Join Sai Baba Announcement List


DOWNLOAD SAMARPAN - Nov 2018





Author Topic: Shri Shirdi Saibaba Satcharithram - Aarthi - Tamil  (Read 4224 times)

0 Members and 1 Guest are viewing this topic.

Offline trmadhavan

  • Member
  • Posts: 38
  • Blessings 0
Shri Shirdi Saibaba Satcharithram - Aarthi - Tamil
« on: October 19, 2018, 05:54:02 AM »
  • Publish
  • "ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா சத்சரித்திரம்"

    உன் ஷீர்டி வர ஆயத்தமானோம்
    மஹால்ஸாபதி சாயி உன்தன் நாமம் ஜபித்து. 1
    நீ எல்லையற்றவன் உன் கதை முடிவில்லாதது
    உன் கிருபையின்றி எங்களால் சொல்ல இயலாது.  2
    பக்தன் மஹால்ஸா உன் வருகையை கண்டதும்
    ஆனந்த்தில் வருக சாயி என்றழைத்நதும்.  3
    அந்த பெயர் உனக்கு நிலையானது என்னென்றும்
    வரமளிக்கும் திருநாமமானதே அனைவருக்கும்.  4
    கோதுமையை இயந்திரக்கல்லில் அரைக்கும் சாயி
    பாப செயலின் வினையிலிருந்து தப்ப இயலவில்லை.  5
    ஷீர்டி நகரம் மாவால் கட்டிவைத்தாய்
    புத்து நோய் பாதித்த பக்தனை காப்பாறினாய்.  6
    அற்புத புத்தியை கண்டோம் உன்னிடம் சாயிநாதா
    கிடைத்தான் உனக்கு ஹேமாபந்த நாம தாசன்.  7
    உன்மையில் உன் அருள் பெற்று கொண்டான்
    நிறைந்த "சாயி சத் சரித்திரம்" நீ முடித்து தந்தாய்.  8
    மதிப்பு வசிக்க வேண்டும் ஒவ்வொரு மனதினுள்ளே
    ஜொலிக்க வேண்டும் எழில் ஒவ்வொரு அழகினுள்ளே.  9
    அதிர்ஷ்டசாலிகளுக்கு உன் சரணடைய கிடைத்தது
    அவரை போல் வேறொருவர் இல்லை அதிக மகிழ்ச்சி அடைய.  10
    உன் கதையை இன்னோருவர் என்னவென்று சொல்வர்
    உனதானவர்யிடமும் உன்னை அடைந்தவரிடமும்.  11
    எந்த பக்தனுக்கு உன் மேல் நம்பிக்கை உள்ளதோ
    உன் அந்த தாசர்களின் தாசன் நான்.  12
    ஸ்ரீ ராம நவமி நன்னாளன்று
    சந்திரோஸ்சவம் நடத்தினாய் நீ நின்று.  13
    எந்தோரு மனதில் வசிக்கிறாயோ நீ சாயி நாதா
    எந்த அமங்களமும் அவர் அருகே நெருங்காமல் செய்தாய்.  14
    பாபா நீயோ கருணையின் இருப்பிடம்
    உலகின் கோரமான துக்கத்தை நீதான் அழிக்கவல்லவன்.  15
    உன் உறங்குதல் பார்கையில் சேஷசயனனை நினைவூட்டினாய்
    மனம்கவர் காட்சியளித்து எங்களை மகிழ்வித்தாய்.  16
    ஆயிரம் தோற்றத்தில் சாயி உருவமாக வந்தாய்
    எங்கு பார்ப்பினும் அங்கு நீ தென்பட்டாய்.  17
    எந்தவொரு இதயத்தில் உன் வாசம் உண்டோ
    அவரை எந்தவொரு துயரமும் வலியும் அனுகாது.  18
    இந்த பிறவி நன்றாய் அமய ஆசை எனது
    கிருபை கிடைத்தது நற்குணம் எழுது உனது. 19
    ஷீர்டி கிராமத்தின் நீ பாதுகாவலனானாய்
    வேப்பமரமடி உனது தங்குமிடமாக்கிக் கொண்டாய்.  20
    பக்தகோடி வணங்கும் தங்கமான இதயம் படைத்தவனே
    ஆவணியில் உன் நாமம் ஜபித்து வருவோம் தருவாய்  தரிசனம். 21
    காகாவின் பக்தியை கண்டரின்தாய்
    நீ விட்டல் உருவத்தில் அவனுக்கு காட்சியளித்தாய்.  22
    ராம கிருஷ்ணன் இருவரும் நீயே
    ஈசன் ஹநுமந்த தெய்வம் நீயே.  23
    தத்தாத்ரேய அவதாரம் நீயே
    பீர் பைகம்பர் ரேஹ்மான் நீயே.  24
    மூன்று நாணயங்கள் பரிசளித்தாய் பட்கேவிற்க்கு
    ஸ்வாமி சமர்த் என அவனை அன்புடன் அழைத்தாய் பெயரிட்டு.  25
    வேதங்களின் சாரமென்றாய் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை
    எடுத்துரைத்தாய் சாமாவிற்க்கு அதன் சிறப்பை.  26
    குரு சிஷ்யரிடையே நெருங்கிய சம்பந்த உதாரணத்தை
    கார்படே மனைவியின் சேவையை பக்தர்களுக்கு காடினாய்.  28
    நானக் உருவத்தில் நீ வந்தாய்
    உன்மையான வாணிபம் செய்து தந்தாய்.  29
    சாயி பாதமே பக்தர்களுக்கு அனைத்து புனிதத்தலங்கள்
    கண்டு வியப்படைந்த கணு கண்ணில் கண்ணீர் வழிந்தது.  30
    கோலி பாய் விட்டலைக்கண்டாள்
    ஷீர்டியே பண்டரிபரமென்றாள்.  31
    இருட்டில் இருக்கும் மனிதர்களுக்கு சாயி
    கண்ணுக்கு தெரியாது உன் பாதுகை சாயி.  32
    நீரை கொண்டு தீபம் ஏற்றினாய்
    அதை காண பக்தர்கள் கூட்டம் பெருகி வந்தது.  33
    உன்னிடத்தில் உயர்வு தாழ்வு நீசமென பேதமில்லை
    உனது அன்பினால் ஷீர்டி வாசிகளை ஒன்றாய் சேர்த்தாய்.  34
    குரு மகிமையை நீ தெளிவாக விளக்கினாய்
    நீயே சிஷ்யனாய் மாறி நியமங்களை சொன்னாய்.  35
    குரு சேவை செய்து நீ குபரனானாய்.
    மார்கன் நீ எங்கள் கவலைகளை மறந்திட செய்தாய்.  36
    ஹிந்து முஸ்லிம் எல்லோரையும் ஒன்று சேர்ந்து
    ராமநவமி உர்ஸ் நீ கொண்டாட செய்தாய்.  37
    சாயி சாயி என்று அன்புடன் உச்சரியுங்கள்
    ஜபம் தவம் வழிபாடு எல்லாம் மறந்திடுங்கள்.  38
    யாராயினும் உன்னிடம் சரணடைந்தால் தேவா
    உணவு செல்வம் துணி அவர் வாழ்நாளில் கிடைக்க செய்தாய்.  39
    சாயிராம் சாயிராம் எப்போழுது சொன்னாலும்
    ரோமங்கள் மகிழ்ச்சியுற்றது எங்களுடையது.  40
    சாயி தந்தாய் குஷ்டனுக்கு நல்லுடலை
    பாகோஜியையும் அன்புடன் ஏற்று கொண்டாய்.  41
    நீ மனித உருவத்தில் வந்தது
    சபரி தந்த எச்சில் பழம் தின்றவனாக.  42
    கிருஷ்ணன் அனைத்தும் அறிவான் கீதையை சொன்னவன்
    பரிப்பரஷ்னாவின் அர்த்தம் நாநாவுக்கு புரியவைத்தது நீதான்.  43
    நீதான் பீரன் ஒரு நல் பக்தனுக்கு
    சிரத்தை பெருகியுள்ளது உன் பக்தர்களிடம்.  44
    எவராலும் அறிய இயலவில்லை உன்தன் இந்த மாயை
    யார் இந்த கிருணை வேஷம் உனக்கு தந்தது.  45
    சிறுவனை காப்பாற்ற ஹே நியாயீ
    துணியில் கையை விட்டாய் சாயி.  46
    எவரிடமும் இல்லை உன்தன் சாமர்த்தியம்
    எல்லோருக்கும் கடவுள் ஒன்றே என நீ சொன்னது.  47
    பாசம் நிறைந்த உருவம் நீ பாபா
    ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு நிழல் கிடைக்கும்.  48
    பெரும் அதிர்ஷ்டம் மனித உடல் கிடைப்பது
    அதன் மேல் உனது பாசம் கிடைப்பது.  49
    எனை போல் யாரில்லை பெரும் அதிர்ஷ்டசாலி
    என்னில் வசிப்பது இந்த அன்பின் விடிவம் சாயி.  50
    உனக்கு நிகர் வெரொருவரில்லை தேவா
    ஏற்றுக்கொள்ளவும் இந்த அவசிய சேவை.  51
    எப்போழுது உன் அன்பு பெருகுமேன சாயி
    இந்த உலகக்கு தொன்றுவதில்லை.  52
    உன் அன்பினால் உணர்வை இழுந்தோம்
    விஷத்திற்க்கு சமம் இந்த வாழ்க்கை நீயின்றி சாயி.  53
    வீடுவீடாக நீ பிச்சாடனம் கெட்டாய்
    தானத்தின் அர்த்தத்தை செல்லி கொடுத்தாய்.  54
    உன்னை அலட்சியம் செய்தவரெல்லாம்
    யாத்திரையில் துயரத்தை எதிர் கொள்ள நேரிடும்.  55
    மன மகிழ்ச்சியுடன் சாயி காணிக்கை வரவைப்பாய்
    தனிமும் பக்தர்களுக்கு இனிப்பு சாப்பிடவைப்பாய்.  56
    சாயி சாயி தொடர்ந்து கூப்பிடுகையில்
    ஐந்து திருடர்கள் பயத்தில் திரும்பி ஒடினர்.  57
    போக்குவரத்திலிருந்து விடுவித்துவிடு
    உன்னை இதயத்தால் ஏற்றுக்கொண்ட பக்தர்களை.  58
    பிரளய காலத்தை நிறுத்தி வைத்து
    பக்தர்களின் பயம் போக்கி வைத்தாய்.  59
    ஷீர்டியில் வந்த சூறாவளியை
    ஒரே ஒரு கர்ஜனையில் சாந்தமடைய செய்தாய்.  60
    சாயி உன்தன் அற்புத செயல்களால்
    உண்ர்வுள்ள காரணத்தினால் ஆகாயமும் அநுகூலமானது.  61
    துணியின் அனல்கொழந்து பயங்கரமான போதில்
    நழுவி ஒட தாக்காமல் சாந்தமானது உடனே.  62
    உலகை கடைத்தேற்றவே தோன்றியவன் நீ சாயி
    துஷ்டர்கள் மீது அன்பு செலுத்தியவன் சாயி.  63
    பக்தன் எந்த உருவத்தில் உன்னை த்யானிப்பானோ
    அவருக்கு அதே உருவத்தில் நீ காட்சி தந்தாய்.  64
    அக்னிஹோத்ரி சாஸ்திரி வந்தான்
    அவன் தன் குரு தரிசனம் கண்டான்.  65
    எளிமையான தோற்றம் உனது
    பார்த்தவர்கள் நீ அவரலிலொருவராய் நினைக்க செய்தாய்.  66
    கனவில் தோன்றி க்ஷயரோகத்தை போக்கினாய்
    பீமா இதயத்தில் விஷத்தை சுழற்றினாய்.  67
    பீமாஜீ தினமும் ஊருக்கு வந்து கொண்டிருந்தான்
    சாயி நீ புது சத்ய விரதம் நடத்தினாய்.  68
    யாராயினும் ஷீர்டி க்ஷேத்திரத்தில் கால் வைத்தால்
    நடைபெறும் நடைபெற முடியாத காரியம்.  69
    சாயி உன் வாசலில் இருப்பது அல்லாஹ்
    எது நினைத்தாலும் நடைபெற செய்தாய் வல்லாஹ்.  70
    உன் பக்தியின் வகை தனிப்பட்டதை கண்டு
    இனிப்பாய் இனித்தது தேநீர்.  71
    உன்னிடம் வரும் அனைத்து பக்தர்களுக்கு
    பிரம்ம ஞானம் எளிதில் கிடைத்தது.  72
    போற்றுவதற்க்குரியவள் இந்த பூமாதா
    அவதாரம் இங்கு எடுத்தாய் சாயிநாதா.  73
    நீ வேலையாளுக்கு கூலி தந்தாய்
    அவன் புரிந்து கொண்டான் உன் வாசகம் நம்பிக்கை பொருமை.  74
    பஞ்ச தத்துவம் கொண்ட அவதாரமே
    உன்னை போல் வேறொருவரில்லை இப்பூவியிலே.  75
    உன்மேல் யாருக்கு நிலையான நிம்பிக்கை உள்ளதோ
    அவருக்கு கிடைத்தது தாங்கள் வரும்பியது.  76
    உன்னுடைய வார்த்தைகள் பெரும் சுகம் அளிக்கும்
    ஷ்ரவண் செய்தான் சிரத்தையுடன் தொண்டு உனக்கு.  77
    உன் பாத சேவை யார் செய்தாலும்
    அவருக்கு நம்பிக்கை பொருமை நீ தரும் பிரசாதம்.  78
    த்யானம் ஒரு ரகசியம் என்றாய் நீ
    பக்தி பாதையை அதி சுலபமாக்கினாய் நீ.  79
    உனக்கு கோடிக்கணக்கான வணக்கங்கள்
    திருப்தி அடைந்தேன் இனி ஓய்வு பெறுவேன்.  80
    பக்தியின் முறைபாட்டை சுலபமாக்கினாய்
    ஒன்பது பக்தி முறையை காணிக்கையாக தந்தாய்.  81
    கடனை தீர்க்கும்படி கெட்டு கொண்டது துவாரகாமாயீ
    பத்தர்களுக்காக துணி ஏற்றி தீர்தாய் சாயி.  82
    மனதில் சந்தேகம் புகா சந்தோஷம் புக செய்பவன்
    கேட்கும் காணிக்கை நம்பிக்கை பொருமை ஒன்று தான்.  83
    ஐந்தாவது சொல்லால் விஷத்தை இறக்கனாய்
    பாம்பு கடியிருந்து சாமாவை காபாற்றினாய்.  84
    பூஜைப் பொருளாக காரணம் காட்டி நீ அம்பு வரவைத்தாய்
    ஆனால் அஹிம்சயை நீ பாடமாக கற்பித்தாய்.  85
    சந்தேகங்களின் தீர்வு காரணம் காட்டி வருபவர்கள்
    உடனே தீர்வு பெற்று ஆனந்தம் அடைந்தார்கள்.  86
    காசி ராம் தன் தொழில் மூலம் சம்பாதித்த
    பாபா உன்முன் அனைத்து செல்வம் வைத்தான்.  87
    பாபா நீ ஒரு நாலணா நாணயம் மட்டுமே எடுத்துக்கொண்டு
    மற்றவை அனைத்து திருப்பி தன்தாய்.  88
    வேகு நாட்கள் கழிந்தன பிறகு
    காசி ராம் தனக்கு தானே யோசித்து.  89
    தன் சம்பாதியத்தை பிறரிடம் பகிர்ந்து
    அதில் ஒரு பாகம் உன்முன் செலுத்த.  90
    அனைத்தும் அறிந்த பாபா நீ அவனிடமிருந்து
    பெற்று கொண்டாய் அந்த மெய்யான சம்பாதியத்தை.  91
    ஏழையானான் கெடையாளி காசி
    சாமர்த்தியம் அவனுக்கு கைகூடவில்லை.  92
    விசால இதயம் கொண்டவன் நீ சாயி
    திரும்ப அவனிடத்தில் தன மழை பொழிந்தாய் சாயி.  93
    யார் கொடையாளி யார் பிச்சைக்காரன்
    அவன் அனைத்தும் இப்பொழுது புரிந்து கொண்டன்.  94
    சில நேரங்களில் உன் கோபத்தை காட்டுவாய்
    சில நேரங்களில் மகிழ்ச்சியுடன் வினோதங்கள் செய்வாய்.  95
    எல்லாம் அறிந்தவன் பரமசிவன் போல் நீ
    நடக்க வேண்டியதை தள்ளி வைத்து அனைத்து துரயங்களை போக்குபவன் நீ.  96
    கிருஷ்ண கோபியருடன் நீ விளையாடினாய்
    சிமகா தந்த பூரண் போளி நீ சாப்பிட்டாய்.  97
    கருணாசாகரன் நீ, நான் ஒரு துரதிர்ஷ்டசாலி
    சுயநலம் எனது தினமும் உனை போற்றி பாடுவது. 98
    தலையேழுத்தில் சுயநலமில்லை கைவிடாதே நாதா
    நாங்கள் பிச்சைக்காரர்கள் நீதான் எங்கள் தேவா. 99
    தூப் கிராமத்திலிருந்து சாந்து பாய் வந்தான்
    குதிரையை காணாமல் போனதால் குழப்பத்தில் இருந்தான்.  100
    உன்னருள் பெற்ற சாந்து பாய் குரல் கொடுத்தான்
    குதிரை கிடைத்தது இனி உன்தன் தாசன்.  101
    உன்தன் புகழ் பாடிய போதேல்லாம்
    கேட்காமலே கிடைக்க செய்தாய் எல்லாம்.  102
    நீ இரக்கமுள்ளவன் மற்றும் உதவுகின்றவன்
    செல்வம் அருளி மற்றும் துயரம் தீர்ப்பவன்.  103
    படித்தவனுக்கும் பாமரனுக்கும்
    சத்குரு சாய் பாதமே சரணம் சரணம்.  104
    நீங்கிவிடும் பக்தன் படும் வேதனை அனைத்தும்
    அவரவர் கையால் அனைவருக்கும் சேவை செய்வது நன்று .  105
    மேகனின் பிரமையை நீ போக்கினாய்
    சிவசங்கரனின் திரிசூலம் அவனிடமிருந்து நீ பெற்றாய்.  106
    பக்தர்களின் பாதுகாவலன் என்றும் நீதான்
    தினமும் நூலை திரித்து கொண்டிருப்பவன்.  107
    துணியின் நெருப்பு சாம்பலாக்கியது சிக்கல்களை
    அதில் எரிந்து போகட்டும் பாவங்கள் வேருடன்.  108
    யார் மனதில் திடமான நம்பிக்கை உன்மேல் இருப்பின்
    அவர் கைரேகையும் நீ மாற்றியவன்.  109
    ஜோதிடம் ஜாதகம் இரண்டையும் வீசி எறிய சொன்னாய்
    அனைத்து கிரஹங்களும் இயங்குவது உன்னால் தான்.  110
    எந்த இதயத்தில் உன்மேல் பற்று உள்ளதோ
    எந்த பரிட்சையாயினும் அவர் வெற்றியை அடைவாரே.  111
    சாயி பக்தி முக்தியின் வாசல்
    அறுத்தான் விரையடித்த மிருகத்தை தாரா.  112
    ஞானேஷ்வரி பாராயணம் செய்ய தேவு நினைத்தான்
    அது நன்று நடக்க அவன் கனவில் தோன்றி வாழ்த்தினாய்.  113
    எந்த இல்லத்தில் நீ மதிப்புடன் இருக்கின்றாயோ
    அங்கு ஆபத்து ஏதும் நேராது.  114
    சஞ்சீவினிக்கு சமம் உனது ஊதி
    இட்டு கொண்டால் தீர்க்கும் அனைத்து துயரங்களையும்.  115
    யராயினும் மிக அன்புடன் உனை அழைத்தால்
    காற்று வேகத்தில் நீ அவர் முன் நிற்பாய்.  116
    குதிரை வண்டியை ஜமாநேர் கொண்டு வந்தாய்
    நமது வினையின் உருவத்தை காடினாய்.  117
    மைனாவின் இல்லத்தில் தோன்றினாய் சாயி
    புதல்வன் கிடைக்க மைனா மகிழ்ச்சி அடைந்தாள் சாயி.  118
    சொர்க்கத்திலிருந்து வந்தாய் இந்த பூவியில் நீ
    அவலநிலை உள்ளவரை காப்பாற்ற அவதரித்தாய் நீ.  119
    சாமாவின் பயங்கர நோயை குணப்படுத்தினாய்
    நம்பிக்கையினால் தான் உயிர் பிழைத்தான்.  120
    கைகளை குவித்து சாமா சொன்னான் எனது சாயி
    உன்தன் விந்தைகளை புரிந்து கொள்ள இயலவில்லை.  121
    முதலில் எங்களை பயப்பட செய்தாய்
    உடனடியாக அந்த பயத்திலிருந்து முக்தி பெறவும் செய்தாய்.  122
    மும்பையிலிருந்து ஒரு பெண்மணி வந்தாள்
    பிரசவ வலியிலிருந்து முக்தி பெற்றாள்.  123
    சமாதியிலுருந்தே அனைத்தும் நடத்தி வருகிறாய்
    நித்திய சத்திய சரஞ்சீவி நல்லிதயங்களில் வாழ்கிறாய்.  124
    காகாஜிக்கு  தகவல் அனுப்பினாய்
    அவரின் வாக்களித்ததை நினைவூட்டினாய்.  125
    காசி யாத்திரை போவதை சாமா உன்னிடம் சொல்ல
    அவனை கயாவில் வரவேற்க காத்திருப்பேன் என்றாய்.  126
    தீக்ஷிதுலுவை உன்னிடம் வந்தது அதிசயமே
    அவன் நொண்டி தனத்தை நீக்கி நல் மனம் தந்தாய்.  127
    யார் எந்த உருவத்தில் நினைத்து காலடி படிமேல் வைப்பானோ
    அதே உருவத்தில் சாயியை காண்பானே அவன்.  128
    பாபா நீ எல்லா இடத்திலும் இருக்கின்றாய்
    மூல காரணமின்றி இரு பொருள்களின் மோதலின் விளைவை காண்பிதாய்.  129
    என் கைபிடித்து நீ லயித்தாய் போல்
    அனைவருக்கும் சுலபமாக்கிடுவாய் அவரவர் வாழ்க்கையை.  130
    எதை கேட்டாலும் அதையே கிடைக்க செய்தாய்
    அற்புதங்களை ஒவ்வொரு நிமிடமும் காட்டினாய்.  131
    ஏறாளமான பெயர் உள்ளது உனக்கு சாயி பாபா
    எங்களின் வாழ்க்கை கதையை கேளுங்கள் பாபா.  132
    பல்லக்கை பக்தர்கள் அலங்கரித்தனர்
    பாபாவின் பிள்ளை வீட்டாரின் திருமண ஊர்வலமாக்கினர்.  133
    சிலம் கையிலிருக்க தாமரை அலங்காரத்தில் நீ
    புல்லாங்குழல் வாசிக்கும் மோஹனன் வேடத்தில் நீ.  134
    பதினோரு வாக்குகளை பாதுகாக்க நீ
    சமாதி கோயிலை கட்டினாய் நீ.  135
    நீதான் இந்த பிரபஞ்ச நாயகன்
    துயரங்களை போக்கவல்லன் நீ எல்லாவித உதவியாளன்.  136
    எப்படி நிதி கடலில் கலக்கிறதோ
    அது போல் அறம் நெறி உன்னிடத்தில் கலந்திருக்கிறது.  137
    அனைத்து கிரந்தகளின் தத்துவங்களை நன்கு அறிந்தவன்
    ஞானேஷ்வரி பாராயணம் படித்தவன்.  138
    பைஜா பாய் நன்றி கடனை நிறைவேற்றினாய்
    தாத்யாவிக்கு நீ புது வாழ்வை தந்தாய்.  139
    உன்னில் இந்த பிரபஞ்சம் உள்ளது
    உனது இந்த மாயை அற்ப்புதமாக உள்ளது.  140
    நீ அர்புதமான சமாதி அமைத்து கொண்டாய் சாயி
    உன் போல் வெரோருவர் இல்லை என் சாயி.  141
    காப்பாற்று என்ற குரல் கேட்டதும்
    ஓடோடி சென்றாய் ஏழு கடல் தாண்டியும்.  142
    வீரன் சைநாபில் விரோதம் மூண்டததுமே
    பாம்பு தவளை தோன்றுமிடம் ஆனதே.  143
    காப்பாளன் அவன் தந்தையும் வந்தனர் சாயி
    இருவரின் அபிப்பிராயபேதத்தை பேக்கினாய் சாயி.  144
    உன்தன் மகிமை நீயே அறிவாய்
    அநுபவத்தின் மூலம் உண்மையை உணரவைத்தாய்.  145
    சத்யம் நித்யம் வுதியே என்றாய் நீ
    சகல நோயயை போக்கும் மருந்தேன நிருபித்தாய் நீ.  146
    உனை காண கண்களில் தாகம்
    கண்ட பின் குளிர்ந்தது மனம்.  147
    ஒன்ரே ஒன்று வேண்டுவது சாயி நாதா
    ஆசீர்வதிப்பாய் இந்த உறவு விடுபடாமல் இருக்க.  148
    உனது இந்த படைப்பு சஞ்ஜீவினிக்கு சமம்
    உயிர் தானம் கிடைக்கும் கேட்பீர் நல்மனதுடன்  149
    தினமும் உச்சரிக்க வேண்டும் இதயத்தில் வைத்திருப்பவனை
    மங்களம் நடக்கும் அமங்களம் நீங்கும்.  150
    கிருபை பொழியும் மஹான் சாயி
    அனைவரும் தினம் பூஜை செய்வோம் சாயி புகழ் பாடி.  151
    அனைத்து தேவர்களின் திருஉருவம் நீ
    தூய ஆத்மா ஞான ஜோதி நீ.  152
    உன் நாம ஸ்மரணமே துக்க சாகரத்தை கடக்க செய்யும்
    குணாதிசயங்களை சொன்னாலே அனைவரின் வாழ்க்கையில் மங்களம் நடக்கும்.  153
    உன் சத்சரித்ர பாராயணம் செய்தால் சகல ஸௌபாக்கியம் கிடைக்கும்
    குரு சரித்திர நாம ஜபம் ஆயுள் ஆரோக்கியமளிக்கும்.  154
    சாயி உன் அனைத்து பக்தர்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க அருள்வாய்
    இந்த திவ்ய சத்சரித்ர கீர்த்தனை சாயி சதகுருதேவா உனது பிரசாதம்.  155
    ஓம் அனந்த கோடி பிரம்மாண்டமான நாயகா ராஜாதிராஜா
    யோகிராஜ் பரபிரம்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாதா மஹராஜனே போற்றி.
    இத்துடன் ஸ்ரீ சாயிநாதா கீர்த்தனை சம்பூர்ணம்.

     


    Facebook Comments