில்
உன்னை அனுமதிப்பேன்,உனக்கு எது நல்லதோ  அதை மட்டும்
தான் உன்னிடத்தில் நான் அனுமதிப்பேன் !

நீ எதை தேடி என்னிடத்தில் நோக்கினாய் அதை உன்னிடத்தில்
உனக்கு நிச்சயம் அருளுவேன் !

உன்னிடத்தில் சுலபமாய் உனக்கு கிடைக்கும் விஷயம் அதை
உதாசீனப்படுத்தாதே அது இல்லாதது போது தான் அதன் அருமை உனக்கு புரியும்!

வேணாம் நீ சொல்லும் விஷயங்களில் உனக்கான நல்லது நிறைந்து
இருக்கும் ஆனால் அதற்கான உழைப்பு அதிகம் ,அதை உன் மனம்
விரும்பாது கடினமான விஷயங்களில் ஈடுபட ஆனால் அவைகள்
உன் மனதை நேர்வழிப்படுத்தும் உனக்கு நல்லதாய் அமையும்்!

நீ வைர கல் உன்னை வடிவம் கொண்டு வந்து வெளிச்சத்தின் பேர்
ஔியை போல் வீசவே நான் உனக்கு இவற்றை எல்லாம் நிகழ்த்துகிறேன்்!

நீ இந்த துவாராகமாயீ தாய் தேக்கத்திலும் குருதிலும்  இருந்து பிறந்த
என் உயிரே நீ தான் என் பிள்ளையே !

உன் சாய்அப்பாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல்
இனிமேல் என் நாவில் தோன்றும்் சொற்களின் பேர் அருளை பெறுவாய் !

அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம்
வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன் !

நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு
நான் இருப்பேன்்!

உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா
துவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும்
அகலமாட்டேன் உன்னில்  எப்போதும் நான் இருப்பேன் !

நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து  உன்னிடத்தில் நான்
என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ
அன்றே நீ என் உயிரான பொறுப்பு!

உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும்
உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு
உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது
என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன் !

அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும்  அஞ்சாதே உன்னோடும்
உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன்!

என் பிள்ளை என்னிடம் அடம்பிடிக்கும் கோபப்படும் சண்டையிடும்
அதே போல் அழும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும்

பிள்ளைஎன்றால் தன் தாயிடம் தான் இப்படி நடந்து கொள்ள
முடியும் நீ உன் துவாரகாமாயீ தாயிடம் நடந்து கொள்கிறாய்
உன் சந்தோஷத்தில் என் சந்தோஷம் இருக்கிறது உன் அழுகையில்
என் கண்ணீரும் இருக்கிறது உன் சண்டையில்  என் மேல் நீ கொண்ட
தாயின் உரிமை இருக்கிறது அடம்பிடிக்கும் போது உனக்கான
பக்குவத்தை நல்லது கெட்டது தெரிய வைக்க வேண்டும் என்றும்
உன் கோபத்தில் உன்னை அமைதியாகி உன்னை நல்வழி படுத்த
வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும்
உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது!

இதற்கு உன் மேல் கோபம் கொள் மாட்டேன் அதை தாண்டி
என் கோபம் இருந்தால் நிச்சயம் அது உன்னை மாற்றவே நல்ல
வழியில் என்பதற்கே பொருந்தும் !

என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ !

உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி 
போகும்படி நான் செய்வதும் இல்லை !

நீ ஜெயமாக நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா செல்வ வளங்களைப்
பெற்று சீரும் சிறப்புமாய் நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான
வாழ்க்கையை பெறுவாய்!

உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை என் இருதயத்தின்
கருவறையில் சுமந்து  அரவணைப்பேன்!

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 18, 2018, 12:53:30 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/26731088_1661338057275844_6375979188626748842_n.jpg?oh=4c5cb43a959606ba36982b065c37ea6d&oe=5AE574FC)



ஓம்ஜெய்சாய்ராம்!

அல்லா மாலிக்!

பாபா அடிக்கடி சொல்வார்: "'சிற்றெறும்பின் காலில் கட்டியிருக்கிற மணியின்
ஓசையைக் கூட என்னால் கேட்கமுடியும். நீ என்ன செய்தாலும் அதை
உடனே நான் பார்த்துவிடுவேன். உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை
சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நானே உடனிருந்து
கவனித்துக் கொள்வேன்!" என்பார்.

நாம் செய்கிற அனைத்தையும் பாபா பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற
உண்மை தெரிந்துவிட்டால், நாம் படுகிற துன்பத்தைப் பற்றியோ, எதிர்பார்க்கிற
விஷயத்தைப் பற்றியோ கவலை படமாட்டோம்.

அனைத்தையும் அவர் கண்கள் பார்க்க, அவரால் நடைபெறுகிறது என்பதை
தெரிந்து அமைதியாக இருப்போம். அமைதியாக - பொறுமையாக அனைத்தையும்
கவனியுங்கள். பாபா உங்களை கவனித்து வருகிறார்

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on January 28, 2018, 10:18:36 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/26992336_1788386674545218_5873550204706267944_n.jpg?oh=22d363593395a73c5579668469e4900c&oe=5ADBE7AB)

ஓம்ஜெய்சாய்ராம்!

விளக்கில் தீபம் ஏற்று என்று நான் உன்னிடம் சொல்ல காரணம்,
நீ ஏற்றுவதாய் நினைக்கும் விளக்கு நான் உன் சாய்தேவா
உனக்காக ஏற்றுவது,அதற்கு ஊற்றப்படும் எண்ணெய் என்பது
உன் கண்களுக்கு தான் ,ஆனால் என்னை பொறுத்த வரையில்
அது உன் கர்மாக்களால் நீ கண்ணீர் விட்ட துளிகள் அதை திரி
என்ற கர்மாக்கள் கொண்ட ஆயுதத்தால் நனைத்து நெருப்பால்
அதை பொருத்தி உன் கண்களுக்கு ஔி தரும் நேர்மறையாய்
உன் எண்ணங்களை அதில் இருந்து தந்து உன்னை சூரியன்
சூழ பிரகாசமாய் ஜொலிக்க வைக்கவே இந்த விளக்கு உனக்கான
விளக்கு உன் தாயாய் தந்தை உனக்கான நான் தரும் ஔி !

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 06, 2018, 01:15:39 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/27654442_1975300412719848_2878136535551999898_n.jpg?oh=9c3c47d4e0bb90830c282c163b273654&oe=5B22D973)

ஓம்ஜெய்சாய்ராம்!

கொட்டிக்கிடக்கும் எனது பொக்கிஷங்களுக்கு உன்னை கூட்டிச்
செல்ல நினைக்கிறேன் நீயோ உலக பொருட்களுக்காகவே
என்னை நாடிக் கொண்டிருக்கிறாய். நானும் உன் வேண்டுதல்
அனைத்தையும் உனக்கு வழங்கி கொண்டிருக்கிறேன் ஏன் தெரியுமா
நீ எல்லாவற்றிலும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக தான்.
உன்னிடத்தில் எனக்கு ஒரு சிறு குறை உண்டு. அதை நீ சரி
படுத்திக்கொள்வாயா?

உனது சாயி பக்தி என்னையும் பிறரையும் வசியபடுத்துவது போலவே,
உன்னுடைய மனதுக்குள் யாரும் தெரியாது என ஒளித்து வைத்திருக்கிறாயே
கபடம், சுயநலம் போன்ற குணங்களை! அது என்னை வருத்தபட வைக்கிறது.
இதை நான் அறிய முடியாது என நினைக்கிறாயா?

நான் பற்றற்றவனாக இருந்தும் எனது சிந்தனைகள் செயல்கள் அனைத்தும்
உங்களை பற்றியே இருக்கவில்லையா? உங்களை கடைத்தேற்றுவதாக
சங்கல்பம் செய்துகொண்டு நான் உங்கள் கூடவே இருக்கவில்லையா?
என் பிள்ளைகளின் இதயக் குமுறலை கேட்க சகிக்காமல் அவர்களுக்காக
நான் இரங்கி இரங்கி ஏழையாகவில்லையா? நீ முற்றிலும் என்னை போலாக
வேண்டாம் ஆனால் எனது அடிச்சுவட்டையாவது பின்பற்றலாம் அல்லவா
அதற்காகதானே நான் உன்னிடம் வலிய வருகிறேன்.

உன்னிடம் இருப்பதை, உனக்கென இருப்பதில் கொஞ்சம் தானம் செய், நீதியை
போதனை செய், உன்னிடம் இருக்கும் சிறு சிறு குறைகளை களைந்துவிடு.
அப்போது என் பேரருள் எந்த தங்கு தடையும் இல்லாமல் உன்னை வந்தடையும்......... . !

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 08, 2018, 06:50:36 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/27540388_1975904895992733_1267159664202775343_n.jpg?oh=b43676fb09a2e666d31f83ba911b7f40&oe=5B1AF148)

ஓம்ஜெய்சாய்ராம்!

அன்பு குழந்தையே.. வாழ்க்கையில் உள்ள அனைத்திற்கும் இரு வழிகள்
இருக்கும் அப்படி இருக்கையில் உன் பிரச்சினைக்கான காரணங்களும்
அது வந்த வழியையும் நான் அறிவேன். வந்த பிரச்சினை என்றும் நிலைக்க
போவது இல்லை. உன்னிடத்தில் அப்படி இருக்கையில் நிலையில்லா இருக்கும்
விஷயத்திற்கு ஏன் உன் பொக்கிஷமான நேரத்தை தொலைத்துக் கொண்டு
இருக்கிறாய். அவைகள் வந்த வழியிலே செல்ல போகிறது ஆனால் அவைகள்
உன் மனதில் ஏற்படுத்திய பக்குவம் அனுபவம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்
என்ற பாடம் என எல்லா நல்ல விஷயங்களையும் உனக்கு புகட்டி உள்ளது.
ஒரு குழந்தை எழுந்து நடக்க பயிலும் போது ஆயிரம் முறை கீழே விழும்
ஆனால் கடைசியில் தான் தன் காலை ஊண்றி நடக்கும்.

அவற்றை போலவே தான் நீ கீழே விழலாம் ஆனால் அது எழுந்து நிற்பதற்கு
என்பதை புரிந்துக் கொள். இந்த துவாராகமாயீ தாய் தேகத்திலும் குருதியிலும்
இருந்து பிறந்த என் உயிரே நீ தான் என் பிள்ளையே. நீ உன்னில் பார்க்கும்
அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். என் பரிபூரண
அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ . நீஎல்லா செல்வ
வளங்களைப் பெற்று சீரும் சிறப்புமாய் நல்ல பெயருடன் நிம்மதியான
மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்.

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 20, 2018, 04:30:11 AM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/27973627_1983125238604032_3028376621425090188_n.jpg?oh=df580000d474b19176710969f5a5dd5c&oe=5B12E98B)

ஓம் ஜெய் சாய்ராம்!

அன்பு குழந்தையே.... உன் மனம் எப்படி என்பதையும் உன் சூழ்நிலைகள்
அதை எப்படி திசை மாற்றி உன்னை சித்தரிக்கிறது என்பதையும் நான் அறிவேன்.
உன் மனமானது காயப்பட்டு ரணமாகி உள்ளது. உனக்கான பாதுகாப்பாய் உன்னையும்
உன் குடும்பத்தையும் என் உயிராய் நான் சுமக்கிறேன். பின்பு எப்படி உங்களை
நான் நிற்கதியாய் தவிக்கவிடுவேன். உன் வாழ்க்கையில் நீ கடந்து வந்த பாதையை
சற்று யோசித்து பார். வித்தியாசம் நிறைய இருக்கின்றன என்பதை நீ புரிந்து கொண்டாயா.
ஒரு பூ பூக்க அது மொட்டாய் இருக்கும் போது அது பூவாய் மலர அது எதிர்கொள்ளும்
விஷயங்கள் என்ன என்பதை நீ அறிவாயா. அதுவும் உயிருள்ள ஒரு ஜீவன் தான்.
ஆனால் அதுக்கான நேரம் இவ்வுலகில் என்பது ஒரு நாள் தான். அது பூவாய் பூக்கும்
அற்புதத்தை யாரும் கண்டதில்லை. அப்படி ஒரு நாள் ஆயுள் கொண்ட அந்த மொட்டு
பூவாய் பூக்க அது சந்திக்கும் விஷயங்கள் அதிகமான சூரிய வெளிச்சம,் அதிகமான
மழை ,பனி. சில நேரம் அதற்கு சூரிய வெளிச்சமும் தண்ணீரும் இல்லாமல் கூட
போகலாம். ஆனால் இவை எல்லாம் அதற்கு சவாலான விஷயம் தான் அதை தாண்டி
அது பூக்கிறது. இப்படி ஒரு நாள் ஆயுளாய் கொண்ட பூ இவ்வளவு தைரியமாய்
செயல்படுகிறது என்றால் உன்னால் வாழ்க்கையில் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும்
கடந்து அதில் உன்னால் வெற்றி என்ற மலராய் பூக்க முடியும். உனக்கு துணையாய்
நான் இருப்பேன் என் கருவில் இருக்கும் என் உயிரில் கலந்த உயிர் குழந்தை
ஒரு தாய் இப்படி தன் உயிரின் ரூபமாய் அந்த குழந்தையை உணர்வார்களோ
அதை போலவே இந்த துவாரகமாயீ தாயும், உன் சாய்தேவாவின் இதய துடிப்பே நீ தான்.
உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணையாய் அரவணைப்பேன்

இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்
Title: Re: ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்
Post by: ShAivI on February 21, 2018, 11:35:11 PM
ஓம் சாய் ராம்!!!

ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்கள்

(https://scontent-bom1-1.xx.fbcdn.net/v/t1.0-9/27973172_1697561750320141_3504471606598679691_n.jpg?oh=f7f70b0f03f5b3a96c1c499f2ad74c8d&oe=5B03825D)

ஓம் ஜெய் சாய்ராம்!

அன்பு குழந்தையே....

நீ எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க பழகிகொள் எதற்காகவும் கவலைபடாதே.

எதுவும் இல்லை என்றோ, என்ன நடக்குமோ, என்ன பேசுவார்களோ,
என்னிடம் இல்லையே, இப்படி சொல்வதை தவிர்த்து விடு
என்னிடம் ஒப்படைத்து விடு. உனது அனைத்து பாரத்தையும் நான்
தாங்கிக் கொள்கிறேன்.

எனது கண்மணிகள் ஒருநாளும் கலங்க கூடாது அப்பா நான் இருக்கிறேன்
எதற்காக கவலை படுகிறாய்.

எதற்கும் அஞ்சாதே எதுவும் நடக்காது. எவரையும் நெருங்க விடமாட்டேன்.

உனது சுவாசத்தை கூட எனது அனுமதியின்றி எவரும் சுவாசிக்க முடியாது.
எவரும் உன்னை தவறாககூட பேசவிடமாட்டேன்.

நீ தேவை இல்லாமல் பயப்படுகிறாய். உனக்கு தேவைபடும் அனைத்தும்
உன்னை வந்து சேரும்.

இருப்பதை வைத்து சிந்தித்து வாழகற்றுக் கொள் அனுசரித்து போ அதில்
ஒன்றும் தவறில்லை.

நாளை உனது தலைமுறை செம்மையாகும்.

அவசரபடாமல் இரு. அனைத்தும் உன்னை தேடி வந்து சேரும் காலம் நேரம் .

எதிரிகள் இல்லை உனக்கு. இருந்தாலும் ஓடி ஒழிந்து விடுவார்கள்.

விரைவில் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்பட்டு கண்களில் நீர் வழிய எனது
வருகைக்காக காத்திருப்பாய்.

எனது புன்னகைக்காக காத்திருப்பாய். எனது முகத்தில் ஏற்படும் புன்னகையை
காண்பதே ஒருவிதமான அதிர்ச்சி.

எவருக்கும் அந்த பாக்கியம் எளிதில் கிடைக்காது. இன்றும் எனது அசைவிற்க்காக
அனைத்து ஜிவராசிகளும் காத்துக்கொண்டு இருக்கிறது
கவலைபடாதே அப்பா நான் இருக்கிறேன்.


இப்படிக்கு

உன் சாய்அப்பா!!!

ஓம் ஜெய் சாய் ராம்