Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: Shri Shirdi Saibaba Afternoon Aarthi With Tamil Meaning Part 2  (Read 4296 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

  • Member
  • Posts: 38
  • Blessings 0
பகல் ஆரத்தி
மாத்யாந்ஹ ஆர்த்தி - பகுதி 2

புஷ்பாஞ்ஜலீ - மந்த்ர புஷ்பம்.



ஹரி ஓம். யக்ஞேன் யக்ஞமஜயம்ந்த தேவாஸ்தானி தர்மாணி ப்ரதமாந்யாஸன். தே ஹ நாக்கம் மஹிமானஹ, ஸச்சந்த யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவாஹ.

ஹரி ஓம். தேவர்கள் ஹோம தன்னுருவத்திற்க்கு (ஸ்ரீ  விஷ்ணு) ஹோமம் செய்து புகழ் பாடினார். இந்த சமயச்சடங்கு  மதப்பற்று செயல்களில் எல்லாம் முதன்மையானது. இந்த செயல்களின் சக்தியை எவறொறுவர் அறிந்து கொண்டனரோ அவர்களுக்கு பரலோகத்தில் மேம்பட்ட தகுதி கிட்டியது, அங்கு முன்கால ரிஷிகள் - முனிவர்கள் தேவரகளை போல வாழ்கின்றனர்.

ஓம் ராஜாதிராஜ ப்ரஸயஹஸாஹினே நமோ வயம் வைஷ்ரவனாய க்ருமர்ஹே. ஸ மே காமான்காமகாமாய மஹ்யம் காமேஷ்வரோ வைஷ்ரவணே ததாது குபேராய வைஷ்ரவணாய மராஜாய நமஹா.

ஓம் நாங்கள் ராஜாக்களுக்கு ராஜா, வைஷ்ரவனுக்கு வணக்கம் செய்வோம், அவருக்கு ஆதரவு கொடுக்க மதிக்க வேண்டியவர். அவர் காமேஷ்வர் விரும்புவதையெல்லாம் பூர்த்தி செய்யும் சிவன், வைஷ்ரவன் என் விருப்பத்தை பூர்த்தி செய்வாரே. அப்படிப்பட்ட குபேர வைஷ்ரவன் மஹாராஜனுக்கு வணக்கம் செய்கின்றேன்.

ஓம் ஸ்வஸ்தி. ஸாம்ராஜ்யம் பொய்ஜ்யம் ஸ்வாராஜ்யம் வைராஜ்யம் பாரமேஷ்டயம் ராஜயம். மஹாராஜ்யமாதிபத்யமயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்ஸாவர்பொய்மஹா. ஸர்வாயுஷ்ய ஆந்தாதாபராதர்து ப்ருத்திவ்யை ஸமுத்ரபயர்தாயா ராளிதி.

ஓம் மங்களமாகட்டும். அவனுக்கு பேரரசு, மாட்சிமை,  சுயாட்சி, பற்றற்ற தன்மை, பரம்பொருள், ராஜ்யம், மஹாராஜ்யம், மற்றும் முழு ஆதிக்கம் கிடைக்க, அவன் இந்த முழு சிருஷ்டியில் நிலவி மற்றும் வாழ்க்கை வரைக்கும் பூமியின் மாஹாராஜா இருக்க வேண்டும், வாழ்க்கை மற்றும் நிறைவு கிடைத்து இந்த பூமியின், அவனின் கடலோரம் வரை தனியரசானாக இருக்க வேண்டும்.

தத்ப்யேஷ் ஸ்லோகோபி கீதோ மருதஹா பரிவேஷ்டாரோ பருத்தஸ்யாவஸந்குஹே ஆவிஷிதஸ்ய காமப்ரேர்விஷ்வேதேவாஹா ஸபாஸத இதி.


அதன் பிறகும் இந்த ஸ்லோகம் பாடுவார்கள். எநத உயிரிலெல்லாம் வாசம் கொள்ள எல்லா வாயுக்கள் பணியாளர்க இருந்தார்களோ, அவர் ஆவிக்ஷிதின் பிள்ளை, அவர் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றியதால், அவர் வாசத்தில் எல்லா தேவர்களும் அவையோர்கள்.

ஸ்ரீ நாராயண வாஸுதேவ ஸச்சிதாநந்த சத்குரு சாயிநாத் மஹாராஜ் கீ ஜெய்.



நமஸ்காராஷ்டக் -  ஸ்ரீ மோஹினீராஜ்


அநந்தா துலா தே கஸே ரே ஸ்தவாவே.
அநந்தா துலா தே கஸே ரே நமாவே.
அநந்தா முகாந்சா ஷிணே ஷேஷ் காதாந்.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

நீங்களோ முடிவில்லாதவர், நான் உங்கள் துதி எப்படி பாடுவேன்? நீங்களோ முடிவில்லாதவர், நான் உங்களுக்கு எப்படி வணங்குவேன்? ஆயிரம் தலை கொண்ட சேஷநாகமும் உங்கள் மஹிமையை பாடி கொண்டே களைத்து விடுகின்றனர். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

ஸ்மராவே மநீ த்வத்பதா நித்ய பாவே.
உராவே தரீ பக்திசாடீ ஸ்வபாவே.
தராவே ஜகா தாரூநீ மாயதாதா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

என் மனம் எப்போதும் உங்கள் பாத துதி செய்ய வேண்டும், இருந்தும் என் இயல்பில் சிறிது மிச்சமிருக்க செய்தால் அது உங்கள பக்திக்கு மட்டுமே இருக்க. நீங்கள் தான் எங்கள் பெற்றோரையும் சேர்த்து எங்களையும் மற்றும் இந்த உலகையும் காப்பாற்ற வேண்டும். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

வசே ஜோ ஸதா தாவயா ஸந்லீலா.
திசே அக்ஞ லோகாம்பரீ ஜோ ஜனாந்லா.
பரீ அந்தரீ க்ஞான் கைவல்யதாதா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

எந்தவொருவன் இந்த உலகிலுள்ளவர்க்கு துறவிகளின் வியப்பக்குரிய செயல்களை காட்ட வசிக்கின்றனர். அறிவாற்றல்லிலாதவர்களை சாதாரண மனிதர்கள் நடத்தை தெரிகிறது, இருந்தும் உள்ளிருந்து அவர்கள் ஞானம் மற்றும் முழுமையான தூய்மையை தருபவர்கள். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

பரா லாதலா ஜன்ம ஹா மானவாசா.
நரா ஸாதர்கா ஸாதநீபூத ஸாசா.
தரூ சாயிப்ரேமே களாயா அஹம்தா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

எங்களுக்கு இந்த மனித பிறப்பு கிடைத்தது பெரும் அதிர்ஷ்டமே. மனிதன் மட்டும் தான் முக்தி கிடைக்க வழிபாடு செய்வார். நாங்கள் சாயி பாசத்தை உறுதியாக எங்கள் மனதில் வைத்து கர்வத்தை நம்மிடமிருந்து போக்கிடுவோம். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

தராவே கரீ ஸான் அல்பக்ஞ பாலா.
கராவே ஆம்ஹாந் தன்ய சும்போநீ காலா.
முகீ கால ப்ரேமே கரா க்ராஸ ஆதா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

ஹே தேவா, இந்த அப்பாவி பிள்ளைகளை கை கொடுத்து எங்களை பாதுகாக்க வேண்டும். எங்கள் கன்னத்தில் முத்தமிட்டு எம்மை பாக்கியசாலி ஆக்கிடுவீர். எங்கள் வாயில் உங்கள் அன்பை மட்டும் ஊட்டிடுவீர். ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

ஸுராதீக ஜ்யாந்சயா பதா வந்திதாதீ.
ஸுகாதீக ஜ்யாதே ஸமாநத்வ தேதீ.
ப்ரயாகாதி தீர்தேபதீ நம்ர ஹோதா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

தேவர்கள் முனிவர்கள் முதல் பாதகளை வணங்குகின்றனர் மற்றும் வியாசர் மகன் முதல் உமக்கு உரிய மரியாதை செலுத்தினர். ப்ரயாக் புனிதத்தலம் முதல் உங்கள் பாதகளை பணிகின்றன. ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

துஜ்யா ஜ்யா பதா பாஹதா கோபபாலீ.
ஸதா ரங்கலீ சித்ஸ்வரூபீ மிளாலீ.
கரீ ராஸக்ரீடா ஸவே க்ருஷ்ணநாதா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

கோபிகைகள் உங்கள் பாதங்களை கண்டதும் மயங்கி தன் மனத்திரையில் உருவத்துடன் மூழ்கிவிடுகின்றனர். பறகு அனைவரும் க்ருஷ்ணநாதுடன் விளையாடுகின்றனர். அவ்வாறே ஹே ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.

துலா மாகதோ மாகணே ஏக் தாவே.
கரா ஜோடிதோ தீன் அத்யந்த பாவே.
பாவீ மோஹநிராஜ ஹா தாரீ ஆதா.
நமஸ்கார் ஷாஷ்டாங் ஸ்ரீ சாயிநாதா.

நான் மிக அதிகமான மத பாவத்தில் கை குவித்து உங்களிடம் மட்டும் ஒன்றேஒன்று வேண்டி கொள்கிறேன் மோஹினீராஜிற்க்கு இப்போது இந்த உலகத்திலிருந்து விடுதலை தருவீர். ஸ்ரீ சாயிநாத், உங்களுக்கு ஷாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்.


ஏஸா  யேயீ பா - (பாரம்பரியம்)


ஏஸா யேயீ பா. சாயீ திகம்பரா. அக்ஷ்யரூப அவதாரா. ஸர்வஹி வ்யாபக து. ஷ்ருதிஸாகரா. அனுஸயா அத்ரிகுமாரா. ஏஸா யேயீ பா……….

ஹே பாபா, சாயீ திகம்பரா. நாங்கள் உமது தெய்வீக, எங்கும் பரவிய, கேட்ட விஷயங்களின் தத்துவத்தை ஆத்ரி - அனுசுயா திருமகனுக்கு தத்த தோற்றத்தில் நான் வரவேற்க்கிரேன். ஹே பாபா,

காஷீ ஸ்நான் ஜப், ப்ரதிதிவஷீ. கோல்ஹாபுர் பிக்ஷேஸீ. நிர்மல் நதி துங்கா, ஜல் ப்ராஷீ. நித்ரா மாஹூர தேஷீ. ஏஸா பேயீ பா…….

காசியின் புனித நீரில் தினமும் நீராடி ஜபம் செய்பவர்கள், கோல்ஹாபூரம் சென்று பிக்க்ஷை எடுத்து, துங்கபத்ரா நதி நீரை குடித்து மாஹூர் (விஷ) புனிதலத்தில் ஓய்வேடுக்கின்றனர். ஹே பாபா சாயி திகம்பரா, நீங்கள் இந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.

ஜோளீ லோம்பதஸே வாம கரீ. த்ரிஷூல் - டமரூதாரீ. பக்தன் வரத ஸதா சுகாரீ. தேஷீல முக்தீ சாரீ. ஏஸா பேயீ பா …..

இடது தோளில் பிக்க்ஷை துணிப்பை, த்ரிஷூலம் மற்றும் உடுக்கை தோற்றத்தில் பக்தர்களுக்கு எப்போதும் சுகத்தை அருளிக்கொண்டே, அவர்களுக்கு நான்கு வகை (ஸாரூப், ஸாமீப்ய, ஸாநித்ய, ஸாயூஜ்ய) மூக்தியின் அனுபவத்தை கொடுக்கும், ஹே பாபா சாயீ திகம்பரா, நீங்கள் அது போன்ற தோற்றதில் வாருங்கள். ஹே பாபா.

பாயீ பாதுகா ஜப்மாலா கமண்டலு ம்ருகாசாயா தாரண் கரிஷீ பா. நாகஜடா முகுட் ஸோபதோ மாதா. ஏஸா பேயீ பா…….

பாதத்தில் பாதுகை அணிந்து, கையில் ஜபமாலை மற்றும் கமணடலத்துடன் மிருக தோற்றத்தில், தலையில் நாக உருவ ஜடை கிரீடத்தில் எழில்மிகு தோற்றத்துடன், ஹே பாபா, சாயீ திகம்பரா, நீங்கள் அந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.

தத்பர துஜ்யா யா ஜே த்யானீ. அக்க்ஷய த்யாம்சே ஸதநீ. லக்ஷ்மி வாஸ் கரீ தினரஜனீ. ரக்க்ஷிஸி சங்கட் வாருநி. ஏஸா பேயீ பா ……

அவர்கள் எந்தவித விழிப்புணர்வோடு உங்கள் தோற்றத்தை தியானிக்கின்ரின் வீட்டில் எப்போதும் லக்ஷ்மி வசிப்பாள், மற்றும் அவரது ஆனைத்து இன்னலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். ஹே பாபா, சாயீ திகம்பரா, நீங்கள் அந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.

யா பரீ த்யான் துஜே குருராயா த்ரிஷ்ய கரீ நயனான் யா. பூர்ணானந்தஸுகே ஹி காயா. லாவிஸி ஹரிகுண் காயா. ஏஸா பேயீ பா ……

என் தேகத்தில் நிறைந்த ஆனந்தமான (அடர்த்தியான மற்றும் நுட்பமான) சுகத்தின் அனுபவம்  நிறைகிறது மற்றும் ஹரி புகழ் பாட தூண்டுகிறது. ஹே பாபா, சாயீ திகம்பரா, நீங்கள் அந்த தோற்றத்தில் வாருங்கள். ஹே பாபா.


ஸ்ரீ சாயிநாத் மஹீம்ந ஸ்தோத்ரம்
ஸ்ரீ உபாஸனீ மஹராஜ்.


சதா ஸத்ஸ்வரூப் சிதானந்தகம்தம், ஜகத்ஸம்பவஸ்தான் ஸம்ஹாரஹேதுமம். ஸ்பக்தேச்சயா மாநுஷம் தர்ஸயந்தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

எப்போதும் சத்ய இயல்பான, சித்த மற்றும் ஆனந்தத்தில், இந்த உலகத்தின் பிறப்பு, போஷிப்பு மற்றும் அழிவின் காரணம். அவர் தன்னுடைய பக்தர்களின் துயரக்கூக்குரல் கேட்டு மனித தோற்றம் எடுத்தவர், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.

பவத்வாம்த்வித்வம்ஸ மார்தன்டமீடயம், மநோவாதீதம் முனீத்யார்னகம்யம். ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வம்,  நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

உலகத்தின் அறியாமை இருளை போக்கும் சூரியனுக்கு இணையானவர், மனம் வாக்குக்கும் மேலான மற்றும் முனிவர்களின் தியானத்தின் குறிக்கோளாக இருப்பவர். இந்த உலகம் முழுவதும் நிறைந்த புனித நற்குணங்களுடய முழுமையானவரே, அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.

பவாம்போதிமார்கதிர்தாநாம் ஜனாநாம், ஸ்வபாதாஷிதாநாம் ஸ்வபக்திபியாணாம். சமுத்தாரணாத்ரம் கலௌ சம்பவம்தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

இந்த உலக சம்பந்தப்பட்ட மோகக்கடலில் மூழ்கி வேதனைப்படுவோறின், அவர்களுக்கு அடைக்கலம் புகலிட மற்றும் அவரில் பக்தி மேல் அன்பு அதிகமோ, அவர்களை காப்பாற்ற, இந்த கலியுகத்தில் வந்த, அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.

ஸதா நிபம்வ்ரூக்ஷ்ஸ்ய  முலாதிவாஸாத்சுதாஸ்ரவிணம் திக்தமப்யாப்ரியம் தம். தரூந் கல்பவிருக்ஷாதிக் ஸாதயந்தம்,நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

அவரின் வேப்பமரம் கீழ் உட்கார்தால், அந்த வேப்ப ரசம் இயற்கையினால் கசந்து மற்றும் வெறுப்புண்டாக்கும் சுவைத்தாலும் அமிர்தம் போல் இனிப்பானது. எந்த வேப்பமரத்தை கல்பவிருக்ஷதைவிட அதிக மஹிமை கிடைக்க செய்த, அந்த ஈஷ்வரன், சத்குரு சாயீ நாதா உம்மை நான் வணங்குகிறேன்.

ஸதா கல்பவிருக்ஷ்ஸ்ய தருயாதிமுலே பவேத்பாவபுத்யா ஸபர்யாதிஸேவாம். ந்ருணாம் கூவர்தாம் பக்திமுக்திப்ரதம் தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

எப்போதும் (கல்பமவிருக்ஷ்) வேப்பமரம் கழ் அமர்திருப்பவர், அங்கு எல்லோரும் அவரிடம் பக்திபாவத்துடன் வருகின்றனர், சேவை செய்கின்றனர். அவர்களுக்கு சுகமும் முக்தியும் அருளும் கொடையாளர், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.

அநெகாஷ்ருதாதக்யர்லீலாவிலாஸைஹ சமாவிஷ்குருதேஸான்பாஸ்வத்ப்ரபாவம்.
அஹம்பாவஹீநம் ப்ரசன்னாத்மபாவம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

வியப்புக்குரிய செயல்கள் பல, அவை பற்றி கேட்ததுமில்லை அவை பற்றி நினைத்துமில்லை, அப்படிப்பட்ட தெய்வீக திறன் பரந்தது. எவர் கர்வத்தை கைவிட்டு மற்றும் ஆனந்தத்தில் மூழ்கி மன நிறைவோடு உள்ளவர், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.

சந்தாம் விஷ்ராமாராமமேவபிராமம் ஸதா ஸஜ்ஜைனஹா ஸன்ஸுதுதம் ஸந்னமதிஹா, ஜந்மோததம், பக்தபத்ரபதம் தம், நாமாமீஷ்வரம் சத்குரு சாயீநாதம்.

எப்போதும் கனவாகளுக்கு அமைதியான அடைக்கலம் தரும் மனங்கவர்தவர். நல்ல மற்றும் உன்மையான பணிவுடன் அவரின் துதி பாடுபவர், அவர்களுக்கு இன்பதை மற்றும் பக்தர்களுக்கு மங்களம் அருள்புரியும், அந்த ஈஷ்வரன்,சத்குரு சாயீ நாதா உமை நான் வணங்குகிறேன்.

ஸ்ரீ சாயிஷ க்ருபாநிதேக்கிலநுரணாம் ஸர்வார்த்தஸிதித்ப்ரத.
யூஷ்மத்பாதரஜஹா ப்ரபாவமதுலம் தாதாபிவக்தாஷமஹா.
ஸத்பக்த்யா ஷரணம் க்ருதாம்ஜலிபூடஹா ஸம்ப்ராபிதோஸ்வாமி ப்ரபோ. ஸ்ரீமத்ஸாயிபரேஷபாதகமலாந்நான்யச்சரண்யம் மம.

ஹே சாயி, நீங்கள் கருணையுள்ளவர், மக்களின் எல்லா
இலட்சியப்பயன்-கடமை, பயன், வருப்பம், மோ1க்ஷ்மனைத்திலும் முழுமைபெறச்செய்பவர். ப்ரம்மனும் உங்கள் பாத தூசியின் எல்லையற்ற திறனை சொல்ல முடியாதவர். ஹே ப்ரபு நான் கைகள் குவித்து எனை நானே உன்மையான பக்திபாவத்துடன் உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்ரேன். ஸ்ரீ மத் சாயிநாதா உன்தன் பாதகமலத்தை விட்டு வேறோரு புகலிடம் இல்லை.

சாயிருபதரராகவோத்தமம் பக்தகாமவிபூதத்ரமம் ப்ரபூம்.
மாயயோபஹதசித்தஷுத்தயே, சிந்தயாம்யமஹநிர்ஷம்பூதா.

மோகம் மயக்கத்தில் முழ்கியிருக்கும் என் மனம் மற்றும் புத்தியின் தூய்மையாக, நான் ஆனந்த நிலையில் இரவுபகல் எப்போதும் அந்த சாயி நாமத்தை ஜபிக்கிரேன், அந்த மிக சிறந்த தோற்றம் ஸ்ரீ ராமனதே மற்றும் பக்தர்களின் வேண்டுதலை முழுதாக நிறைவு செய்யும் கருணாநிதி.

ஸரத்ஸுதாமஷுப்ரதிமப்ரகாஷம் க்ருபாதபத்தரம் தவ சாயிநாத்.
த்வதீயபாதாப்ஜஸமாஷ்ரிதாநாம் ஸ்வச்சயயா. தாபமபாகரோது.

ஹே சாயிநாதா, உங்களின் கிருபாகர தோற்ற குடை நிழல் குளிர் கால சந்திரனின் இணையற்ற ப்ரகாஷத்தை போலாகும். ஆகையால் உங்கள் பாதத்தில் அண்டியிருப்பவர்களின் பலவித வெப்பத்தை தங்கள் குளிர்ந்த நிழலால் போக்கிடுவீர்.

உபாஸனாதைவதசாயிநாத, ஸ்தவைமர்யோபாஸநினா. ரமேந்மநோ மே தவ பாதயூக்மே, ப்ருகோ, யதாப்ஜே மகரந்தலுப்தஹா.

ஹே சாயிநாதா, நீர்தான் என் இஷ்ட தெய்வம், நான் வழிபட்டும் துதி பாடியும் வருகிறேன். ஒரு வண்டு தாமரையில் உள்ள தேனை விரும்பி வட்டமிடுவது போல, என் மனம் உங்கள் பாதகமலத்தை  சுற்றித் திறிகிறது

அநெகஜந்மாஜிர்தபாபஸம்ஷயோ, பவேத்தபவத்பாதஸரோஜதர்க்ஷ்னம். க்ஷமஸ்வ ஸர்வானபராதபுந்ஜகாந்ப்ரஸீத் சாயிஷ குரோ தயாநிதே.

என்னோ ஜன்மத்திலிருந்து சேர்ந்த என் அனைத்து பாவங்கள் உங்கள் பாதகமல தரிசனம் செய்தும் போய்விட செய்வீர். ஹே சாயீ, என் சத்குருவே, தயாநிதியே, என் அனைத்து தவறுகளை மன்னித்து, மகிழ்ச்சியுடன் என்மீது கருணை காட்டுவீர்.

ஸ்ரீ சாயிநாத் சரணாம்ருதபுதசித்தாஸ்தத்பாத ஸேவன்ரதாஹ்ஸததந் ச பக்த்யா.
ஸந்ஸாரஜன்யூதூரிதௌதவிநிகர்தாஸ்தே கைவல்யதாம் பரம் ஸமவாப்நுவந்தி.

ஸ்ரீ சாயிநாதினின் பாதாம்ருதத்தால் ஒருவரின் மனம் தூயமாய் மற்றும் பக்தி நெசத்துடன் எப்போதும் அவரை வழிபாட்டில் இருக்கிறாறோ, உலகத்தில் காணப்படும் பாவங்களிருந்து விலகி, முழு தூய்மையும் மற்றும் முழு முக்தியும் பெருவார்.

ஸ்தோத்ரமேதத்படேத்பக்த்யா யோ நரஸ்தன்மானாஹ ஸதா.
சத்குரு சாயிநாதஸ்ய க்ருபாபாத்ரம் பவேத் த்ருவமம்.

எவரோருவர் எப்போதும் இந்த ஸ்லோகத்தை பக்தியுடனும் மற்றும் மன ஆழ்ச்சியுடன் செல்கிறாறோ, அவர் சத்குரு சாயிநாதனின் உறுதியான க்ரிபை பெருவர்.

சாயிநாத் க்ருபாஸ்வர்துர்ஸத்பதகுஸுமாவலிஹ. ஷேரயஸே சமனஹ ஷுத்தை ப்ரேமஸுத்ரேண கும்பிதா.

ஸ்ரீ சாயிநாதனின் க்ருபாம்ருதரஸம் சேர்ந்த இந்த கமலதோற்ற பூமாலை பக்தர்களுக்கு நன்மைக்கு மற்றும் மன தூயமைக்காக ஆசையுடன் நூலால் கோர்த்தது.

கோவிந்தஸுரிபுத்ரேண காஸீநாதபிதாயினா. உபாஸநீத்யுபாக்யேன ஸ்ரீ சாயீ குருதேவர்பிதா.

காஷீநாத என்ற பெயரால் அறிமுகமான, ஸ்ரீ கோவிந்த ஸாஸ்த்ரியின் மகன், அவனின் புனை பெயர் உபாஸநீ, இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ சத்குரு சாயிக்கு சமர்ப்பிக்ரேன்.

இதி ஸ்ரீ சாயீநாத மஹிமந்ஸ்தோத்தரம் சம்பூர்ணம்.

இத்துடன் ஸ்ரீ சாயிநாத மஹிமா தோத்திரம் நிறைவுற்றது.


ப்ரார்த்தனா - ப்ராத்னை.


கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா
ஷரவணநயநஜம் வா மாநஸம் வாபராதம்.
விதிதமவிதிதம் வா ஸர்வமேதத்க்ஷமாஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ பரபோ சாயீநாத.

ஹே சாயீநாதா, இந்த கை கால்களின் கடமையினாலோ இல்லையேல் குரல் உடம்பினாலோ இல்லையேல் கேட்டதும் பார்ததினாலோ இல்லையேல் மனத்தாலோ, இல்லையேல் ஏதோவொரு பிழை தேரிந்தும் தேரியாமல் ஆனதோ, அவ்வனைத்தையும் மன்னித்து விடுங்கள். ஜய ஜய கருணாநிதியே ஸ்ரீ சாயிநாதப் பரபோ.

ஸ்ரீ ஸச்சிதாநந்த சத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்.
ௐ ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்ரம்ம சாயிநாத் மஹராஜ்.
ஸ்ரீ ஸச்சிதாநந்த சத்குரு சாயிநாத் மஹராஜ் கீ ஜெய்.
★★★★★★★★★★
                                         மாலை ஆரத்தி அடுத்த பதிவில்..

 


Facebook Comments